Thursday, 30 April 2015
HISTORIC PARLIAMENT MARCH ON 28.04.2015 AT NEW DELHI BY ALL CENTRAL GOVT. EMPLOYEES ORGANISATIONS UNDER NC JCM
தொழிற் சங்க வரலாற்றில் ஒரு மைல் கல் !
50000 ஊழியர்களுக்குமேல் கலந்துகொண்ட அனைத்து மத்திய அரசு ஊழியர்களின் பாராளுமன்றம் நோக்கிய பேரணி !
படை பெருத்ததோ பார் சிறுத்ததோ என எங்கு நோக்கினும்
தொழிலாளர் வெள்ளம் !
தமிழகத்திலிருந்து அஞ்சல் மூன்று மாநிலச் செயலர் தோழர். J . இராம மூர்த்தி , அஞ்சல் மூன்று மாநில நிதிச் செயலர் தோழர். A . வீரமணி , அஞ்சல் நான்கு மாநிலச் செயலர் தோழர். G . கண்ணன் , AIPEU GDS NFPE மாநிலச் செயலர் தோழர். R . தனராஜ் . மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன தமிழக பொதுச் செயலர் தோழர் . M . துரைபாண்டியன் உள்ளிட்ட அஞ்சல், வருமானவரித்துறை, AG அலுவலகம், ராஜாஜி பவன் , சாஸ்திரி பவன் , MEDICAL STORES உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நூற்றுக் கணக்கில் தோழர்கள் தோழியர்கள் கலந்துகொண்டனர் . தென்னக ரயில்வே பகுதியில் இருந்து SRMU , SRES சங்கங்களில் இருந்து ஆயிரக்கணக்கில் ஊழியர்கள் கலந்துகொண்டனர் என்பது சிறப்பு. வட கோட்டச் செயலர் தோழியர் ஏஞ்சல் சத்தியநாதன் , கோட்டத் தலைவர் தோழர். மோகன் ஆகியோர் தலைமையில் பெருமளவில் சென்னை வட கோட்டத்தின் ஊழியர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
Subscribe to:
Posts (Atom)