Saturday 24 February 2018

அன்புத் தோழர்களுக்கு வணக்கம்.


02.03.2018 தொடர்ந்து நெருக்கடிக்கொடுக்கும் நிர்வாகத்தை எதிர்த்து மாநிலம்  தழுவிய ஆர்ப்பாட்டம் 


தமிழகத்தில் என்ன நடக்கிறது சிந்தியுங்கள் தோழர்களே!!!!

தினம் தினம் காலையில் நமது காதில் ஒலிப்பது நமது அதிகாரிகளின் கைப்பேசி செய்திகள் தான், நேற்று என்ன செய்தீர்கள் , இன்று எத்தனை கணக்குகள் துவங்கப்போகிறீர்கள், எத்தனை ஆயுள் காப்பீடு கணக்குகள், எத்தனை லட்சத்துக்கு , எவ்வளவு பிரிமியம் இந்த தகவல் தான் நீங்கள் பெறுவது என்பது வழக்கமாகிவிட்டது.

ஆண்டுக்கு ஆண்டு நாம் பெறும் நெருக்கடி இவ்வாண்டு அனைத்து அஞ்சல் 3, அஞ்சல் 4 ஊழியர்களையும் விட்டு வைக்கவில்லை என்பது தான் உண்மை .

தமிழகத்தில் நெருக்கடியின் தாக்கம் அளவுக்கு அதிகமாக தலைதூக்கி ஆட்டம் போடுகிறது என்பதை அனைவரும் உணருகின்றனர். இருந்தும் நமது GDS ஊழியர்கள் மேல் தொடுக்கும் அம்பு அலுவலகத்தை பூட்டி விட்டு சென்று அதிக கணக்குகளும் பாலிசுகளுடன் வந்து அன்றைய நிலவரம் மாலை தெரிவிக்க வேண்டும் என கோருகின்றனர் என அனைத்து கோட்டச் செயலரும் கூறிவருகின்றனர். ஆகவே தமிழ் மாநில AIPEU GDS செயலாளர் RDR நமது தமிழ் மாநில NFPE COC கன்வீனர் தோழர் G .கண்ணன் , அஞ்சல் 3 செயலர் தோழர் JR இவர்களை தொடர்ந்து தமிழகம் தழுவிய இயக்கம் நடத்தி மாநில நிர்வாகத்தின் நெருக்கடிக்கு தடை ஏற்படுத்திட வேண்டும் என  வலியுறுத்தி வந்தது. 

இதன் காரணமாக நமது கன்வீனர் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் தமிழக FNPO பொறுப்பாளர்களை அணுகி இயக்கம் நடத்திட முடிவு எடுத்துள்ளனர்.

ஆகவே அனைத்து FNPO  தோழர்களையும் இணைத்துக் கொண்டு மிகப் பெரிய ஆர்ப்பாட்டத்தை வரும் 02.03.2018 மாலை கோட்ட மட்டத்தில்  நடத்திட வேண்டும் என தமிழ் மாநில AIPEU GDS சங்கம் கேட்டுக்கொள்கிறது.

கோட்ட செயலர்கள், மாநில, அகில இந்திய பொறுப்பாளர்கள் சிறப்பாக ஆர்ப்பாட்டம் நடத்தி, ஆர்ப்பாட்ட புகைப்படங்கள் எனது வாட்சாப் (94424 75290) எண்ணுக்கு அனுப்பிடுமாறு கேட்டுக்கொள்கிறது.  

Tuesday 20 February 2018

அன்புத் தோழர்களே !! வணக்கம் 
1. நமது ஊழியர்கள் மீது கடுமையான டார்ச்சருடன்  கணக்குகள் துவங்கவேண்டும் என்பது .( நிர்வாகமா ? அரசாங்கமா ?) புரிந்து செய்கிறார்களா ?????????ஒரு கண்னோட்டம்.

ஒரு கிளை அலுவலகத்தில் சுமார் 500 புது RD கணக்குகள் துவங்குவதாக வைத்துக்கொள்வோம் ( உ-ம்) ஒரு நபர் 1000 ரூபாய் பணத்தை 100 கணக்காக நிர்வாகம் கூறுவது போல் இன்று ஒரே சிப் ஆரம்பிக்கப்பட்டு அதைக்கொண்டு SO வில் UPS வேலைசெய்யாத சூழலில் பினாக்கள் வேகமாக இயங்காத சூழலில் தனது சிரமங்களை தாங்கிக்கொண்டு அன்றைய கணக்கு துவங்கப்பட்டு pass book பிரிண்டர் இல்லாத நிலையிலும் புத்தகம் வழங்கி விடுகிறார்கள், இவ்வளவுக்கும்   கம்பி மூலம் செயல்படும் இரண்டு  நெட் இணைப்பு இருந்தும் சரிவர கிடைக்காமல் சிரமத்திற்கு இடையில் கணக்குகள் துவங்கி விடுகிறார்கள்,

அடுத்த மாதம் முதல் மாதா மாதம் அதே நபர் பணம் கட்ட வரும்போது அந்த 100 கணக்குகளுக்கு தனித்தனியாக Pay in  slip  பயன்படுத்த முடியுமா அதற்கு நிர்வாகம் silp supply செய்யுமா?  2. அத்துனை கணக்குகளையும் மூன்று இடங்களில் எழுத வேண்டும் அதாவது 300 வரிகள் எழுத சாத்தியமா? 3.அதற்கு எத்தனை A4 தாள் தேவைப்படும் அந்த ஒரு நபர் கணக்கை முடிக்க எத்தனை மணி ஆகும். 30 கணக்குகளுடன் மற்ற RPLI , SSA , SB இவைகளுடன் வரவு செலவு செய்யப்பட்டு கணக்கு முடிக்கவே 5 மணி நேரம் ஆகிறது அல்லவா . இத்துடன் மற்ற பட்டுவாடா பணிகளை வரவு வைத்த பின் பட்டுவாடாவிற்கு பின் கணக்கில் கொண்டுவர நேரத்தை கணக்கிட்டு பார்க்கவும்.  அந்த 300 கணக்குகள் நாள் ஒன்றுக்கு 30 வீதம் 10 நாட்களுக்கு ஒரு நபருக்கே வேலை செய்தால் மற்ற பழைய கணக்கு வைத்திருப்பவர் மற்றும் புதிய கணக்கு வைத்திருப்பவர் கணக்குகள் அந்தமாதத்தில் முடிக்க முடியுமா ? 

நாளைய நிலை, RICT கிளை அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டால் வெறும் sim card மூலம் நெட் இணைப்பு கொடுக்கப்படும் அதுவும் கிராமங்களில் என்ன நிலை என்பது அனைத்து விபரம் தெரிந்த நபர்களுக்கு தெரியும் ஏன் நமது கோட்ட நிர்வாகம் முதல் DSM தோழர்களுக்கு தெரியும். கிளை அலுவலகம் எவ்வாறு செயல்படப்போகிறது ??? பொறுத்திருந்து பார்ப்போம் .

ஆகவே தோழர்களே நாளை நடப்பதை நினைத்து செயல்படுங்கள், எந்த கணக்குகள் துவங்கினாலும் 10 ரூ 20 ரூ என பிரித்து போட முன்வராதீர்கள் . அப்படி இல்லை என்றால் நாளை நடக்க போகும் சிரமங்களுக்கு ஊழியர்களே சுமக்க வேண்டிவரும் என்பதை நிர்வாகத்திற்கு எடுத்து கூறுங்கள். வேலை செய்யப்போவது நாம் தான் நிர்வாகம் இல்லை என்பதை மனதில் கொள்க.
மீண்டும் நாளை இவன் AIPEU - GDS    

Monday 19 February 2018

அன்பு அஞ்சல்  GDS  சொந்தங்களே வணக்கம்.
     ஆண்டுக்கு ஆண்டு நமது மேல் அரசும் அஞ்சல் நிர்வாகமும் கணக்கு துவங்கச்சொல்லி நிர்பந்தத்தின் உச்சத்துக்கே கொண்டு செல்கின்றனர் என்பது நாம் அறிவோம். நடப்பு ஆண்டு சற்று வித்யாசமாக NET Account என ஒன்று  தமிழ் நாட்டில் வலம் வந்துகொண்டு இருக்கிறது. 

அதில் நீ முந்தி நான் முந்தி என ஊழியர்களை  கொம்பு சீவி விடுவது மட்டுமல்லாமல் கோட்ட நிர்வாகங்கள் மண்டல அளவில் நீ முந்தி இல்லை நான் தான் இவ்வாரம் முதலிடம் என கூறிக்கொண்டு வாரா வாரம் வாட்சாப்பில் தேர்தலில் வாக்கு எண்ணும்  போது செய்திகள் வெளியிடுவது போல் வேடிக்கையாக இருக்கிறது.  வாக்கு எண்ணிக்கை முடிவு 31.03.2018 -ல் தெரியும்.  நிர்வாகம் அதோடு நிறுத்திக் கொண்டால் சரி, 2018-2019 க்கு உடன் Target வைத்து தனது பணியை மீண்டும் தொடர்ந்தாலும் தொடரும். காரணம் மண்டலத்தில் முதலிடம் அல்லது நமது மாநிலம் அகில இந்திய அளவில் முதலிடம் என முத்தப்போவது யார் என பார்க்க வேண்டாமா ?. 
     காலம் நேரம் பார்க்காமல் உழைக்கும் எமது ஊழியன் நீங்கள் போடும் புள்ளியில் வாங்கும் ஊதியத்தை குறைத்து நிர்ணயித்து விட்டால், அடுத்த மாதம் தனது ஊதியம் குறையுமோ அல்லது மறுமாதம் குறையுமோ என தனது ஊதியத்தை நம்பி உள்ள ஊழியர்களின் குடும்பத்தை தத்தளிக்க வைக்குமே என ஒருகணம் நினைக்க  வேண்டாமா ? 
   
ஏதோ மேலிருந்து புள்ளி நிர்ணயம் செய்து ஆணை வந்தால், அவ்வாறு புள்ளி நிர்ணயிப்பது கூடாது தொழிலாளர் செய்யும் வேலைக்கு இணையாக  புள்ளி நிர்ணயம் செய்யுங்கள் என தொழிற்சங்கம் எடுத்து கூறினாலும் அதை காதுகொடுத்து கேட்காத நிர்வாகத்தின் ஆணையை அப்படியே நடைமுறை படுத்தும் மாநில,கோட்ட நிர்வாகம் இன்று  தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ஊதியம் குறைக்கப்பட்டு கொய்யோமுர என கதறுகிறார்களே உங்கள் காதில் விழவில்லையா , எப்படி காதில்விழும் அத்துணை ஊழியனும் அஞ்சல் நிர்வாகத்தின் அடிமையாச்சே!!!! 

"வள்ளுவனின் வார்த்தைப் படி மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும் அளவுக்கு அதிகமாக ஏற்றினால் அவ் வண்டியின் அச்சு முறிந்து விடும்"
மீண்டும் நாளை இவன் AIPEU-GDS TN