அன்புத் தோழர்களுக்கு வணக்கம் ! .
இதற்கு முன்னர் நமது 12.12.2012 வேலை நிறுத்தத்தை உடைக்க வேண்டும் என்ற தீய எண்ணத்தில் 10.12.2012 அன்று தோழர். மகாதேவையா தனது வலைத்தளத்தில் GDS ஊழியர்களுக்கான போனஸ் உச்சவரம்பை உயர்த்தும் கோப்பு நிதி அமைச்சகத்தால் ஒப்புதல் தரப்பட்டது என்ற அறிவிப்பை வெளியிட்டது உங்களுக்கு நினைவிருக்கும் .
ஆனால் நமது NFPE சம்மேளனத்தின் மூலம் அன்றைக்கே , இது தவறான தகவல் என்றும் ஊழியர்களை திசை திருப்ப மகாதேவய்யாவால் நடத்தப் படும் நாடகம் என்று தெரிவித்திருந்ததும் உங்களுக்கு நினைவிருக்கும். உண்மையில் அந்த கோப்பு நமது இலாக்காவுக்கே திருப்பப் பட்டது என்றும் நாம் தெரிவித்திருந்தோம்.
அதன் பிறகு கீழே கண்ட செய்தியையும் நாம் தெரிவித்திருந்தோம் . உங்கள் நினைவுக்காக :-
அதன் பின்னரே மீண்டும் இலாக்காவல் அமைக்கப் பட்ட கமிட்டியின் ஒப்புத லோடு நம் இலாக்கா நமது கோரிக்கையை ஏற்று நிதி அமைச்சகத்துக்கு தனது பரிந்துரையை அனுப்பியது உங்களுக்கு நம் வலைத்தளத்தின் வாயிலாக அறிவித்திருந்தோம்.
தற்போது , எதற்கும் 'கட்டை' போடும் நிதி அமைச்சகமே , நமது இலாக்காவின் பரிந்துரையை ஏற்று GDS ஊழியர்களுக்கான போனஸ் உச்சவரம்பை ரூ.2500/- லிருந்து ரூ.3500/- ஆக உயர்த்திட ஒப்புதல் அளித்துள்ளது என்பது மகிழ்ச்சியான செய்தியாகும் .
இந்த கோப்பு தற்போது காபினெட் ஒப்புதலுக்கு அனுப்பப்பட வுள்ளது. நிச்சயம் காபினெட் ஒப்புதலை நாம் பெறுவோம் என்பதை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம். இந்த மாற்றங்கள் எல்லாம் GDS சங்கம் NFPE பேரியக்கத்தின் கீழ் அமைக்கப் பட்ட பிறகே என்பதை நினைவில் கொள்ளுங்கள் .
தோழமையுடன்
R . தனராஜ் , மாநிலச் செயலர்,
AIPEU GDS NFPE , தமிழ் மாநிலம் .
No comments:
Post a Comment