நேற்றொரு தோற்றம் இன்றொரு மாற்றம்
பார்த்தால் பார்வைக்குப் புரியாது
மகாதேவய்யாவின் பல முகம் ..... சில நாட்களில்
(அது வேற வாயி ...... இது நாற வாயி ?)
22.02.2014
AIGDSU சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர். மகாதேவையா கடந்த 22.2.2014 அன்று அவரது வலைத்தளத்தில் அளித்த வேலை நிறுத்த ஒப்பந்தத்தின்படி மத்திய அரசு 7 ஆவது ஊதியக் குழுவில் GDS ஊழியர்களின் பிரச்சனைகளை சேர்க்க மறுத்தால் , ஒய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான தனி நபர் கமிட்டி GDS ஊழியரின் ஊதிய விகிதங்களை பரிசீலிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் தனி நபர் கமிட்டியை அவர் ஏற்பதாக அரசாங்கத்திற்கும் இலாக்காவுக்கும் சூசகமாக தெரிவித்துள்ளார் என்பது அனைவருக்கும் நிச்சயம் புரியும் என்று எண்ணுகிறோம். அவரின் அறிவிப்பை கீழே பார்க்கவும்.
கடந்த 25.02.2014 அன்று உத்திரப் பிரதேசத்தின் ரேபரலி தொகுதியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் திருமதி. சோனியா காந்தியை சந்தித்து அவர்கள் சங்கத்தின் சார்பாக அளித்துள்ள மனுவில் 7 வது ஊதியக் குழு GDS ஊழியர்களின் ஊதிய விகிதங்களை பரிசீலிக்க வேண்டும் என்று கோரியுள்ளதாக அவரது வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அவரது வலைத்தளத்தில் அளித்துள்ள செய்தியை கீழே பார்க்கவும் .
"We, therefore, request you kindly to utilise your good so that the issue relating to the GDS employees are included in the preview and terms of the 7th CPC."
26.02.2014
26.02.2014 அன்று அவரது வலைத்தளத்தில் AIPEU GDS NFPEபொதுச் செயலர் தோழர். பாண்டு ரங்கராவ் அவர்களை விமரிசித்து அவர் அளித்துள்ள செய்தியில் " ஒரு நபர் கமிட்டி என்பது பல உறுப்பினர் களை கொண்ட நீதிபதி தலைமையிலான 7 ஆவது ஊதியக் குழுவை விட சிறந்ததுஎன்றும் ,
நீதிபதி தலைமையிலான ஊதியக் குழு , தனி நபர் குழுவை விட எவ்வாறு சிறந்தது என்று உங்களால் விளக்க முடியுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் அளித்துள்ள செய்தியை கீழே பார்க்கவும்.
"MR. DESTRUCTOR, IF YOU CAN’T DO ANY GOOD TO EMPLOYEES, PLEASE DO NOT MISLEAD GDS EMPLOYEES.
WILL YOU PLEASE EXPLAIN WHY RETIRED JUDGE HEADING PAY COMISSION WITH BETTER THAN RETIRED JUDGE HEADING THE GDS COMMITTEE.
ONE MAN GDS COMMITTEE MORE INDEPENDENT THAN A JUDGE HEADING A PAY COMMISSION WITH OTHER MEMBERS."
அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் , GDS ஊழியர்களை அரசு ஊழியர்களாக அங்கீகரிக்க வேண்டுமானால் , நீதிபதி தல்வார் தலைமையிலான குழு பரிந்துரைத்தபடி , GDS ஊழியர்களை CIVIL SERVANT STATUS அளித்து அங்கீகரிக்கவேண்டுமென்றால், 1977 உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அமல்படுத்தப் படவேண்டுமானால் , அதற்கு GDS ஊழியர்களை 7 ஆவது ஊதியக் குழுவின் எல்லைக்குள் கொண்டுவருவது ஒன்றே சிறந்த வழி என்று களம் இறங்கிப் போராடும்போது ,
GDS ஊழியர்களின் அங்கீகரிக்கப் பட்ட ஒரே சங்கமான AIGDSU சங்கத்தின் பொதுச் செயலர் மகாதேவையா தனி நபர் கமிட்டியே போதும் என்கிறார் . இது போதாது என்று அதனை ஆதரிப்பதில் என்ன தவறு என்று வேறு வக்காலத்து வாங்குகிறார்.
அப்பாவி GDS ஊழியர்கள் சிலரோ , தாங்கள் அழிந்தாலும் பரவாயில்லை என்று போலி கவுரவத்தில் இன்னமும் மகாதேவய்யாவை தாங்கிப் பிடித்து அறிக்கைகள் வெளியிடுகின்றனர் ... அவர் அளித்த போலி வேலை நிறுத்த அறைகூவலுக்கு செவி சாய்த்து ஊதியம் இழந்து வேலை நிறுத்தம் வேறு செய்கின்றனர்.
இது சரியா ? இது முறையா ? இரட்டைக் குழல் துப்பாக்கி மூன்று குழல் துப்பாக்கி என்றெல்லாம் மேடையில் வீர வசனம் பேசிய அன்புத் தோழர்கள் இனியாவது தங்கள் சிந்தனையை மாற்றிக் கொள்வார்களா ?
GDS ஊழியர்களைக் காக்க , அழிவு சக்தி மகாதேவய்யாவை விடுத்து NFPE பேரியக்கத்துடன் இணைந்து நின்று போராடுவார்களா ?
காலம் இன்று பதில் சொல்லுகிறது !
நாளையும் நிச்சயம் சொல்லும் !
NFPE பேரியக்கம் நிச்சயம் வெல்லும் !
GDS வாழ்க்கை நம் கையில் நிச்சயம் மலரும் !
தோழமையுடன்
R . தனராஜ் , மாநிலச் செயலர்
AIPEU GDS NFPE , TN
No comments:
Post a Comment