Tuesday, 11 November 2014

P 3 CHQ SUBMITTED VIEW POINTS TO THE CHAIRMAN , TASK FORCE

CHAIRMAN, TASK FORCE ON LEVERAGING THE P.O. NETWORK  திரு  T.S.R. சுப்ரமணியன் அவர்களிடம் அஞ்சல் மூன்றின்  அகில இந்திய சங்கத்தின் சார்பாக ஆலோசனைகள் மற்றும் கோரிக்கைகளை அதன்  பொதுச் செயலர் தோழர். N.சுப்ரமணியன் அவர்கள்  அளித்துள்ளார்கள்.

அதில் இலாக்காவின்  பொது மக்கள் சேவையை மேம்படுத்தும் விதமாகவும், அதே நேரத்தில் வருவாயை ஈட்டக் கூடிய வகையிலும் பல்வேறு ஆலோசனைகளை அளிக்கப் பட்டுள்ளன .  

இதில் மிகவும் குறிப்பிடும்படியான அம்சம் என்னவெனில் , மத்திய அரசில் இருந்து 2012 இல் நம் இலாக்காவுக்கு I.T.  MODERNISATION என்ற வகையில் ஒதுக்கப் பட்ட ரூ. 5000/- கோடி தொகையானது  இலாக்காவின் அடிப்படை கட்டு மானமாகிய  கணினி மற்றும் அதன் தொடர் செயல் பாட்டு பொருள்கள் வழங்குவதற்கோ அல்லது மேம்படுத்து வதற்கோ வழங்கப்படவில்லை என்றும் அது முற்றிலும் முழுவதுமாக TECHNOLOGY  TRANSFER  என்ற வகையில் தனியார் நிறுவனங்களுக்கு மென்பொருள் பெறவே வழங்கப் பட்டுள்ளது எனவும் , 

நம்முடைய  அடிப்படை கட்டுமானம் மிகவும்  பழுதடைந்து சிதிலமாக உள்ளது என்றும் அது புதுப்பிக்கப்படவேண்டும் என்றும் புதிய கணினிகள், பிரிண்டர்கள், UPS , BATTERY , GENERATOR உள்ளிட்ட பொருள்கள் உடன் வழங்கினால் மட்டுமே அரசு நினைக்கும்  முன்னேற்றம் ஏற்படும் என்றும்,

மேலும் இதற்கு ஆட்பற்றாக்குறையும்  உடனடியாக களையப்பட வேண்டும்  என்றும்  சுட்டிக் காட்டியுள்ளார்.  

ஏற்கனவே TASK  FORCE இன் TERMS  OF  REFERENCE இல் ADEQUATE INFRASTRUCTURE  குறித்த செயல் திட்டம் இருப்பதால் நிச்சயம் இந்தப் பிரச்சினைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று நம்புகிறோம். சரியான நேரத்தில் சரியான இடத்தில் இந்தப் பிரச்சினை களைக்  கொண்டு சென்றுள்ள அஞ்சல் மூன்று  அகில இந்திய பொதுச் செயலர் தோழர். N .S . அவர்களுக்கு நம் மாநிலச் சங்கத்தின் பாராட்டுக்கள்!
=R . தனராஜ் , மாநிலச் செயலர்.

No comments:

Post a Comment