AIPEU GDS அகில இந்திய செயற்குழு கூட்டம்
அகில இந்திய AIPEU GDS செயற்குழு கூட்டம் கேரள மாநிலம் திருவனந்தபுரம் நகரில் BEUH கட்டிடத்தில் 05.05.2017 அன்று நடைபெற்றது.
கூட்டத்தின் முதல் நிகழ்வாகAIPEU GDS அகில இந்திய தலைவர் தோழர் பீஜய் கோபால் சூர் கொடி ஏற்றி வைத்து செயற்குழு கூட்டத்தை தலைமை ஏற்று நடத்தினார்.
NFPE சம்மேளனத்தின் மா பொதுச்செயலர் தோழர் R N பராசர் , மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் பொதுச்செயலர் தோழர் M. கிருஷ்ணன் கலந்துகொண்டு கடந்தகால நிகழ்வுகள் வரும் நாட்களில் நாம் எடுத்து செல்லவேண்டிய செயல்பாடுகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தனர்.
மேலும் மே 12 நடைபெறும் NFPE சம்மேளன செயற்குழுவில் GDS ஊழியர்களின் உறுப்பினர் சரிபார்ப்பு நடத்த வேண்டிய நடைமுறை ஓர் ஆண்டுக்கு மேல் இலாக்கா காலதாமதம் செய்வது தொடர்பாகவும், GDS ஊழியர்கான கமலேஷ் சந்திரா தலைமையிலான ஊதியக்குழு விரைவில் அமல்படுத்துவது தொடர்பாகவும் தெளிவான முடிவு எடுக்கப்பட்டு இயக்கங்கள் அறிவிக்கப்படும் என உறுதிப்படுத்தினார்கள். தலைவர்களுக்கு நன்றி.
மேலும் RMS 3 சங்கத்தின் பொதுச்செயலர்தோழர் கிரிராஜ்சிங், அஞ்சல் 4ன் பொதுச்செயலர் தோழர் R .சீதாலட்சுமி மற்றும் RMS 4 பொதுச்செயலர் தோழர் P . சுரேஷ் உள்ளிட்ட பொதுச்செயலர்கள் கலந்துகொண்டனர்.
கேரள மாநில COC செயலர் வரவேற்புரை நிகழ்த்த கூட்ட ஏற்படுகளை கேரள மாநில AIPEU GDS செயலர் தோழர் சாகு தலைமையில் சிறப்பாக செய்திருந்தனர். அனைத்து தோழர்களுக்கும் தமிழ் மாநிலம் சார்பாக நன்றியினை தெரிவித்துக்கொள்கிரோம்.
இறுதியாக கமலேஷ் சந்திரா தலைமையில் அமைக்கப்பட்ட AIPEU GDS ஊதியக்குழு சாதகமான பரிந்துரைகளை விரைவாக அமல் படுத்திடவேண்டும், உறுப்பினர் சரிபார்ப்பு அறிக்கையினை விரைவாக அறிவித்திட வேண்டும் என இரண்டு தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டு செயற்குழு கூட்டம் முடிவடைந்தது. இக்கூட்டத்திற்கு தமிழ் மாநில செயலர் தோழர் R . தனராஜ் மற்றும் புதுக்கோட்டை பொறுப்புச் செயலர் தோழர் P . குணசேகரன் இருவரும் கலந்துகொண்டனர்.
AIPEU GDS - CENTRAL WORKING COMMITTEE MEETING HELD IN TRIVENDRAM ON 05-05-2017
The
3rd Central Working Committee meeting of AIPEU-GDS (CHQ) has been held
on 05th May 2017 in Bank Employees Union hall, Trivendram. The meeting
presided by Com.Bijoy Gopal Sur, All India President and
Com.P.Muralidharan, Chairman, CoC, Kerala made welcome speech.
Com.R.N.Parashar,
Secretary General, NFPE inaugurated the CWC meeting and Com.Giriraj
singh, Genl Secretary, R-III, Com.R.Seethalakshmi, Genl, Secretary, P4.,
Com.P.Suresh, Genl Secretay, R-IV also attended and addressed.
Com.M.Krishnan, Secretary General, Confederation spoken elaborately on the organizational issues of AIPEU-GDS and the analysis of recommendations of the GDS Committee.
Com.M.Krishnan, Secretary General, Confederation spoken elaborately on the organizational issues of AIPEU-GDS and the analysis of recommendations of the GDS Committee.
The
CWC meeting concluded with the unanimous resolutions on demanding the
Department & Govt to implement all the positive recommendations of
Shri Kamalesh Chandra Committee Report at the earliest and Immediate
issuance of notification to conduct membership verification in GDS
cadre.
The
arrangements made by the Reception Committee for holding the CWC
meeting and for the participants, invitees deserves all appreciation.
CHQ conveyed heartfelt thanks to the comrades of Kerala for their
support and cooperation to AIPEU-GDS.
No comments:
Post a Comment