Wednesday, 15 May 2013

A BLOW ON POOR GRAMIN DAK SEVAKS !


  குதிரை கீழே தள்ளியதும் அல்லாமல்  குழியும் பறித்ததாம் !. 

ஒவ்வொரு  GDS  அஞ்சலகமும்  தனது வருமானத்திற்குள்  செலவினம் அடங்குவதாக ( RUNNING/ OPERATIONAL COST/ SALARY COMPONENT)   இனி இருக்க வேண்டும் .  அதாவது  தன்னிறைவு  பெற்றதாக  இருக்க வேண்டும்
இதனை 2013- 14 ஆம் நிதியாண்டில் பெற்றிட,  ஏற்கனவே   இருந்ததை விட மேலும் 25%  அதிக வருவாய் பெரும்  வண்ணம் புதிய  இலக்குகள் நிர்ணயிக்கப் படும் . 

இதனை கீழ் மட்ட அதிகாரிகள் ஒவ்வொரு மாதமும் ஆய்வு செய்து , ஒவ்வொரு பகுதியிலும் (உதாரணம் :- SB, RD, RPLI, EPOST ETC) வருமான உயர்வு எவ்வளவு  என்பதற்கான அறிக்கையை , அடுத்த மாதம் 
5 தேதிக்குள்  இலாக்காவுக்கும் ,  துறை அமைச்சரின்  பார்வைக்கும்  அனுப்பிட வேண்டும் . 

இதற்கான    உத்திரவை (தேதி  கூட போட  நேரமில்லாமல்)   RURAL BUSINESS DIVISION  அளித்துள்ளது . ஏற்கனவே E-POST  என்ற பெயரில் சினிமா நடிகையின் பிறந்த நாளுக்கும் , அரசியல் கட்சிகளின்  திருவிழாக்களுக்கும்  ஆள்   பிடிக்கச் சொல்லும் அதிகாரிகள் , RPLI  TARGET  என்ற பெயரில் FICTITIOUS  POLICY   போடச் சொல்லும்  அதிகாரிகள்  இனி என்ன செய்வார்கள் என்பது தெளிவு !

GDS  ஊழியர்களைக் காத்திட  அகில இந்திய அளவில் தொடர் போராட்டம்  அவசியம் என்பதை  எதிர்வரும்சம்மேளன மாநாட்டில் நாம் கோருவோம். அந்த திசை நோக்கி தீர்மானம்  எடுப்போம் !
FRATERNALLY YRS,
R. DHANARAJ,
CIRCLE SECRETARY.

No comments:

Post a Comment