Tuesday, 29 October 2013

MARCH TO PARLIAMENT BY CENTRAL GOVT EMPLOYEES AND BY GRAMIN DAK SEVAKS - 2 DAYS PROGRAMME

அன்பார்ந்த அஞ்சல் மூன்று , அஞ்சல் நான்கு, RMS  மூன்று , RMS  நான்கு , GDS   மாநிலச் சங்க நிர்வாகிகளே ! SUPREME  COUNCILLOR  களே ! கோட்ட/ கிளைச் செயலர்களே !  மகிளா  கமிட்டி நிர்வாகிகளே !  வணக்கம் !

எதிர்வரும் டிசம்பர் திங்கள் 11 ஆம் தேதியில் GDS  ஊழியர் கோரிக்கைகளுக்காக  பாராளுமன்றம் நோக்கிய பேரணி ஏற்கனவே அறிவிக்கப் பட்டு  அதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன ..

உங்களிடம் ஏற்கனவே  இதற்கான ரயில் முன்பதிவு செய்திட நமது மாநிலச் சங்கத்தின் சார்பாக வேண்டினோம் என்பது  நினைவிருக்கும். ஆனால் இன்னமும் ஒருவரிடமிருந்தும்  பதில் வரவே இல்லை .

தற்போது மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் மற்றும் நமது NFPE  சம்மேளனத்தின் மூலம் மத்திய அரசு ஊழியர்களின்  ஊதியக் குழு , 50% பஞ்சப்படி  உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளுக்காக  எதிர்வரும்  டிசம்பர் திங்கள் 12 ஆம்  தேதி (GDS  பேரணியைத் தொடர்ந்து )  நடத்திட  தாக்கீது வந்துள்ளது !

எனவே  உடன் உங்கள் பகுதியில் உள்ள அஞ்சல் நான்கு, RMS  3, RMS  4, GDS  உள்ளிட்ட  NFPE  இன் அனைத்து உறுப்பு சங்கங்களுக்கும் இந்த செய்தியை  தெரிவித்து , அதன் மீது  ஒரு கோட்டம் அல்லது கிளைக்கு  தலா 10 பேருக்கு குறையாமல்  டெல்லி தலைநகரில் நடைபெற உள்ள பாராளுமன்றம் நோக்கிய  பேரணிக்கு   ஊழியர்களைத் திரட்டி  உடன்  ரயில் முன்பதிவு  செய்திட  மாநிலச் சங்கம் ,  அஞ்சல் RMS  தமிழ் மாநில இணைப்புக் குழு  மற்றும் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் தமிழ் மாநிலக் குழு  உங்களை  வேண்டிக் கேட்டுக் கொள்கிறது . 

அலட்சியமாக  இருக்க வேண்டாம் என்றும்  நினைவுறுத்துகிறோம்.  மாநிலச் சங்கம் நிர்வாகிகள் உடன் தங்கள் பகுதியில் உள்ள கோட்ட/ கிளைச் செயலர்களைத் தொடர்பு கொண்டு  பயணத்திற்கான ஏற்பாடுகளை  செய்திட வேண்டுகிறோம்.  தங்கள் பகுதியில் இருந்து சங்க வாரியாக எத்தனை பேர் ரயில் முன்பதிவு செய்துள்ளனர் என்ற விபரத்தினை உடன் மாநிலச் செயலருக்கு தெரிவிக்கவும்.  உடன் பதிலை எதிர் பார்க்கிறோம்.

இதுவரை பதிவு செய்யாதவர்கள் உடன் பதிவு செய்திடவும் அதன் விபரங்களை மாநிலச் செயலருக்கு தெரிவித்திடவும் வேண்டுகிறோம்.

தோழமையுடன் 
J . ராமமூர்த்தி , மாநிலச் செயலர் , அஞ்சல் மூன்று தமிழ் மாநிலம்.
கன்வீனர் , அஞ்சல் - RMS  இணைப்புக் குழு ,  NFPE , தமிழ் மாநிலம் .
தலைவர், மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் , தமிழ் மாநிலம்  .

மற்றும் 
R . தனராஜ் , மாநிலச் செயலர், AIPEU  GDS  NFPE ,
அமைப்புச் செயலர் , மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம், 
தமிழ் மாநிலம் .


AN IMPORTANT NEWS TO OUR GDS COMRADES UNDER CCR REGION

ஒரு முக்கிய செய்தி !

சென்னை பெருநகர மண்டலத்தில் POSTMAN  UNFILLED  VACANCIES கிட்டத்தட்ட 200 காலியிடங்கள்  உள்ளதாகவும்  

இந்த காலி இடங்களுக்கு CCR  இல் உள்ள   MOFUSSIL  கோட்டங்களில் ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதத்தில் தேர்வு எழுதியவர்களில்   SURPLUS  QUALIFIED  ஆக உள்ள  GDS  ஊழியர்களிடமிருந்து   3 OPTION கேட்கப் பட்டு  அந்த விண்ணப்பங்கள்  PMG,  CCR  தலைமையிலான  கமிட்டி முன்பாக பரிசீலனைக்கு வைக்கப் பட்டு  பின்னர் அவர்களுக்கு  பதவி உயர்வு பட்டியல் வெளியிடப்படும் . 

இது எதிர்வரும் நவம்பர் மாத இறுதிக்குள் முடிக்கப் படும்  என்று  நிர்வாகம் தெரிவிக்கிறது .

CIRCLE UNION CIRCULAR NO. 11 RELEASED



Wednesday, 9 October 2013

SUBMISSION OF MEMORANDUM TO RAJYA SABHA PETITION COMMITTEE THRO' Sh. N. BALAGANGA , M.P. RAJYA SABHA ON GDS ISSUES

ராஜ்ய சபா  முறையீட்டுக் குழுவுக்கு  GDS ஊழியர் பிரச்சினை குறித்து பரிசீலிக்க  கோரிக்கை மனு . 

இந்த மனு மீது RAJYA SABHA PETITION COMMITTEE பரிசீலனை மற்றும் உரிய விசாரணை செய்து அதன் பரிந்துரைகளை  பிரதம அமைச்சருக்கு அளித்திட அதிகாரம் உள்ளது என்பதையும் அதன் மீது பிரதம அமைச்சர் அமைச்சரவைக் குழுவுக்கு  முடிவுகளை தெரிவிக்க வேண்டியது அரசியல் சாசன விதி ஆகும் என்பதையும் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

 09.10.2013  அன்று காலை சுமார் 12.00  மணியளவில் தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் சார்பில் அதன் மாநிலச் செயலர் தோழர். J.R. அவர்களும்  மாநிலச் சங்கத்தின் நிதிச் செயலரும் , அகில இந்திய சங்கத்தின் உதவிச் செயலருமான தோழர். A. வீரமணி அவர்களும் மற்றும் தமிழ் மாநில AIPEU GDS NFPE சங்கத்தின் மாநிலச் செயலரும், அதன் அகில இந்திய துணைப் பொதுச் செயலருமான தோழர். R. தனராஜ் அவர்களும் 

 அகில இந்திய  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநிலங்கள் அவை  உறுப்பினரும் , அதன் மாநிலங்களவை கொறடாவும், அஞ்சல் வாரிய ஆலோசனைக்குழு உறுப்பினரும், அதன்  வட சென்னை (தெற்கு ) மாவட்டச் செயலருமான  

திருமிகு . நா. பாலகங்கா  

அவர்களை அவரது  எழும்பூர் இல்லத்தில்  GDS ஊழியர்களின்  பிரச்சினைகள் குறித்தும் , அவர்களை இலாக்கா ஊழியர்கள் ஆக்கிட உள்ள வழிமுறைகள் குறித்தும் அதன் சட்ட ரீதியான விபரங்கள் குறித்தும்  , ஏழாவது ஊதியக் குழுவே அவர்களது ஊதிய  மற்றும் பணித்தன்மைகளை பரிசீலித்திட வேண்டியும்  இந்திய நாட்டின் மாநிலங்களவை தலைவரிடம் அளிப்பதற்கான -  PETITION COMMITTEE க்கான - (RAJYA SABHA PETITION COMMITTEE) மனுவினை அளித்தார்கள் . அப்போது எடுக்கப் பட்ட புகைப்படத்தின்  நகலையும் , அந்த மனுவுக்கான  COVERING LETTER ஐயும் கீழே பார்க்கவும்.

மனுவின் நகல் அதிக பக்கங்கள் கொண்டதால் தனியே பிரசுரிக்கப் படும்.

புகைப் படம் இடமிருந்து வலமாக  :- 

திருமிகு. நா. பாலகங்கா, தோழர். J.R., தோழர். A. வீரமணி,  
தோழர். R. தனராஜ் .


Thursday, 3 October 2013

STAY ORDERS OBTAINED AGAINST REVERSION OF POSTMAN EXAM PASSED OFFICIAL DUE TO ANSWER KEY PROBLEM



STATE CONVENTION ON INDEFINITE STRIKE AND STATE CONFERENCE OF THE CONFEDERATION

அன்பார்ந்த கோட்ட/ கிளைச் செயலர்களே ! வணக்கம் !

ஏற்கனவே அஞ்சல் RMS தமிழ் மாநில இணைப்புக் குழு சுற்றறிக்கை எண் 1 இல் அறிவித்த படி  

7 ஆவது ஊதியக்குழு 01.01.2011 முதல் அமைத்தல்,  50% பஞ்சப் படியை அடிப்படை ஊதியத்துடன் 01.01.2011  முதல் இணைத்தல், GDS ஊழியர்களுக்கும் ஏழாவது ஊதியக் குழுவே அவர்களது ஊதிய / பணி உள்ளிட்ட அனைத்தையும் பரிசீலித்தல்,  புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்தல்  உள்ளிட்ட  15 அம்சக் கோரிக்கைகளுக்கான  வேலை நிறுத்தத்திற்கான தயாரிப்பு மாநாடு  தமிழக மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் சார்பில் எதிர் வரும் 05.10.2013 சனிக் கிழமை சென்னை , தி. நகர்  ஜெர்மன் அரங்கில் காலை சரியாக  10.00  மணிக்கு துவங்கி மதியம் 01.00 மணிக்கு முடிவடையும். 

அது போல  தமிழ் மாநில மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின்  மாநாடு மதியம் உணவு இடைவேளைக்குப் பின்னர்  சரியாக 02.00  மணிக்கு துவங்கி மாலை 05.00  மணிக்கு முடிவடையும். 

இது குறித்த  சுற்றறிக்கையின் நகலை கீழே அளித்துள்ளோம். இந்த சுற்றறிக்கையும்  அதற்கான  போஸ்டரும் ஏற்கனவே தமிழகத்தின் அனைத்து அஞ்சல் மூன்று , அஞ்சல் நான்கு, RMS மூன்று , RMS நான்கு , GDS , நிர்வாகப் பிரிவு, SBCO, ACCOUNTS உள்ளிட்ட பகுதிகளுக்கும்  அதன் மாநிலச் செயலர்கள் மூலம் அனுப்பப் பட்டுள்ளது.

எனவே இந்த வலைத்தளத்தை பார்க்கும் அனைத்து நிர்வாகிகளும் தவறாது நம்முடைய தோழர்கள் அனைவருக்கும் இதனை தெரிவிக்க வேண்டுகிறோம்.

கண்டிப்பாக அனைத்து கோட்ட/ கிளைச் செயலர்களும் , கிளைக்கு தலா 5 நிர்வாகிகளுக்கு குறையாமல் விடுப்பெடுத்து இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

அது போல  அஞ்சல் மூன்று , அஞ்சல் நான்கு, RMS மூன்று, RMS நான்கு , GDS NFPE, SBCO, ACCOUNTS மற்றும் ADMIN மாநிலச் சங்க நிர்வாகிகள் அனைவரும் தவறுதல் இன்றி இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும். 

நமது NFPE சம்மேளனத்தின் மா பொதுச் செயலரே   மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின்  மா பொதுச் செயலருமாக இருப்பதாலும் , அஞ்சல் மூன்றின் பொதுச் செயலராக இருப்பதாலும்,  தோழர். கிருஷ்ணன் அவர்களே கலந்து கொண்டு இதனை நடத்துவதாலும்  

பத்தாண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில்  நடைபெறும் மகா சம்மேளனத்தின் மா நாடு என்பதாலும்,  

நமது முது பெரும் தலைவர்  தற்போதைய மகா சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் A.G.P. என்றழைக்கப் படும் தோழர் A.G. பசுபதி அவர்கள் இந்த மாநாட்டில் கௌரவிக்கப் பட உள்ளதாலும்  

நிச்சயம் ஒவ்வொரு  நிர்வாகியின் பங்களிப்பும் இதில் கட்டாயம் இருந்திட வேண்டும் என்று வேண்டுகிறோம். அனைத்து அஞ்சல் நான்கு  மற்றும் GDS நிர்வாகிகளிடம் கட்டாயம் இதனை தெரிவித்திடல் நம் அஞ்சல் மூன்று சங்க நிர்வாகிகளின் கடமை ஆகும்.

இந்த மாநாட்டில் அஞ்சல் இயக்கத்தை சேர்ந்த  மேலும் பல்வேறு முது பெரும் தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளார்கள் .  ஆகவே உங்கள் அனைவரையும்  தமிழ் மாநில அஞ்சல் RMS இணைப்புக் குழு சார்பாக மாநிலச் செயலர்கள் அனைவரும்  இரு கரம் நீட்டி வருக வருக என வரவேற்கிறோம்.

உங்கள் வரவை தவறுதல் இன்று எதிர்பார்க்கிறோம்.

வேலை நிறுத்த கருத்தரங்கில் ஒன்று கூடுவீர் !
மாநில மாநாட்டை சிறக்கச் செய்வீர் ! 
போராட்ட வாழ்த்துக்களுடன்

K. ராஜேந்திரன்                                           J. ராமமுர்த்தி
தலைவர்  (RMS நான்கு )                     கன்வீனர் (அஞ்சல் மூன்று)
மாநிலச் செயலர்கள்
V. ராஜேந்திரன், அஞ்சல் நான்கு               K. சங்கரன் ( RMS மூன்று )
A. இரகுபதி உமாசங்கர்  (ADMIN)                       B. சங்கர் ( ACCOUNTS)
S. அப்பன்ராஜ் (SBCO)                         R. தனராஜ் ( AIPEU GDS NFPE)

அஞ்சல்  RMS இணைப்புக் குழு ,  தமிழ் மாநிலம் .

D.A. ORDERS TO GDS EMPLOYEES