அன்பார்ந்த அஞ்சல் மூன்று , அஞ்சல் நான்கு, RMS மூன்று , RMS நான்கு , GDS மாநிலச் சங்க நிர்வாகிகளே ! SUPREME COUNCILLOR களே ! கோட்ட/ கிளைச் செயலர்களே ! மகிளா கமிட்டி நிர்வாகிகளே ! வணக்கம் !
எதிர்வரும் டிசம்பர் திங்கள் 11 ஆம் தேதியில் GDS ஊழியர் கோரிக்கைகளுக்காக பாராளுமன்றம் நோக்கிய பேரணி ஏற்கனவே அறிவிக்கப் பட்டு அதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன ..
உங்களிடம் ஏற்கனவே இதற்கான ரயில் முன்பதிவு செய்திட நமது மாநிலச் சங்கத்தின் சார்பாக வேண்டினோம் என்பது நினைவிருக்கும். ஆனால் இன்னமும் ஒருவரிடமிருந்தும் பதில் வரவே இல்லை .
தற்போது மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் மற்றும் நமது NFPE சம்மேளனத்தின் மூலம் மத்திய அரசு ஊழியர்களின் ஊதியக் குழு , 50% பஞ்சப்படி உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளுக்காக எதிர்வரும் டிசம்பர் திங்கள் 12 ஆம் தேதி (GDS பேரணியைத் தொடர்ந்து ) நடத்திட தாக்கீது வந்துள்ளது !
எனவே உடன் உங்கள் பகுதியில் உள்ள அஞ்சல் நான்கு, RMS 3, RMS 4, GDS உள்ளிட்ட NFPE இன் அனைத்து உறுப்பு சங்கங்களுக்கும் இந்த செய்தியை தெரிவித்து , அதன் மீது ஒரு கோட்டம் அல்லது கிளைக்கு தலா 10 பேருக்கு குறையாமல் டெல்லி தலைநகரில் நடைபெற உள்ள பாராளுமன்றம் நோக்கிய பேரணிக்கு ஊழியர்களைத் திரட்டி உடன் ரயில் முன்பதிவு செய்திட மாநிலச் சங்கம் , அஞ்சல் RMS தமிழ் மாநில இணைப்புக் குழு மற்றும் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் தமிழ் மாநிலக் குழு உங்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறது .
அலட்சியமாக இருக்க வேண்டாம் என்றும் நினைவுறுத்துகிறோம். மாநிலச் சங்கம் நிர்வாகிகள் உடன் தங்கள் பகுதியில் உள்ள கோட்ட/ கிளைச் செயலர்களைத் தொடர்பு கொண்டு பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்திட வேண்டுகிறோம். தங்கள் பகுதியில் இருந்து சங்க வாரியாக எத்தனை பேர் ரயில் முன்பதிவு செய்துள்ளனர் என்ற விபரத்தினை உடன் மாநிலச் செயலருக்கு தெரிவிக்கவும். உடன் பதிலை எதிர் பார்க்கிறோம்.
இதுவரை பதிவு செய்யாதவர்கள் உடன் பதிவு செய்திடவும் அதன் விபரங்களை மாநிலச் செயலருக்கு தெரிவித்திடவும் வேண்டுகிறோம்.
தோழமையுடன்
J . ராமமூர்த்தி , மாநிலச் செயலர் , அஞ்சல் மூன்று தமிழ் மாநிலம்.
கன்வீனர் , அஞ்சல் - RMS இணைப்புக் குழு , NFPE , தமிழ் மாநிலம் .
தலைவர், மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் , தமிழ் மாநிலம் .
மற்றும்
R . தனராஜ் , மாநிலச் செயலர், AIPEU GDS NFPE ,
அமைப்புச் செயலர் , மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம்,
தமிழ் மாநிலம் .
No comments:
Post a Comment