அன்புத் தோழர்களே !!
27.04.2017 GDS ஊழியர்களுக்கான நாடு தழுவிய தர்ணா போராட்டம்
கடந்த மாதம் 17 ம் நாள் இலாக்கா சம்மேளன அனைத்து செயலாளர்களையும் அழைத்து GDS ஊழியர்களுக்கு திரு கமலேஷ் சந்திரா பரிந்துரைத்த ஊதியக்குழு அறிக்கை மீதான சங்கங்களின் விளக்கத்தை அளித்திட கேட்டுக்கொண்டது அதன் படி நமது சம்மேளன பொதுச்செயலாளர் தோழர் RN பராசர் அவர்களும் அனைத்து மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் செயலாளர் தோழர் M . கிருஷ்ணன் அவர்களும் கலந்துகொண்டு முரண்பாடுகள் முழுவதும் எடுத்துரைக்கப்பட்டு குறிப்பாக வருமான அடிப்படையில் ஊதியம் நிர்ணயிப்பது கூடாது என கடுமையாக நமது நிலையை கூறியது மட்டுமில்லாது வரும் ஏப்ரல் 30 ம் தேதிக்குள் அறிவித்திட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது, ஆனால் நிர்வாகம் , இன்னும் DO P & T க்கு கூட அனுப்பியதாக தகவல் இல்லை.
மத்திய அரசு ஊழியர் 7 வது ஊதியக்குழுவிற்கும் நமது GDS ஊதியக்குழு அமல் படுத்துவதற்கும் உள்ள நடைமுறை சிக்கல்.
மத்திய அரசு நேரிடையாக மத்திய அரசு ஊழியர் ஊதியக்குழுவை அறிவிக்கும் அது நிதி அமைச்சகத்தால் ஏற்றுக்கொள்ளப்படும். உடன் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும். அப்படியிருந்தும் அவர்களது மற்ற படிகள் அளிப்பதில் உள்ள சிக்கல் மற்றும் குறைந்த பட்ச ஊதியம் ரூபாய் 18,000/- என்பதும் இன்னும் மாற்றப்படவில்லை என்பது அனைவரும் அறிந்ததே.
ஆனால் GDS ஊழியர் நடைமுறையானது ஒரு தனிப்பட்ட இலாக்காவினுடையது , அறிக்கை இலாக்காவிடம் அளிக்கப்பட்டு அதை வெளியிடவே காலதாமதம் ஆகி தமது NFPE சம்மேளனம் அனைத்து பொதுச்செயலரும் தொடர் உண்ணா விரதம் டில்லி இலாக்கா அலுவலகம் முன் இருப்பது என முடிவெடுத்து அதற்கான பணிகள் தொடர்ந்த பின் அறிக்கையை நிர்வாகம் வெளியிட்டது என்பதை அறிவோம்.
நம் அறிக்கை ஆணையாக வெளிவர கீழ்கண்ட நடைமுறைகள் நடைபெற வேண்டும் . தற்போது நமது இலாக்காவில் உள்ள நடைமுறைகள் துணை கமிட்டி பரிந்துரைத்த பின் நமது நிர்வாக இணை செயலர் மற்றும் இலாக்கா நிதி நிர்வாகம் ஒப்புதல் அளித்து நமது அமைச்சர் பார்வையில் உள்ளதாக தெரிகிறது. அடுத்து DOP & T , சட்ட இலாக்கா , அதன் பின் நிதி அமைச்சகம் ஒப்புதல் பெற்று பின் மந்திரிசபை ஒப்புதலுக்காக அனுப்பப்படும் அதன் பின் நமது இலாக்கா உத்தரவு வழங்கும்.
இந்த நடைமுறைகள் அரசு நினைத்தால் 15 நாட்களில் வெளியிட அல்லது மாதக்கணக்கிலோ இழுத்தடிக்கப்படலாம். இவைகளை உணர்ந்து நிர்வாகம் 30 ஏப்ரல் இக்குள் ஆணை வழங்குவதில் கால தாமதம் செய்வதை அரசு தவிர்த்து விரைவாக அனைத்து துறைகளிடம் ஒப்புதல் பெற்று ஆணை வழங்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெறப்போகும் போராட்டம் தான் வரும் 27.04.2017 நாடு தழுவிய தர்ணா போராட்டம்..
மாநில, மண்டல ,கோட்ட அளவில் அனைத்து ஊழியர்களும் அஞ்சல் 3 முதல் CCL ஊழியர்கள் வரை கலந்துகொண்டு நடத்திட மாநிலச்சங்கம் கேட்டுக்கொள்கிறது. மாநில நிர்வாகிகள் ,மண்டல , கோட்ட ,கிளை நிர்வாகிகள் அந்த அந்தப் பகுதி இலாக்கா ஊழியர்களை கலந்து கொண்டு சிறப்பாக நடத்திடுமாறு மாநிலச்சங்கம் கேட்டுக்கொள்கிறது .
No comments:
Post a Comment