Sunday, 25 June 2017

அன்புத் தோழர்களே, 
GDS உறுப்பினர் சரிபார்ப்பு படிவத்தில் கையொப்பம் பெறுவதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ள எனதருமை அஞ்சல் சொந்தங்களே வணக்கம்.

நாம் தற்போது எடுத்துள்ள இப்பணியானது நமது சம்மேளனத்துக்கு செய்யக்கூடிய ஒரு மகத்தான பணி. அது மட்டுமல்ல ஊழியர்களின் ஒட்டுமொத்த கட்டமைப்புக்கு செய்யக்கூடிய அறியப்பணி , இப்பணி  போராட்ட காலங்களில் நாம் ஊழியர்களின்  கோரிக்கையை முன்வைத்து  நடத்தக்கூடிய இயக்கங்களுக்கு நிர்வாகம் மற்றும் ஊழியர் விரோத அரசுக்கு வைக்கக்கூடிய முற்றுப்புள்ளியாக அமையும். 

ஆகவே இப்பணியில் சுணக்கம் காட்டாமல் ஒரு புத்துணர்ச்சியுடன் புறப்பட்டு ஒவ்வொரு தோழரையும் நேரில் சந்தித்து நமது GDS ஊழியர் நலனுக்காக நமது NFPE சம்மேளன தலைவர்கள் செய்த தியாகத்தால் இன்று வரை தொடர்ந்து போராடி பல முன்னேற்றங்களை பெற்று ரூபாய் 50,60 என்று 40 ஆண்டுகளுக்கு முன் பெற்ற சிறு தொகைக்கு  பின் TRCA  எனவும் இன்று Wage அதாவது ஊதியம் எனவும் அதற்கு சரிவிகிதத்தில் ஆண்டு ஊதிய உயர்வு எனவும், போனஸ், விடுப்பு, மகளிர் பேறுகால விடுப்பு,  மருத்துவத்தில் சில சலுகைகள் பணி விடுப்பின் போது ரூ .6000/- என்பது ரூ 48000/-, இன்று ரூ .1,20,000/- எனவும் வரக்கூடிய ஊதியக்குழுவில் சுமார் ரூ 5,00,000/-  வரை கிடைக்க வாய்ப்பு பணி உயர்வில் முன்னேற்றங்கள், வாரிசுக்கு வேலை இன்று அதில் சில மாற்றங்களுடன் அனைத்து வாரிசுதாரர்களுக்கும் (குடும்பத்தில் ஒருவருக்கு) வேலை உள்ளிட்ட சலுகைகளை பெற்றுத் தந்தது நமதுசம்மேளனம்.  

அந்த நமது NFPE சம்மேளனதின்  உறுப்பு சங்கமான AIPEU GDS  சங்கத்திற்கு உறுப்பினர் சேர்ப்பு நடைபெற்று வருகிறது. இந்த நேரத்தில் அனைத்து அஞ்சல் 3 முதல் CCL ஊழியர் வரை பொறுப்பாளர்கள், முன்னணி தோழர்கள், ஓய்வு பெற்ற தோழர்கள் என அனைத்து  தோழர்களும் தங்களால் முடிந்த வரை  ஊழியர்களை AIPEU GDS  சங்கத்தில் உறுப்பினராக சேர்த்திட வேண்டும் என பணிவோடு AIPEU GDS மாநிலச் சங்கம் கேட்டுக்கொள்கிறது.

கோரிக்கையை முன்வைத்து!!
ஆர்ப்பாட்டம் செய்வது NFPE !!!!!! 
தர்ணா நடத்துவது NFPE !!!!!! 
பேரணி நடத்துவது NFPE !!!!!! 
முற்றுகை போராட்டம் நடத்துவது NFPE !!!!!! 
டெல்லியில் போராடுவது NFPE !!!!!! 
அமைச்சர் அலுவலகம் முன் போராடுவது NFPE !!!!!
தனியாக போராடி வென்று வருவது NFPE !!!!!! 
வேலைநிறுத்தத்தின் மூலம் 
வெற்றிகள்  பலகண்டது NFPE !!!!!!    
JCA அமைத்து போராடுவது NFPE !!!!!! 
NJCA அமைத்து போராடுவது NFPE !!!!!! 
ஊழியர் விரோத அரசை கண்டித்து
போராடுவது NFPE !!!!!
மக்களுக்காக போராடுவது NFPE !!!!!! 
போராட்டகுணமே உயிர்மூச்சாய் ஊழியர் கோரிக்கை வெல்வதில் அரசுக்கு சிம்மசொப்பனமாய் திகழும் NFPE தனது உறுப்பு சங்கமாம் AIPEU GDS சங்கத்திற்கு  அதாவது மிக அதிக ஊழியர்களை கொண்ட சங்கமாக அகில இந்திய அளவில் வரவேண்டும் என்ற நோக்கோடு அதிக ஊழியர்களை சேர்த்திட உதவிடுமாறு மூத்த முன்னணி தோழர்களை மாநில சங்கம் கேட்டுக்கொள்கிறது.  

No comments:

Post a Comment