Friday, 5 January 2018

GDS ஊழியரின் 2018 ஓலக் குரல் 

GDS ஊழியர்கள் என்றால் அடிமட்ட ஊழியர்கள் அவர்களை தங்கள் இஷ்டம் போல் பயன்படுத்திகொள்ளலாம் என நினைத்து ஆட்குறைப்பு, ஊதியக்குறைப்பு, பணி இணைப்பு, பணியிடமாற்றம், ஆண்டுக்கு ஆண்டு படிப்படியாக வளர்ந்து கொண்டே செல்லும் டார்கெட் அதன் அதிகப்படியான நிலை,  தனது ஊதியத்தை இழக்கும் அளவுக்கு மட்டுமல்ல ஒவ்வொரு வீடு வீடாக பிச்சை எடுக்கும் அளவுக்கு நிர்வாகத்தால் கொடுகப்படும் //டார்ச்சர்// எல்லை தாண்டி செல்லும் அடக்கு முறையால் ஒவ்வொரு GDS ஊழியரும் கண்ணீர் சிந்தி ஏப்ரல் முதல் 9 மாத தாக்கத்தை சுமப்பர். 
    நிர்வாகத்தின் அடுத்த கட்ட நடவடிக்கையாக ஆண்டுதோறும் ஜனவரி முதல் மார்ச் வரை படும் சிரமம் கொஞ்சமும் சொல்லமுடியா துயரமாக பொதி சுமக்கும் கழுதைக்கு மேலாக அனுபவிக்கும் நிலை. தீருமா ??? 
         ஜனவரி முதல் மார்ச் வரை தற்போது ஊழியர்களை ஓட்ட பந்தய குதிரைபோல் ஒவ்வொரு மண்டலத்திலும், அருகில் உள்ள கோட்டம் முந்தி விட்டது நமது ஊழியர்களே நீங்கள் பின்தங்க கூடாது நீங்கள் அந்த கோட்டத்தை விட  அதிக கணக்குகள் பிடிக்க வேண்டும் புறப்படு, புறப்படு என சாட்டையை எடுத்து ஊதியத்தை குறைத்து விடுவேன், விடுப்பில் அனுப்பிவிடுவேன், மற்ற பணியை இணைத்து விடுவேன் என சவுக்கால் அடித்து விரட்டும் நிர்வாகமே உனது அடக்குமுறைக்கு முடிவு எப்போது??? காலம் பதில் சொல்லட்டும்.  ஊழியர்கள் விழித்தெழட்டும் .
           இந்தியநாடே!! கார்ப்பரேட்களுக்கு அடிமை. இந்திய நாட்டிலே பணம் படைத்தவனுக்கு ஏழைகள் அடிமை// அதிகாரிகளுக்கு ஊழியர்கள் அடிமை // அஞ்சல் துறையில் -- அஞ்சல் நிர்வாகத்துக்கு, மாநில. மண்டல, கோட்ட, துணை கோட்ட, மெயில் ஓவர்சியர் உள்ளிட்ட அத்துனைக்கும் ஒரே அடிமை GDS. சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலான அஞ்சல்துறை அடிமை GDS, GDS ,GDS !!!!! இந்த நிலையில் நாளை நடப்பதில்  சிந்தனைகொள்வோம்


GDS ஊழியர்களின் திரு கமலேஷ் சந்திரா தலைமையிலான ஊதியக்குழு தொடர்பான சில அதிகார பூர்வமான அதிகாரிமூலம் பெறப்பட்ட தகவல்கள்
 கடந்த 29.12.2017 க்கு முன்பாக நமது அஞ்சல் நிர்வாகத்தால் மந்திரிசபை ஊதியக்குழு  குறிப்பு தயார் செய்யப்பட்டு மந்திரி சபை ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுவிட்டது.  நிர்வாகம் சாதகமாக அல்லது பாதகத்துடன் கூடிய ஒரு சில சாதக அம்சங்களுடன் அனுப்பி உள்ளதா ? என்பது ????? 

      மந்திரி சபை ஒப்புதலுக்கு பின் அரசிதழில் வெளியாகி  நமது இலாக்காவிற்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பின் அஞ்சல் நிர்வாகம் ஆணையாக வெளியிடும். அது ஊழியர்களுக்கு சாதகமா அல்லது அஞ்சல் இலாக்காவிற்கு சாதகமா என தெரியவரும் .
          இவ்வறிக்கை 01.01.1996 திரு.நீதிபதி தல்வார் ஊதியக்குழு பரிந்துரையை சார்ந்திருக்குமா அல்லது திரு ஆர் .எஸ் . நடராஜமூர்த்தி 01.01.2006 ஊதியக்குழு பரிந்துரையான ஊழியர் விரோத பரிந்துரையாக இருக்குமா என விரைவில் வெளியாக இருக்கிறது.
         கசிந்த தகவல்கள்: ஊதியம் நிர்ணயத்தில் சில மாற்றங்களுடன் 2 ஊதியம் நிர்ணயம் செய்யப்படும்.
           ஆண்டு ஊதிய உயர்வு 3% என்பது ஆணையாக வரயிருக்கிறது.
             பணி  மூப்பு ஊழியர்களுக்கு எந்த ஊதியக்குழு ஆணையிலும் இல்லாத ஒரு சாதகமான செய்தி. பணிக்காலம் 12, 24, 36 என்ற அளவீட்டில் ஒவ்வொரு 12 ஆண்டுக்கும் இரண்டு மடங்கு ஆண்டு ஊதிய உயர்வு  வழங்கப்பட இருக்கிறது. அதாவது  ரூ 10000/- அடிப்படை ஊதியம் பெறும்  12,24,36, பணிக்காலத்தை 31.12.2015 ல் முடித்த ஊழியர்களுக்கு ரூ.600/-  1200/-  1800/- என பணிக்கால ஊதியப்பலன் ஊதியத்துடன் இணைத்து அதற்கும் இலாக்கா ஊழியர் பெறும் DA அதே காலகட்டத்தில் வழங்கப்படும். 
       புதிய ஊதிய நிர்ணயம் கடந்த 01.01.2016 முதல் நிர்ணயம் செய்யப்பட்டு அதற்கான நிலுவைத்தொகை வழங்கப்படும் 
       மேலும் பல சரியான  தகவல்கள் கிடைத்தவுடன் தெரிவிக்கப்படும்.

பாதக தகவல்கள் : வருவாய் அடிப்படையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்படும். 
 ஒரு அலுவலக  BPM + ABPM = மாத ஊதியம் + பஞ்சப்படி + போனஸ் + விடுப்பு ஊதியம்+ பேறுகால ஊதியம் + அலுவலகத்திற்கு வழங்கும் கணினி ,மேசை, நாற்காலி மற்றும் இதர அலுவலக பொருட்கள் + உயர் அதிகாரி முதல் மெயில் ஓவர்சியர் வரை அனைத்து அதிகாரிகளின் அன்றைய ஊதியத்தில் ஒரு பகுதி + அவர்களின் பயணப்படி உள்ளிட்ட, மேலும் சில அலுவலக செலவின கணக்காக எடுத்துக்கொள்ளப்படும் .
       மேற்கொண்ட செலவின மொத்த தொகையில் 25% மிக குக்கிராமங்களுக்கும் , 50% சிறு நகரத்தை ஒட்டிய கிராமங்களுக்கும் , 75% நகரத்திற்கும், 100% பெரு நகரத்தில் உள்ள கிளை அஞ்சலகங்கள் வருவாய் ஈட்டித் தரவேண்டிய கட்டாயத்தில் வருகிறது புதிய ஊதியக்குழு ஆணை . 
      இந்த வருவாய் இருந்தால் தான் ஆண்டு ஊதிய உயர்வு , 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருவாயின் அடிப்படையில் ஊதிய நிர்ணயம் என வருகிறது புதிய ஊதியக்குழு!!! சிந்திப்பீர் ஊழியர்களே !!!!!!
       GDS  இலாக்காவின் என்றுமே அடிமை என்பதை மறக்காமல், ஒன்று பட்டு போராடாமல் அநீதி களைய முடியாது என்பதை மனதில் கொண்டு /// தினம் ஒரு செய்தி வெளியிட்டு ஊழியர்களை குழப்பத்தில் விடவேண்டாம் என கூறி எப்படியும் இம்மாத இறுதிக்குள் மந்திரிசபை ஒப்புதல் பெற்று , அரசிதழில் வெளியிட்டு அஞ்சல் நிர்வாகம் ஆணை வெளியிடலாம் என எதிர்பாக்கப்படுகிறது 

அன்புடன் ஆர்.தனராஜ் மாநில செயலாளர் AIPEU GDS (NFPE )
          


No comments:

Post a Comment