Tuesday, 3 April 2018



அன்புத் தோழர்களே, வணக்கம் .

நமது அகில இந்திய மாநாடு கடந்த மார்ச் மாதம் 16 மற்றும் 17 தேதிகளில் அலகாபாத் நகரில் சிறப்பாக நடைபெற்றது. நமது NFPE சம்மேளன மூத்த தோழர்கள் தோழர் M .கிருஷ்ணன், தோழர் KVS , தோழர் சீதாலெக்ஷிமி உள்ளிட்ட தோழர்களும், சம்மேளன மா பொதுச்செயலாளர் தோழர் RN . பராசர் , தலைவர் கிரிராஜ் சிங் அஞ்சல் 3 தலைவர் தோழர் ஜே. ராமமூர்த்தி , நிதி செயலர் தோழர் பல்வீந்தர் சிங் , அஞ்சல் 4 செயலாளர் தோழர் முகந்தி மற்றும் அஞ்சல் 3 அகில இந்திய உதவி பொது செயலாளர் தோழர் A .வீரமணி உள்ளிட்ட முன்னனி தோழர்கள் கலந்துகொண்டு மாநாட்டை சிறப்புடன் நடத்திக்கொடுத்தனர். 

இம் மாநாட்டை தலைமை ஏற்று உத்திரபிரதேச மாநில அஞ்சல் 3 முன்னாள் மூத்த தலைவர் தோழர் T P .மிஸ்ரா அவர்கள் நடத்தி கொடுத்தார் தோழர் அவர்களுக்கு தமிழ் மாநில சங்கம் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

மாநாட்டில் அகில இந்திய தலைவராக (இமாச்சல் மாநில செயலாளர்) தோழர் வீரேந்திர சர்மா,   பொதுச் செயலாளராக தோழர் பி .பாண்டுரங்கராவ் , பொருளாலராக  தோழர் குமரன்  நம்பியார் மற்றும் துணைப் பொதுச்செயலாளராக தோழர் R.தனராஜ் , உதவி பொதுச்செயலாளராக தோழர் KC  ராமசந்திரன் அவர்களும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர் .

தோழர்களின் ஒத்துழைப்புடன் சிறப்பாக செயல்பட தமிழ் மாநில சங்கம் வாழ்த்துகிறது .. 

No comments:

Post a Comment