Monday, 23 April 2012
விதி அறிவோம் ! நிலை பெறுவோம் !
விதி அறிவோம் ! நிலை பெறுவோம் !
அன்புத் தோழர்களே ! வணக்கம் !
இன்று நாம் புதிதாய் பிறந்தோம் !
ஆம் ! அடிமை வாழ்வில் இருந்து மீண்டோம். !
சுதந்திர மனிதனாக ஆனோம். !
நமக்கென்று ஒரு சங்கம் ! எஜமானர்கள் இங்கே இல்லை !
வரலாற்று சிறப்பு மிக்க NFPE பேரியக்கத்தில் P3, P4, R3, R4,
ADMIN, ACCOUNTS, SBCO, CIVIL WING என்ற 8 சங்கங்களுடன்
இணைந்து ஒன்பதாவதாக இன்று பிறந்தோம். !
இதுவே AIPEU GDS NFPE. இங்கே நாம் சுதந்திரமாக
செயல் படலாம். NFPE உறுப்பு சங்கங்களின் ஆதரவைப்
பெற்று பலமுடன் எழுந்து நிற்கலாம், P3 , P4, R3, R 4 போல
தனித்தன்மையுடன், அதே நேரத்தில் கூட்டு பேர சக்தியாக!.
சிந்திக்க விடாமல் நம்மை இருட்டிலேயே வைத்திருந்த
காலம் இன்று போனது !
இனி நாம் சிந்திப்போம் ! சட்டங்களை அறிவோம். !
விதிகளை உணர்வோம். ! அதிகாரிகளுடன் வாதிடுவோம் !
இழந்த உரிமைகளை மீட்டெடுப்போம்!
அதற்கான பகுதியே இது !
முக்கியமான இலாக்கா உத்திரவுகளை முதலில் அளிக்கிறோம்!
கூடவே தாய் மொழியில் வெகு விரைவில் சட்ட நுணுக்கங்களை ,
தனித்தன்மையுடன், அதே நேரத்தில் கூட்டு பேர சக்தியாக!.
சிந்திக்க விடாமல் நம்மை இருட்டிலேயே வைத்திருந்த
காலம் இன்று போனது !
இனி நாம் சிந்திப்போம் ! சட்டங்களை அறிவோம். !
விதிகளை உணர்வோம். ! அதிகாரிகளுடன் வாதிடுவோம் !
இழந்த உரிமைகளை மீட்டெடுப்போம்!
அதற்கான பகுதியே இது !
முக்கியமான இலாக்கா உத்திரவுகளை முதலில் அளிக்கிறோம்!
கூடவே தாய் மொழியில் வெகு விரைவில் சட்ட நுணுக்கங்களை ,
விதி முறைகளை உங்களுக்குத் தருகிறோம் ! GDS ஊழியர்கள்
எவருக்கும் வழி காட்டும் தோழனாக எழுந்து நிற்போம். !
ஒன்றாகப் பயணிப்போம்! என்ன ? பயணத்தை துவக்கலாமா ?
*******************************************************************************
விதி 617 P&T MANUAL VOLUME II வின் படி
GDS ஊழியருக்குப் புரியும் வண்ணம் அதிகாரிகள் தாய் மொழியிலே
எந்த வித கடித தொடர்பு அல்லது அறிவுறுத்தல் செய்திட வேண்டும்.
Rule 617 of P&T Manual, Volume-II, prescribes inter alia that the Inspector of Post Offices should use simple language in his correspondence so that it can be understood by the grade of officials with whom he deals.
All India Postal Employees Union class III has brought to the notice of the Director-General that the communication being received by the ED Agents from Inspectors of Posts Offices are written in difficult language which makes it impossible for the ED Agents who are not well educated to understand and implement the instructions.
Since the intention of issuing instructions to the ED Agents in accordance with the provisions of Rule 617 ibid is to facilitate proper action by the ED Agents, it is essential that all communications emanating from the Inspectors of Post office should invariably be couched in simple language. Since the ED Agents might not happen to possess a working knowledge of Hindi or English in many cases, the practice of issuing instructions and correspondence in regional languages should be adopted.
Instructions may pleased be issued to all the Superintendents/Senior Superintendents in the Circle to ensure compliance with the above instructions. The Superintendents should, in accordance with the provisions of Rule 617, ascertain in course of their visits and inspections, compliance with the above provisions of the rules. Any lapse in the regard may be viewed seriously.
(DG P&T No. 58-46/77-CI, dated 16.2.1978)
*********************************************************************************
................................................... தொடர்வோமா ?
AIPEU GDS NFPE REGIONAL MEET AT CENTRAL REGION
AIPEU GDS NFPE REGIONAL MEET AT CENTRAL REGION
அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் GDS (NFPE) இன் மத்திய மண்டல கலந்தாய்வுக் கூட்டம் 22.04.2012 அன்று மாலை சுமார் 3.00 மணியளவில் பாபநாசம் தங்கமுத்து மாரியம்மன் திருமண மண்டபத்தில் AIPEU GDS NFPE
மாநிலச் சங்க பொறுப்பாளர்களால் கூட்டப்பட்டது.
கூட்டத்திற்கு தோழர். பட்டுக்கோட்டை இளங்கோவன் தலைமையேற்க ,
புதுகை கோட்டச் செயலர் தோழர். ஜானகிராமன் வரவேற்புரையாற்றினார்.
AIPEU GDS NFPE சங்கத்தின் அகில இந்திய துணை பொதுச் செயலரும் தமிழ் மாநில சங்கப் பொறுப்பாளருமான தோழர். R. தனராஜ் அவர்கள்
எழுச்சியுடன் தொடக்க உரையாற்றினார்.
அவர் தனது உரையில் மகாதேவையா தலைமையிலான அகில இந்திய சங்கத்தின் தன்னிச்சையான போக்கு குறித்தும் , NFPE அமைப்பில் இருந்து விலகி , அகில இந்திய மட்டத்தில் எந்த ஒருஊழியர் பிரச்சினையையும் தீர்க்க இயலாமல் அவர் உள்ள சூழ் நிலையையும் , அப்பாவி GDS ஊழியர் பணம்கோடிக்கணக்கில் கொள்ளை போனதையும் குறித்து
விளக்கமாக உரையாற்றினார். மேலும் மாநிலச் சங்கம் ஒய்வு பெற்ற
ஒரு சிலரது கட்டுப்பாட்டில் இயங்கும் அடிமைக் கூடமாக உள்ளதையும் சுட்டிக் காட்டினார்.
தொடர்ந்து அஞ்சல் மூன்றாம் பிரிவு சங்கத்தின் மத்திய மண்டலச் செயலர் தோழர். A. மனோகரன் அவர்கள் தற்போதுள்ள GDS மாநிலச்
சங்கத்தின் செயல் படாத தன்மையையும் , GDS ஊழியர்கள் தாங்கொணாத
பிரச்சினைகளில் சிக்கித் தவிப்பதையும் சுட்டிக் காட்டினார்.
ஸ்ரீரங்கம், திருச்சி ,பாபநாசம் , மன்னார்குடி, திருத்துறைபூண்டி,
கும்பகோணம் , புதுக் கோட்டை, பட்டுக்கோட்டை ,மயிலாடுதுறை,
சீர்காழி , நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர் ,விருத்தாசலம் உள்ளிட்ட
கோட்ட/ கிளைகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட GDS சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் வந்திருந்தது , கலந்தாய்வுக்
கூட்டத்தை உற்சாகப் படுத்தியது.
திருச்சி கோட்டச் செயலர் தோழர். பன்னீர்செல்வம், திருத்துறை பூண்டி
முன்னாள் கோட்டச் செயலர் தோழர். துரையப்பன் ஆகியோர் உரை
GDS ஊழியர்களது சிந்தனையைத் தூண்டும் விதம் சிறப்பாக அமைந்தது.
இறுதியாக வாழ்த்துரை வழங்கிட அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலர் அழைக்கப் பட்டார். அவர் தனது உரையில், UPTW காலம் முதல்,
1954 இல் NFPTE சம்மேளனம் துவங்கியது தொடங்கி, 1964 இல் GDS ஊழியர் சங்கம் குறித்து அன்றைய துறை அமைச்சர் பாபு ஜகஜீவன் ராம் அவர்களுடன் ஏற்பட்ட ஒப்பந்தம், 1993 மத்திய அரசு ஊழியருக்கான
புதிய சங்க அங்கீகார விதி, 1995 GDS ஊழியருக்கான சங்க அங்கீகார விதி
2003 சம்மேளன குழுக் கூட்டத்தின் முடிவு , 2007 சம்மேளன அங்கீகாரம்
கோரிய நிலை, கல்கத்தா சம்மேளன கௌன்சில் , DEC.2008 GDS சங்கத்தின் தன்னிச்சையான வேலை நிறுத்தம், நடராஜமுர்த்தி கமிட்டியில் அதன்
நிலைப்பாடு , 2011 GDS CONDUCT AND ENGAGEMENT RULES , மற்றும் அமராவதி அகில இந்திய மாநாடு , AIPEU GDS NFPE துவங்கியதன் அவசியம் என்பன குறித்து விளக்கமாக நீண்ட உரையாற்றினார். மறைக்கப் பட்ட வரலாற்று
பகுதிகளை, விளக்கமாக GDS ஊழியர் புரிந்து கொள்ள, இது ஒரு வாய்ப்பாக அமைந்தது என்றால் மிகையாகாது.
கூட்ட முடிவில் வந்திருந்த அனைத்து GDS ஊழியர்களும் உற்சாகமாக
NFPE இன் அமைப்பிற்குள் GDS சங்கம் அமைப்பதே சிறந்த முடிவு என்றும்
அதனை தம் பகுதியில் உடன் செயல் படுத்துகிறோம் என்றும்
உறுதியேற்றனர்.
நன்றியுரையுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது. அந்தந்த பகுதியில் இருக்கும் P3, P4 , GDS தோழர்கள் உடன் இணைந்து செயலாற்றி நம்
NFPE GDS சங்கத்தை வலுவுடன் அமைத்திட வேண்டுகிறோம்.
NFPE நமது இயக்கம். NFPE நமது சக்தி.
NFPE நமது வளர்ச்சி. NFPE நமது வெற்றி.
NFPE வெல்கவே !
Saturday, 14 April 2012
PROFILE OF GENERAL SECRETARY, AIPEU GDS (NFPE)
Com. P.Panduranaga Rao, General Secretary, AIPEU GDS (NFPE)
Date of Birth : 06.01.1958Educational Qualifications : MSc
Joined as BPM on : 03.04.1993
Award taken from Dr. T.Rangarajan, Ex-Governor,A.P. : 15.10.1998
Elected as Divisional Secretary, Gudur : 10.12.2003
Elected as Circle Secretary : 13.01.2004
Elected as Director in P & T Co-op Society Nellore Dist : 15.07.2007
Elected as Asst General Secretary : 26.02.2008
Elected as General Secretary AIPEU GDS(NFPE) : 07.04.2012
Friday, 13 April 2012
GDS ஊழியருக்கான DA உத்திரவு
GDS ஊழியருக்கான DA உத்திரவு இன்று வெளியிடப்பட்டது. அதன் நகல்
கீழே அளித்துள்ளோம் . அனைத்து GDS ஊழியருக்கும் இதனைத் தெரிவிக்கவும்.
GOVERNMENT OF INDIA
MINISTRY OF COMMUNICATIONS & IT
DEPARTMENT OF POSTS
(ESTABLISHMENT DIVISION)
Dak Bhawan
Sansad Marg
NEW DELHI-110 001
No.14-01/2011-PAP Dt.12th April,2012
To
All Chief Postmasters General,
All G.Ms.(PAF)/Director of Accounts (Postal).
Subject::- Payment of Dearness Allowance to Gramin Dak Sevaks (GDS) at revised rates with effect from 01-01-2012 onwards - Reg.
Consequent upon grant of another installment of dearness allowance with effect from 01st JANUARY, 2012 to Central Government Employees, vide Government of India, Ministry of Finance, Department of Expenditure O.M. No.1(1)/2012-EII(B), dated 3rd April, 2011, duly endorsed vide this Department's letter No.8-1/2012-PAP Dated 3.4.12, the Gramin Dak Sevaks (GDS), have also become entitled to the payment of dearness allowance on basic TRCA at the revised rate with effect from 01-01-2012. It has, therefore, been decided that the dearness allowance payable to the Gramin Dak Sevaks shall be enhanced from the existing rate of 58% to 65% on the basic Time Related Continuity Allowance, with effect from 1st January, 2012.
2. The additional installment of dearness allowance payable under this order shall be paid in cash to all Gramin Dak Sevaks. The payment of arrears of dearness allowance for the month of January to March, 2012, shall not be made before the date of disbursement of TRCA of March, 2012.
3. The expenditure on this account will be debited to the Sub Head 'Salaries' under the relevant head and should be met from the sanctioned grant.
4. This issues with the concurrence of Integrated Finance Wing vide their Diary No.104/FA/12/CS, dated 12TH April, 2012
Yours faithfully
Sd/-
(KALPANA RAJSINGHOT)
DIRECTOR (ESTT)
TELE:23096036/23036793
FAX:011-23096007/23096036AIPEU GDS (NFPE) LAUNCHED ITS WEB SITE TODAY
AIPEU - GDS (NFPE) Union launched its website today .
Com. M. Krishnan, Secretary General, NFPE has formally launched the website today at 13.00 hours.
following is the link.
http://aipeugdsnfpe.blogspot.in/
http://aipeugdstn.blogspot.in/
please follow this link daily so as to know the day to day affairs of the organisation and
the department.
please follow this link daily so as to know the day to day affairs of the organisation and
the department.
A NEW GDS UNION FORMED UNDER NFPE
மூன்று லட்சம் GDS ஊழியர்களின் நம்பிக்கை நட்சத்திரம் - NFPE
57 ஆண்டு கால அசையா நம்பிக்கை - NFPE
பிகானீரில் , பொங்கைகானில், மரியானில், பதான்கோட்டில்,
இந்திரப்ரஸ்தில் ரத்தம் சிந்திய தியாகிகளின் வடிவமே - NFPE
1968 வேலை நிறுத்தத்தில் ஆளும் காங்கிரஸ் FNPO வை
உருவாக்கியபோதும் அசையாத சக்தி - NFPE
உருவாக்கியபோதும் அசையாத சக்தி - NFPE
1977 ஆளும் ஜனதா அரசில் BJP தனக்கென BPEF ஐ உருவாக்கியபோதும் மலையாக நின்றதே நம் NFPE .
அஞ்சல் மூன்று, அஞ்சல் நான்கு, RMS மூன்று, RMS நான்கு, ACCOUNTS, SBCO, நிர்வாகப் பிரிவு, சிவில் WING என எட்டு சங்கங்கள் கொண்ட இரும்புக் கோட்டையே நம் NFPE .
இன்று ஒன்பதாவது சங்கமாக உருவானதே - AIPEU GDS (NFPE).
ஆம். மராட்டிய மண்ணில் அமராவதி நகரில் கடந்த 07.04.2012 அன்று ஆயிரக் கணக்கான GDS ஊழியர்கள் எழுச்சியுடன் துவக்கிய சங்கமே
AIPEU GDS (NFPE)
ஏங்கிக் கிடந்த GDS ஊழியருக்கு ஏற்றம் தரவே இந்த சங்கம் !.
NFPE இன் உறுப்பு சங்கமாக தோன்றிய தோழனே இந்த சங்கம் !.
NFPE ஐ ஏசியும் பேசியும் தன உடல் வளர்த்த சங்கமல்ல இது !.
தானும் போராடாமல், போராட வந்த NFPE ஐயும் தடுத்த சக்தியை
விரட்டவே இந்த சங்கம் !.
சங்கம் தோன்றிய முழு விபரம் நாளை NFPE வலைத்தளத்தில்
பார்க்கலாம். அதற்கு முன்னர், ஒரு முன்னோட்டமே இந்த செய்தி.
கூடிய எழுச்சிக் கூட்டத்தில் அமைந்த நிர்வாகிகள் இதோ :-
அகில இந்தியத் தலைவர் : தோழர். பிஜய் கோபால் சூர் - மேற்கு வங்கம்.
பொதுச் செயலர் : தோழர். P. பாண்டுரங்க ராவ் - ஆந்திர பிரதேஷ்.
நிதிச் செயலர் : தோழர். முருகன் - கேரளா.
தமிழகத்தில் இருந்து தலைமை தாங்க தேர்ந்தெடுக்கப்பட்ட அகில இந்திய
சங்கத்தின் நிர்வாகிகள்:-
தோழர். R. தன்ராஜ், துணை பொதுச் செயலர் (DEPUTY GENL SEC)- திருவாரூர்.
தோழர்.K.C. ராமசந்திரன், உதவிப் பொதுச் செயலர் - திருச்செங்கோடு .
NFPE யே சக்தி ! NFPE யே இயக்கம் !
NFPE யே வாழ்வு ! NFPE யே வெற்றி!
AIPEU GDS (NFPE) வரலாறு படைத்திட வாழ்த்துவோம்! வாழ்கவே! வளர்கவே !
Subscribe to:
Posts (Atom)