Friday, 13 April 2012


A NEW GDS UNION FORMED UNDER NFPE

மூன்று லட்சம் GDS ஊழியர்களின் நம்பிக்கை நட்சத்திரம் - NFPE
57 ஆண்டு கால அசையா நம்பிக்கை - NFPE
பிகானீரில் , பொங்கைகானில், மரியானில், பதான்கோட்டில்,
இந்திரப்ரஸ்தில் ரத்தம் சிந்திய தியாகிகளின் வடிவமே - NFPE
1968 வேலை நிறுத்தத்தில் ஆளும் காங்கிரஸ் FNPO வை
உருவாக்கியபோதும் அசையாத  சக்தி - NFPE
1977 ஆளும் ஜனதா   அரசில் BJP தனக்கென BPEF ஐ உருவாக்கியபோதும் மலையாக நின்றதே  நம் NFPE .
அஞ்சல் மூன்று, அஞ்சல் நான்கு, RMS மூன்று,  RMS நான்கு,  ACCOUNTS, SBCO,   நிர்வாகப் பிரிவு, சிவில் WING  என  எட்டு சங்கங்கள் கொண்ட இரும்புக் கோட்டையே  நம் NFPE .
இன்று ஒன்பதாவது சங்கமாக உருவானதே - AIPEU GDS (NFPE).
ஆம்.  மராட்டிய மண்ணில் அமராவதி  நகரில் கடந்த 07.04.2012 அன்று ஆயிரக் கணக்கான GDS  ஊழியர்கள் எழுச்சியுடன் துவக்கிய சங்கமே
                                                 AIPEU GDS (NFPE)
      ஏங்கிக் கிடந்த  GDS  ஊழியருக்கு ஏற்றம் தரவே இந்த சங்கம் !.
      NFPE இன் உறுப்பு சங்கமாக  தோன்றிய தோழனே இந்த சங்கம் !.
      NFPE ஐ  ஏசியும்  பேசியும்  தன உடல் வளர்த்த சங்கமல்ல இது !.
      தானும் போராடாமல், போராட வந்த NFPE ஐயும் தடுத்த சக்தியை 
      விரட்டவே இந்த சங்கம் !.
சங்கம் தோன்றிய முழு விபரம் நாளை NFPE  வலைத்தளத்தில்
பார்க்கலாம்.  அதற்கு முன்னர், ஒரு முன்னோட்டமே இந்த செய்தி.

கூடிய  எழுச்சிக் கூட்டத்தில்  அமைந்த நிர்வாகிகள் இதோ :-

அகில இந்தியத் தலைவர் : தோழர். பிஜய் கோபால் சூர் - மேற்கு வங்கம்.
பொதுச் செயலர் : தோழர். P. பாண்டுரங்க ராவ்  - ஆந்திர பிரதேஷ்.
நிதிச் செயலர் : தோழர். முருகன் - கேரளா.

தமிழகத்தில் இருந்து தலைமை   தாங்க தேர்ந்தெடுக்கப்பட்ட அகில இந்திய
சங்கத்தின் நிர்வாகிகள்:-
தோழர். R.  தன்ராஜ், துணை பொதுச் செயலர் (DEPUTY GENL SEC)-  திருவாரூர்.
தோழர்.K.C. ராமசந்திரன், உதவிப் பொதுச் செயலர் - திருச்செங்கோடு . 

NFPE யே சக்தி !                                                                         NFPE  யே இயக்கம் !
NFPE  யே வாழ்வு !                                                                   NFPE யே வெற்றி!
                        AIPEU GDS (NFPE)  வரலாறு படைத்திட வாழ்த்துவோம்! 
வாழ்கவே!                                                                                                         வளர்கவே !

No comments:

Post a Comment