AIPEU GDS NFPE REGIONAL MEET AT CENTRAL REGION
அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் GDS (NFPE) இன் மத்திய மண்டல கலந்தாய்வுக் கூட்டம் 22.04.2012 அன்று மாலை சுமார் 3.00 மணியளவில் பாபநாசம் தங்கமுத்து மாரியம்மன் திருமண மண்டபத்தில் AIPEU GDS NFPE
மாநிலச் சங்க பொறுப்பாளர்களால் கூட்டப்பட்டது.
கூட்டத்திற்கு தோழர். பட்டுக்கோட்டை இளங்கோவன் தலைமையேற்க ,
புதுகை கோட்டச் செயலர் தோழர். ஜானகிராமன் வரவேற்புரையாற்றினார்.
AIPEU GDS NFPE சங்கத்தின் அகில இந்திய துணை பொதுச் செயலரும் தமிழ் மாநில சங்கப் பொறுப்பாளருமான தோழர். R. தனராஜ் அவர்கள்
எழுச்சியுடன் தொடக்க உரையாற்றினார்.
அவர் தனது உரையில் மகாதேவையா தலைமையிலான அகில இந்திய சங்கத்தின் தன்னிச்சையான போக்கு குறித்தும் , NFPE அமைப்பில் இருந்து விலகி , அகில இந்திய மட்டத்தில் எந்த ஒருஊழியர் பிரச்சினையையும் தீர்க்க இயலாமல் அவர் உள்ள சூழ் நிலையையும் , அப்பாவி GDS ஊழியர் பணம்கோடிக்கணக்கில் கொள்ளை போனதையும் குறித்து
விளக்கமாக உரையாற்றினார். மேலும் மாநிலச் சங்கம் ஒய்வு பெற்ற
ஒரு சிலரது கட்டுப்பாட்டில் இயங்கும் அடிமைக் கூடமாக உள்ளதையும் சுட்டிக் காட்டினார்.
தொடர்ந்து அஞ்சல் மூன்றாம் பிரிவு சங்கத்தின் மத்திய மண்டலச் செயலர் தோழர். A. மனோகரன் அவர்கள் தற்போதுள்ள GDS மாநிலச்
சங்கத்தின் செயல் படாத தன்மையையும் , GDS ஊழியர்கள் தாங்கொணாத
பிரச்சினைகளில் சிக்கித் தவிப்பதையும் சுட்டிக் காட்டினார்.
ஸ்ரீரங்கம், திருச்சி ,பாபநாசம் , மன்னார்குடி, திருத்துறைபூண்டி,
கும்பகோணம் , புதுக் கோட்டை, பட்டுக்கோட்டை ,மயிலாடுதுறை,
சீர்காழி , நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர் ,விருத்தாசலம் உள்ளிட்ட
கோட்ட/ கிளைகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட GDS சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் வந்திருந்தது , கலந்தாய்வுக்
கூட்டத்தை உற்சாகப் படுத்தியது.
திருச்சி கோட்டச் செயலர் தோழர். பன்னீர்செல்வம், திருத்துறை பூண்டி
முன்னாள் கோட்டச் செயலர் தோழர். துரையப்பன் ஆகியோர் உரை
GDS ஊழியர்களது சிந்தனையைத் தூண்டும் விதம் சிறப்பாக அமைந்தது.
இறுதியாக வாழ்த்துரை வழங்கிட அஞ்சல் மூன்றின் மாநிலச் செயலர் அழைக்கப் பட்டார். அவர் தனது உரையில், UPTW காலம் முதல்,
1954 இல் NFPTE சம்மேளனம் துவங்கியது தொடங்கி, 1964 இல் GDS ஊழியர் சங்கம் குறித்து அன்றைய துறை அமைச்சர் பாபு ஜகஜீவன் ராம் அவர்களுடன் ஏற்பட்ட ஒப்பந்தம், 1993 மத்திய அரசு ஊழியருக்கான
புதிய சங்க அங்கீகார விதி, 1995 GDS ஊழியருக்கான சங்க அங்கீகார விதி
2003 சம்மேளன குழுக் கூட்டத்தின் முடிவு , 2007 சம்மேளன அங்கீகாரம்
கோரிய நிலை, கல்கத்தா சம்மேளன கௌன்சில் , DEC.2008 GDS சங்கத்தின் தன்னிச்சையான வேலை நிறுத்தம், நடராஜமுர்த்தி கமிட்டியில் அதன்
நிலைப்பாடு , 2011 GDS CONDUCT AND ENGAGEMENT RULES , மற்றும் அமராவதி அகில இந்திய மாநாடு , AIPEU GDS NFPE துவங்கியதன் அவசியம் என்பன குறித்து விளக்கமாக நீண்ட உரையாற்றினார். மறைக்கப் பட்ட வரலாற்று
பகுதிகளை, விளக்கமாக GDS ஊழியர் புரிந்து கொள்ள, இது ஒரு வாய்ப்பாக அமைந்தது என்றால் மிகையாகாது.
கூட்ட முடிவில் வந்திருந்த அனைத்து GDS ஊழியர்களும் உற்சாகமாக
NFPE இன் அமைப்பிற்குள் GDS சங்கம் அமைப்பதே சிறந்த முடிவு என்றும்
அதனை தம் பகுதியில் உடன் செயல் படுத்துகிறோம் என்றும்
உறுதியேற்றனர்.
நன்றியுரையுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது. அந்தந்த பகுதியில் இருக்கும் P3, P4 , GDS தோழர்கள் உடன் இணைந்து செயலாற்றி நம்
NFPE GDS சங்கத்தை வலுவுடன் அமைத்திட வேண்டுகிறோம்.
NFPE நமது இயக்கம். NFPE நமது சக்தி.
NFPE நமது வளர்ச்சி. NFPE நமது வெற்றி.
NFPE வெல்கவே !
No comments:
Post a Comment