48 மணி நேர NFPE வேலைநிறுத்தம் தள்ளிவைக்கப்படுகிறது
அன்புத் தோழர்களே! வணக்கம்.
நமது NFPE சம்மேளனம் 4 கோரிக்கைகளை முன் வைத்து 06.11.2015 அன்று டிசம்பர் 1 & 2 தேதிகளில் 48 மணி நேர வேலை நிறுத்தம் செய்வதாக இலாக்காவிற்கு கடிதம் கொடுத்தது. அதேபோல் மாநில மட்டத்தில் இடைவேளை ஆர்ப்பாட்டம் நடத்தி மாநில செயலாளர்கள் கையெழுத்துடன் CPMG அவர்களிடம் அளிக்கப்பட்டது .
இதற்கிடையில் மத்திய அரசு, இலாக்கா ஊழியர்களுக்கும், GDS ஊழியர்களுக்கு தனிநபர் கமிட்டியும் அறிவித்துள்ளது. ஆகவே நமது கோரிக்கையில் மாற்றம் செய்து மீண்டும் அனைத்து ஊழியர்களுக்கும் ஏற்றார்போல் கோரிக்கையை மாற்றி காலவரையற்ற வேலை நிறுத்தமாக மாற்றி அறிவித்திடவேண்டும் என பல மாநில சங்கங்கள் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப வரும் டிசம்பர் 1 மற்றும் 2 தேதிகளில் நடக்கயிருந்த வேலை நிறுத்தம் இன்று நடந்த சம்மேளன செயற்குழுவில் தள்ளிவைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment