இன்று 7வது ஊதியக்குழு அறிக்கை அரசிடம் வழங்கப்பட்டுவிட்டது.GDS க்கு ஊதியக்குழு அமைத்து அறிக்கை வழங்குவது ?
தோழர், தோழியர்களே , வணக்கம் .
நடந்தது என்ன. சுமார் இரண்டரை ஆண்டுகளாக நமக்கு தனி ஊதியக்குழு தேவையில்லை இலக்கா ஊழியர்களுக்கு அமைத்திடும் 7வது ஊதிக்குழுவே GDS ஊழியர்களுக்கு தங்களது ஊதியம் உள்ளிட்டவைகளை பரிசீலித்திட வேண்டுமென தொடர் போராட்டங்கள் அறிவித்து நடத்தினோம். அரசும், இலாக்கவும் நமது NFPE சம்மேளனத்துடன் பல முறை பேசி அரசும், இலாக்கவும் சம்மதித்து நிதி அமைச்சகத்திற்கு 3 முறை அனுப்பப்பட்டு நிதி அமைச்கம் நிராகரித்துவிட்டது .
இறுதியாக நமது NFPE சம்மேளனம் கடந்த 06.11.2015 அன்று, வருகிற டிசம்பர் 01.12.2015 முதல் 02.12.2015 வரை 48 மணி நேர வேலை நிறுத்தம் அறிவித்து இலாக்காவிற்கு கடிதம் கொடுத்துவிட்டது . மாநில மட்டத்தில் Co Ordination கமிட்டியினால் 9 சங்க மாநில, மண்டல, கோட்ட, கிளை பொறுப்பாளர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஆகவே நமது ஊழியர்கள் அஞ்சல் 3, அஞ்சல் 4, RMS 3,RMS 4, SBCO , Audit & Accounts, Admin மற்றும் Casual Labour பொறுப்பாளர் மற்றும் தோழர்களை தொடர்பு கொண்டு வேலைநிறுத்தம் முழுமையாக வெற்றிபெற உழைத்திடுமாறு கேட்டுக்கொள்கிறோம். இதனால் நிச்சயம் அரசு நமக்கு 7வது ஊதியக்குழுவே பரிசீலித்திட வழி வகுத்திடும்,
சமவேலைக்கு சமஊதியம் கிடைத்திடத்தான் அதிகாரி குழு தேவையில்லை நீதிபதி குழுதான் தேவை என போராடுவோம், வெற்றிபெறுவோம்.
No comments:
Post a Comment