Saturday, 28 May 2016

அருமை அஞ்சல் 4 மாநில செயலாளர் மற்றும் COC  கன்வீனர் தோழர் 
G.கண்ணன் அவர்களுக்கு நன்றி

Kovilpatti Kannan's profile photo

NFPE - P4
Tamil Nadu Circle
Chennai - 05.
கோட்ட/கிளை செயலாளர்கள் கவனத்திற்கு..
AIPEU-GDS-NFPE சங்கத்திற்கான உறுப்பினர் சேர்ப்பிற்கான பொன்னான காலம் வந்து விட்டது.
நாடு முழுவதும் 80 சதவீதம் கிளைகள் முறையாக மாநாடு நடைபெற்று செயல்பட்டு வருகிறது. 22 மாநிலங்களில் மாநில மாநாடுகள் நடைபெற்று மாநில சங்கம் செயல்படுகிறது. 3 மாநிலங்களில் மட்டும் இன்னும் மாநில மாநாடுகள் நடை பெறாமல் உள்ளது.
இதனிடையே 15.6.2016 தேதிக்குள் கோட்ட அளவிலான சங்க நிர்வாகி யார் என்ற பட்டியலை நிர்வாகத்திற்கு ஒப்படைக்க வேண்டும்.
ஆகவே இன்னும் கோட்ட அளவில் அமைப்பு ஏற்படுத்தாத கோட்டங்களில் ஜூன் 2016 முதல் வாரத்திற்குள் மாநாடு நடத்தி நிர்வாகியின் பெயரை உடனே மாநில செயலருக்கு தெரியப்படுத்தவும். தோழர்களே,
எந்த நிமிடத்திலும் உறுப்பினர் சேர்ப்பு படிவம் வரலாம். தயாராவீர் தோழர்களே..
இது சம்பந்தமான அப்பீல் GDS அகில இந்திய செயலாளர் தோழர் பாண்டுரங்கராவ் அவர்கள் கொடுத்துள்ளார்கள். கீழே நகல் உள்ளது.
அஞ்சல் நான்கின் தோழர்களே!!
இத்தருனத்தில் நமது பணி GDS ஊழியர்களை NFPE GDS சங்கத்தில் சேர்ப்பதே.
எனதருமை GDS தோழா!!  சிந்தித்து செயல்படு...
தனி நபர் கமிட்டி வேண்டாம் என்று போராடி, "ED ஊழியரின் போர்வாள்" "தல்வார் கமிட்டி" யை பெற்றது NFPE..
நாசமாய்போன நடராஜமூர்த்தி கமிட்டி வேண்டும் என கையெழுத்திட்டு GDS வாழ்வில் மண்ணைப் போட்டவர் மகாதேவையா..
NFPE உறவே வேண்டாம் எனறு ஒதுங்கியவர் மகாதேவையா..
EDSO க்களை ஒழித்த போது வாய்மூடி மௌனியாக, ஒரு ஆர்ப்பாட்டம் கூட செய்யாத மா வீரர் மகாதேவையா..
நடராஜமூர்த்தி BPM களுக்கு 1000 ரூபாய்க்கு ஒரு புள்ளி என்பதை 20,000 ரூபாய்க்கு ஒரு புள்ளியாக மாற்றி வாங்குகிற சம்பளத்தை குறைத்து BPM களின் வைற்றிலடித்த போதும், ஆர்ப்பாட்டம் கூட பண்ணாமல் ஊமையாய் இருந்த உத்தம வீரன் மகாதேவையா..
இறுதியாக இலாக்கா ஊழியருக்கு இணையாக GDS க்கும் NFPE போராடி பெற்ற போனஸ் ரூபாய் 3500 யை 2500 ஆக மாற்றிய புரட்சி வீரன் சாட்சாத் மகாதேவையாவே...
ஆனால் NFPE GDS சங்கம் உதயமான உடன் மகாதேவையாவால் இழந்த போனஸ் 3500 யை போராடிப் பெற்றது.
இன்னும் எத்தனையோ இழப்புகள் இந்த வீரனால்..
எனதருமை GDS தோழா!!
உன் வாழ்வை உறுதிப்படுத்த, இழந்த சலுகைகளை மீட்டிட NFPE GDS சங்கத்தில் இணைந்திடு தோழா...
புரட்சிகர வாழ்த்துக்களுடன்,
AIPEU GDS NFPE சங்கத்தை முதல் சங்கமாக மாற்றிடும் வெறியோடு..இயக்கம் நோக்கி...புறப்படு தோழா!!!
G.கண்ணன்
மாநில செயலாளர். 

No comments:

Post a Comment