Monday, 23 January 2017

    அன்புத் தோழர்களே, தோழியர்களே வணக்கம்.
GDS ஊழியர்களுடைய ஊதியக்குழு அறிக்கையை  வெளியிட வலியுறுத்தி  நமது NFPE சம்மேளனத்தினால்  இயக்கங்கள் பல நடத்தி இறுதியாக NFPE சம்மேளன அனைத்து பொதுச்செயலாளர்களும் கடந்த 18.01.2017 முதல் கால வரையற்ற உண்ணா விரத போராட்டம் டெல்லிஅஞ்சல்  இலாக்கா அலுவலக வாயிலில் நடத்திட அறைகூவல் விடப்பட்டு அஞ்சல் இலாக்கா அலுவலகத்திற்கு 10.01.2017 அன்று கடிதம் கொடுத்தது. அதன் பின் நிர்வாகம் நமது துறை அமைச்சரிடம் இவ் அறிக்கை ஒப்புதல் பெற்று தேர்தல் ஆணையத்திடம் (வட மாநிலங்களில் சட்டசபை தேர்தல்) அனுமதி பெற்றபின் வெளியிடலாம் என அமைச்சர் கூறியதின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற அனுப்பி வைக்கப்பட்டது.
இதன் அடிப்படையில் கடந்த 16.01.2017 நிர்வாகம் நமது சம்மேளன செயலர் தோழர் R.N.பராசர் அவர்களை பேச்சு வார்த்தைக்கு அழைத்து GDS ஊதியக்குழு அறிக்கை தேர்தல் ஆணைய ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது, விரைவில் அனுமதி பெற்று அறிவிக்கப்படும் எனக் கூறி 18.01.2017 முதல் நடக்க உள்ள உண்ணா விரத போராட்டத்தை கைவிடுமாறு எழுத்து மூலமாக கேட்டுக் கொள்ளப்பட்டது. 

   அதன் பின் சம்மேளனம் உண்ணாவிரத போராட்டத்தை ஒத்திவைத்தது. நிர்வாகமும் கடந்த 18.01.2017 அன்று மாலை இலாக்கா வலைத்தளத்தில் வெளியிட முயற்சி செய்து தொழிற்நுட்ப சிக்கலால் முடியாமல் 19.01.2017 காலை நமது சம்மேளன செயலர் தோழர் R.N.பராசர் அவர்களிடம் அதற்கான நகல் வழங்கப்பட்டது. அதன் பின் நமது வலைத்தளங்களில் வெளியிடப்பட்டது. அதே போல் இவ்வறிக்கையில் உள்ள பாதகங்கள் நிர்வாகத்திற்கு எடுத்து செல்லப்படும்.  

  இவ்வறிக்கையின் பரிந்துரைகள் விரைவில் அனைத்து பொறுப்பாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும். 

No comments:

Post a Comment