Wednesday, 27 June 2018

தோழர்களே வணக்கம்.
இலாக்கா. GDS ஊழியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி


தோழர்களே. 27-6-18 அன்று  இரண்டு ஆணைகள் வந்துள்ளது. மகளிர் தோழியா் 180 நாள் இரண்டு குழந்தைக்கும், இரண்டுக்கு மேல் 45 நாட்களுக்கு ஊதியத்துடன் பேறுகால விடுப்பு 1-7-2018 முதல் தான் வழங்கப்படும்.


பணி முறிவு தொகை 1.1.16 க்கு பிறகு ஆண்டுக்கு,ரூபாய்.4000/-, 31.12.2015க்கு முன்பு பணி புரிந்த ஆண்டு ஒன்றுக்கு ரூபாய். 1500/- என வழங்கப்படும். அதிகபட்சம் 1,50,000/-(இந்த தொகை இன்னும் சுமார் 25 ஆண்டுகள் பணி செய்யக் கூடிய தோழர்களுக்குத் தான் கிடைக்கும். (உ-ம்) 2015 வரை 35 ஆண்டுகள் பணியாற்றிய தோழர் ஒருவருக்கு 1500*35= 52500/- மீதி ரூபாய் 97500/- பெற மீண்டும் சுமார் 25 ஆண்டுகள் (ரூபாய் 4 ஆயிரம் வீதம்) பணி செய்ய வேண்டும், அப்படியானால் 80 வயது வரை அரசு வேலை வழங்குமா??? அப்படி என்றால் யாருக்கு கிடைக்கும் ரூபாய் 1,50,000/-?????


Gratuity தொகை.ரூபாய்.60 ஆயிரம் என்பது 1லட்சத்து 50 ஆயிரம் என ஆணை வெளியிடப்பட்டுள்ளது.


SDBS என்ற பென்சன் திட்டத்தில் மாதா மாதம் நிர்வாகம் நமக்கு நமது அலுவலக பென்சன் கணக்கில் ரூபாய் 200/- செலுத்தி வருகிறது, அதை அடுத்த மாதம் 01.07.18 முதல் ரூபாய் 300/-செலுத்த இருக்கிறது, அதற்கு சமமாக விருப்பம் உள்ள தோழர்கள்  கட்டிக்கொள்ளலாம். இந்தக் கணக்கு NSDL என்ற நிர்வாகம் நிர்வகித்து வருகிறது.ஆனால் எந்த ஆண்டு முதல் யாருக்கு எவ்வளவு பென்சன் வழங்கப்படும் என்பது புரியாத புதிராக இருக்கிறது, விரைவில் இதற்கு நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்படும்


கமலேஷ் சந்திரா கமிட்டியின் பரிந்துரை அமல்படுத்தப் பட்டு இருந்தால், சட்டப்படி நமது பணி ஓய்வு பெறும் போது 33 ஆண்டுகள் பணியாற்றிய ஊழியர்களுக்கு கடைசி மாத ஊதியத்தில் 16.5 மாத ஊதியம் கிடைக்கும். 20 ஆயிரம் கடைசி மாத ஊதியம் எனக் கொண்டால் 20000*16.5=3,30,000/-கிடைக்கும். இதிலும் நிர்வாகம் ஏமாற்றி விட்டது.  இவை யெல்லாம் விரைவில் சரி செய்திட நமது செயற்குழுவில் சரியான முடிவு எடுக்கப்படும்,   கடந்த நடராஜமூர்த்தி கமிட்டியின் அறிக்கையை  இதே அரசு அப்படியே நடைமுறை படுத்தி ஊழியர்களை வஞ்சித்து ஏமாற்றியது இம்முறை கமிட்டியின் அறிக்கையை அப்படியே அமுல்படுத்தப் படாமல் சாதகமான அனைத்தையும் நீக்கி பாதகமாக, ஊழியர்களுக்கு எதிராக ஒரு அறிக்கை தயாரித்து அதை  உத்தரவு போட்டுள்ளது. ஆகவே அரசு நம்மை போராட்டத்தில் தள்ளிவிட்டது ! போராட்டத்திற்கு மீண்டும் தயாராகுங்கள். என்றும் உங்களோடு மாநிலச் செயலாளர் R.தனராஜ்

No comments:

Post a Comment