Saturday, 30 January 2016

இந்திய அஞ்சல் துறை இன்று யாருடைய உழைப்பால் பிரகாசமாக வளர்ந்து வருகிறது என்றால் எந்த நிரந்திர பலன்களும் இல்லாமல் தன்னையும் தனது பொருளாதாரத்தையும் இழந்து இலாக்கா சொல்வதெல்லாம் செய்து அதிகார வர்க்கம் இடும் ஆணையை தனது இலக்காக நினைத்து தனது மானத்தை இழந்து, சுயமரியாதையை இழந்து கொடுப்பதை பெற்று, தன்னை அழித்து- ஒளிவிடும் இந்த மெழுகு போல்- 65 வயதிற்கு பின்னால் இருக்கும் இடம் தெரியாமல் போகிறவன் தான் இந்த GDS  

7வது ஊதியக்குழு குறைந்தபட்ச ஊதியம் சுமார் Rs. 1800/- அதிகபட்ச ஊதியம் Rs.  2,50,000/- ஆனால் இந்திய அஞ்சல் துறையின் அடிமைகள் (GDS)  தற்போது பெறும் அலவன்ஸ் குறைதபட்சம் 2295/- அதிகபட்சம் 4575/-  ஆகும். இது ஒரு ஓய்வு பெற்ற IPS அதிகாரியால் நிர்ணயிக்கப்பட்டது , ஆனால் அந்த அதிகாரியின் ஊதியம், அலவன்ஸ், வாகன சிலவினங்கள் என்னவாக இருக்கும்? ஒரு GDS ஊழியன் நினைத்தால் இதயம் நின்றுவிடும்.

இனியும்  GDS ஊழியனுக்கு எதிர்காலம் ? யாகத்தான் அமையும். ஏன் என்றால் அமைக்கப்பட்டுள்ள கமிட்டியின் தலைமை ஒரு IPS அதிகாரிதான் என்பதை அனுபவிக்கும் GDS ஊழியனுக்கு புரியாதா என்ன?  

GDS தோழா! அடிபணி அன்புக்கு ! அடங்காதே அதிகார வர்க்கத்திற்கு!!
மனிதனாக நடந்தால் நீயும் அப்படியே நடந்துகொள்!! இத்துறை ஒன்றும் எவருடைய தனிச் சொத்தும் அல்ல என்பதை மனதில் கொண்டு தினம் தினம் உனது வேலையை சரிவர செய்துவா. 

நான் தினக்கூலியை விட குறைவான ஊதியம் பெறுகிறேன், நான் செய்கின்ற வேலைக்குத்தான் ஊதியம் அல்ல, அல்ல .. அலவன்ஸ் பெறுகிறேன்.  நான் மாதம் பெறும் அலவன்ஸ் நீங்கள் ஒரு நாள் ஊதியமாக பெறுகிறீர்கள் என்பதை நினைவு படுத்துங்கள் அப்போவாவது அவர்களுக்கு புரிகிறதா என பார்ப்போம்.

இனியும் வார, மாத, ஆண்டு TARGET கொடுத்து TORTURE  செய்வதை நிர்வாகம் மட்டும் அல்ல அரசும் நிறுத்திக்கொள்ளவேண்டும் அதுவே மனித நேயத்திற்கு அழகாக அமையும்.

Learn More!
Add caption

No comments:

Post a Comment