செய்திகள் சில
கடந்த 28.01.2016 அன்று - ஏற்கனவே 08.01.2016 அன்று நம் மாநிலச்
சங்கத்தினால் கொடுக்கப்பட்ட கடிதத்தின் அடிப்படையில் - பல்வேறு
பிரச்சினைகள் குறித்து CHIEF PMG அவர்களிடமும் , DPS HQ /DPS CCR
அவர்களிடமும் நாம் பேசினோம் . அதனடிப்படியில் மாநில நிர்வாகம் அளித்த
பதில்களை கீழே தருகிறோம்.
1.ஒத்திவைக்கப்பட்ட அடுத்த RJCM
கூட்டம் எதிர்வரும் 16.2.2016 அன்று நடைபெறும் . அதற்கான SUBJECTS
01.02.2016 க்குள் கிடைக்குமாறு அளிக்க வேண்டும்.
2.வெள்ள முன்பணம்,
பாதிக்கப்பட்ட பகுதிகளில் விண்ணப்பித்த ஊழியர்களுக்கு நிச்சயம் அடுத்த
வாரத்தில் வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுதும்
வழங்கிட நாம் கோரினோம். இறுதியில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,
கடலூர் மாவட்டப் பகுதிகளுடன் பாண்டிச்சேரி மற்றும் தூத்துக்குடி மாவட்டப்
பகுதிகளில் விண்ணப்பித்தவர்களுக்கும் சேர்த்து வழங்கிட CHIEF PMG
அவர்கள் உறுதியளித்துள்ளார்.
3. வெள்ளம் பாதித்த மாவட்டப் பகுதிகளில் WELFARE FUND இல் இருந்து
உதவித்தொகை விண்ணப்பித்த GDS ஊழியர்களுக்கு, உரிய VAO சான்றாவது
இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே வழங்கிடப்படும் என்று CPMG தெரிவித்தார்.
இதற்கு மாநில சேமநல நிதியில் உரிய அளவு தொகை இல்லையெனில், மத்திய
சேமநிதித் தொகுப்பில் இருந்து கேட்டு, பாதிக்கப்பட்ட ஒவ்வொரு ஊழியருக்கும்
குறைந்த பட்சம் ரூ.5000/- வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
4. நாம் கேட்டுக் கொண்டபடி GDS
இலிருந்து தபால்காரராக தேர்வு பெற நடத்திடவேண்டிய தேர்வுக்கான
அறிவிக்கையானது கண்டிப்பாக அடுத்த வாரத்தில் வெளியிடப்படும் என்று
தெரிவித்தார்.
No comments:
Post a Comment