திருவரங்க கோட்ட அஞ்சல் 3 மாநாடு 19.06.2016 ல் நடைபெற்றது.புதிய நிர்வாகிகளை மாநிலச் சங்கம் பாராட்டி மகிழ்கிறது
திருவரங்கம் அஞ்சல் மூன்று கோட்டச் சங்கத்தின் 10 - வது ஈராண்டு கோட்ட மாநாடு 19.06.2016 அன்று திருவரங்கம் S.R. கல்யாண மஹாலில் அஞ்சல் மூன்றின் முன்னாள் அகில இந்திய பொதுச்செயலர் தோழர் KVS அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைக்க, சங்கக் கொடியை கோட்டத் தலைவர் தோழர் K. கதிர்வேல் அவர்கள் ஏற்றி வைக்க இனிதே நடைபெற்றது. மாநிலச் சங்கத்தின் நிதிச் செயலர் மற்றும் அகில இந்திய உதவி பொதுச்செயலர் தோழர். A. வீரமணி , மத்திய மண்டலச் செயலர் தோழர் R. குமார், NFPE GDS சங்கத்தின் மாநில நிதிச்செயலர் தோழர் R. விஷ்ணுதேவன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
மாநாட்டில் நடைபெற்ற புதிய நிர்வாகிகள் தேர்தலில் கீழ்க்கண்ட தோழர்கள் ஏகமனதாக நடப்புக் காலத்திற்கான நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.
கோட்டத்தலைவர் : தோழர் K. ராஜூ , அஞ்சலகத்தலைவர் , பெரம்பலூர்
செயல்தலைவர் : தோழர் K. கதிர்வேல், SPM, தாத்தையங்கார் பேட்டை
கோட்டச்செயலர் : தோழர் T. தமிழ்ச்செல்வன் , PA, ஸ்ரீரங்கம் HO
நிதிச்செயலர் : தோழர் V. ஸ்ரீதரன் , காசாளர் , ஸ்ரீரங்கம் HO
புதிய நிர்வாகிகளின் பணி சிறக்க மாநிலத் சங்கத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ! விழா நிகழ்வின் புகைப்படங்களில் சில :-

No comments:
Post a Comment