நாகப்பட்டினம் கோட்ட கூட்டு போராட்டக்குழு
கடந்த 29.09.2016 மாலை COC ஆர்பாட்டத்தில் அஞ்சல் 3 கோட்டதலைவர் தோழர் S.அரசு அவர்கள் தலைமையில் நடைபெற்றது அஞ்சல 3,மஞ்சள் 4, GDS உள்ளிட்ட நகை கோட்ட மற்றும் திருவாரூர் கிளை பொறுப்பாளர்கள் மற்றும்தோழர் தோழியர்கள் கலந்துகொண்டு கோரிக்கை முழக்கங்கள் மூத்த தோழர் S .கோவிந்தராசு அவர்கள் முழங்க GDS மாநிலச்செயலர் R.தனராஜ் விளக்க உரையுடன் மாலை சுமார் 7.30 மணிக்கு முடியுற்றது .
சட்டத்தின் முன் அனைவரும் சமம்! மெய்யாலுமா!!
அஞ்சலக சேமிப்பு கணக்குகள் மற்ற பிற பண பரிவர்த்தனைகளில் இலாக்கா விதிகளுக்கு மாறாக ஒரு சாதாரண ஊழியர் செயல்பட்டிருப்பதாக புகார் வந்தாலே, உடனே அந்த ஊழியரை independent charge இல்லாத பதவிக்கு பணியிடமாற்றம் செய்து பின் விசாரணையினை தொடர்வது என்பது காலங்காலமாக பின்பற்றப்படும் நிர்வாக நடைமுறை. ஆனால் அதிகாரிகள் மேல் எத்தனை புகார்கள் வந்தாலும் இந்த நடைமுறை பின்பற்றப்படுவதில்லை.
கணினிகளுக்கு பேட்டரிகள் கொள்முதல் செய்ததில் மத்திய மண்டலத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த சர்ச்சையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளின் மேல் துறை ரீதியான விசாரணை கடந்த 8 வருடங்களுக்கும் மேலாக நடை பெற்று வருவதாக கூறுகிறார்கள். விசாரணை வளையத்தில் இருக்கும் அதிகாரிகள் இன்றளவும் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்திலேயே அதிகாரமிக்க பதவிகளில் பணிபுரிவதாக கூறப்படுகின்றது. துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட அதிகாரிகள் தனக்கு கீழ் பணிபுரியும் ஊழியர்களுக்கு தண்டனை வழங்கும் அதிகாரமிக்க பதவிகளில் தொடர்வது இயற்கை நியாயத்திற்கு புறம்பானது.
சாதாரண 1000 அல்லது 2000 ரூபாய் shortage-க்கே Suspension! Put off செய்யும் நிர்வாகம் கொள்முதல் முறைகேட்டில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளை suspend செய்யாதது வியப்பாக உள்ளது. மேலும் 5000/-க்கு மேற்ப்பட்ட Loss சம்பந்தமான புகார்களை Police-க்கு report செய்யும் நிர்வாகம் இந்த பேட்டரி கொள்முதல் முறைகேட்டினை CBI-வசம் ஒப்படைக்காதது ஏன்? என்பது புரியாத புதிராகவே உள்ளது.
அதிகாரம் இருந்தால் எதையும் செய்யலாம் என்பது இதன்மூலம் நாம் அறியும் படிப்பினையாகும்.
No comments:
Post a Comment