Sunday, 23 October 2016

நவம்பர் 09,10 நாடு தழுவிய அஞ்சல்துறை வேலை நிறுத்தம்
அன்புத்  தோழர்களே!! தோழியர்களே!!  கோட்ட / கிளை செயலர்களே வணக்கம்.
தற்போது நம்மை எதிர் நோக்கி உள்ள இரண்டு கோரிக்கைகளுக்கு தீர்வு காணவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
1. போனஸ் ரூ 7000/- சீலிங் பெறுவதில் உள்ள காலதாமதம், 
2. நமது ஊதியக்குழு எப்போது அமல்படுத்தப்படும் அதில் பரிந்துரைகள் எவ்வாறு இருக்கும்.
GDS ஊழியர்களுக்கு உயர் போனஸ் பெற்று தரவேண்டிய கடமை NFPE சம்மேளனத்திற்கு உண்டு என்பதை தோழர்கள் மறந்துவிடக்கூடாது அதனால் தான் NFPE சம்மேளன பொதுசெயலர் தோழர் R.N.பராசர் உடனடியாக FNPO சம்மேளன பொதுச் செயலாளர் தோழர் தியாகராஜன் அவர்களிடம் பேசி  PJCA அதாவது NFPE மற்றும் FNPO இரண்டு சம்மேளனங்களும் GDS ஊழியர்களுக்கு உயர் போனஸ் ரூ 7000/- சீலிங் வழங்கப்படவேண்டும் CCL ஊழியர்களுக்கு 1.1.2006 முதல் வழங்கவேண்டிய உயர் ஊதியம் மற்றும் பல சலுகைகள் வழங்க வேண்டி 4 கட்டஇயக்கங்கள் நடத்திட அறிவித்து 2 ம்   கட்ட தர்ணா  போராட்டம் அனைத்து மண்டலங்களிலும் சிறப்பாக நடந்துள்ளது, இதில் அனைத்து அஞ்சல் 3 முதல் க்ஷுவல் ஊழியர்கள் வரை காலை 10 மணி  முதல் கலந்துகொண்டு அரசின் மோசமான நடைமுறைகளுக்கு அங்கே விமர்சனங்களை தலைவர்கள் அடுக்கடுக்காக முழங்கியுள்ளனர். கலந்துகொண்ட தோழர்களுக்கு மாநிலச்சங்கம் நன்றி கூறுகிறது. 
3 ம் கட்ட போராட்டம் வரும் 03.11.2016 முதல் NFPE , FNPO சம்மேளனங்களின் அனைத்து உறுப்பு சங்க பொதுச்செயலாளர் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்திட உள்ளனர்.
4 ம் கட்ட இயக்கமாக வரும் நவம்பர் 09 மற்றும் 10 இரண்டு நாள் வேலைநிறுத்தம் செய்திடவும் இலாக்காவிற்கு கடிதம் கொடுத்து நம்மையும் வேலைநிறுத்த கடிதம் கொடுத்திடுமாறு பணித்துள்ளார், அதற்கான வேலையில் நாம் இறங்கிடுவோம்.
நமது கோரிக்கைகளை மட்டும் வைத்து வேலைநிறுத்த அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளதால் கடந்த 19.10.2016 இலாக்கா Member (P) NFPE சம்மேளன பொதுசெயலர் தோழர் R.N.பராசர் FNPO சம்மேளன செயலாளர் தோழர் தியாகராஜன் இருவரையும் அழைத்து நாங்கள் ரூ 7000/- போனஸ் சீலிங் GDS ஊழியர்களுக்கு வழங்கலாம் என கமிட்டி சிபாரிசு செய்த அறிக்கையை இலாக்காவும் நிதி அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறி வேலை நிறுத்தத்தை நிறுத்தி வைத்திடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அனால் நமது தலைவர்கள் உத்தரவு வரும் வரை வேலை நிறுத்தத்தை நிறுத்திட முடியாது என திட்ட வட்டமாக இரு செயலாளர்களும் கூறிவிட்டனர்.
மேலும் நமது அமைச்சர் நிதி அமைச்சக செயலரிடம் பேசி விரைவில் நமது போனஸ் கோப்பு அனுப்பிவைத்திடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆதலால் நாம் நவம்பர் 09,10 இரண்டு நாள் வேலை நிறுத்தத்திற்கு ஆயத்த பணிகளை NFPE , FNPO அஞ்சல் 3, அஞ்சல் 4, RMS 3, RMS 4 மேலும் மற்ற உறுப்புச் சங்க பொறுப்பாளர்களுடன் இணைந்து செய்திடுமாறு    மாநிலச்சங்கம் கேட்டுக்கொள்கிறது.
 "இப்படை தோற்கின் எப்படைவெல்லும்" என்ற கோசத்தோடு புறப்படு தோழா!! புறப்படு!!!!!!!
போராட்ட வாழ்த்துக்களுடன் உங்கள் மாநிலச்செயலர்.

No comments:

Post a Comment