GDS ஊதியக்குழு தொடர்பான சில தகவல்கள்
நமது
ஊதியக்குழு கடந்த டிசம்பர் மாதம் இலாக்காவினால் அமைக்கப்பட்டு அதிலிருந்து
ஒரு வருட காலத்தில் ஊதியக்குழு அறிக்கை அளித்திட திரு கம்லேஷ் சந்திரா
தலைமையில் அமைக்கப்பட்டது. அவர்கள் பல இடங்களில் விசாரணை செய்து
தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி கோரிக்கை மனு பெற்றும், மாநிலங்களுக்கு
சென்று அங்கும் நமது தோழர்களை சந்தித்து நேரடி சந்திப்பு நடத்தி அறிக்கையை
தயாரிப்பின் இறுதி நிலையில் உள்ளார்.
அனைத்து
மாநிலங்களுக்கும் சென்றது போல் கடந்த 21.10.2016 சென்னை எழும்பூர் அசோகா
விடுதியில் சுமார் 60 நமது ஊழியர்களிடம் நேரடி சந்திப்பு நடத்தி
சென்றுள்ளார்.
நமது சங்க மாநில செயலர் R .தனராஜ் , தாம்பரம் கோட்ட தோழர்கள் J.
பாரதிராஜா , V.S .கிரி , இவர்களுடன் ஊதியக்குழு தலைவரிடம் 15 கோரிக்கைகள்
அடங்கிய மனு அளிக்கப்பட்டது .கோரிக்கை மனு அளித்து 65 வயதில் ஓய்வு பெரும்
ஊழியர்களின் உயிருக்கு உத்திரவாதம் வழங்கிடும் வண்ணம் அவர்களின் கடைசி
ஊதியத்தில் பாதியை பென்ஷன் தொகையாக வழங்க பரிந்துரைத்திட வேண்டும்
எனவும்,எந்த சூழ்நிலையிலும் வாங்கும் ஊதியம் குறைக்கப்பட கூடாது எனவும்,
அனைத்து தபால்காரர் மற்றும் MTS பணிகள் GDS ஊழியர்களுக்கு வழங்கிடவும்,
எந்த சூழ்நிலையிலும் தனது பணியினை புள்ளி கணக்கில் உயர்த்திட முடியாது என்ற காரணத்தால் குறைந்தபட்சம் 5 மணி
நேரத்திற்கு அவர்களுக்கு ஊதியம் வழங்கிடவும் அதிக பட்சமாக அலுவலக
நேரத்திற்கு அவருக்கு ஊதியம் வழங்க பரிந்துரைத்திட வேண்டும் என வலியுறுத்தி
பேசினார், இறுதியாக மருத்துவ செலவுகள் மருத்துவ காப்பீட்டு மூலமாகவோ
அல்லது இலாக்கா சேமநல நிதியிலிருந்தோ முற்றிலும் திரும்பப்பெறும் வசதி
பரிந்துரைத்திடுமாறு வலியுறுத்தி கேட்கப்பட்டது. ஆகவே ஊதியக்குழு தலைவர்
அவர்களும் செயலர் அவர்களும் நிச்சயம் நிறைவான அறிக்கை அளிப்பதாக
தெரிவித்ததை நிச்சயம் செய்வார்கள் என நம்புவோம்
அவரது
அறிக்கை இலாக்காவிற்கு வரும் நவம்பர் 15 குள் அளிப்பார்கள் என
எதிர்பாக்கப்படுகிறது.அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அதை அரசு அறிவித்திடும்
போது சாதகமாக இருந்தால் ஏற்போம் இல்லையேல் தொடர் போராட்டம் நடத்தி
கோரிக்கை வெல்ல தயாராகிடுமாறு மாநிலச்சங்கம் கேட்டுக்கொள்கிறது.
நமது ஊதிய நிர்ணயம் 01.01.2016 முதல் அமலாக்கப்படும். வரும் ஜனவரி 2017 ல் புதிய ஊதியம் பெற வாய்ப்புள்ளது.
No comments:
Post a Comment