Tuesday 25 December 2012

DEMONSTRATION ON 28-12-2012 AGAINST ABOLITION OF POSTS BY THE DEPT.



        JCA  - NFPE - FNPO 
 அஞ்சல் , RMS -MMS - GDS  ஊழியர் கூட்டுப் போராட்டக் குழு ,
      தமிழ் மாநிலம் 

NFPE -FNPO சம்மேளனங்கள்  கூட்டாக விடுத்துள்ள அறைகூவலையடுத்து எதிர்வரும்  28/12/2012 அன்று தமிழகத்தின் அனைத்து கோட்ட/ கிளை களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட  அன்புடன் வேண்டுகிறோம்.. 

SCREENING  COMMITTEE  இருந்த  நேரத்தில் , 2005 முதல்2008 வரை நேரடி தேர்வு முறையில் இருந்த 2/3RD காலியிடங்கள் நம்முடைய எதிர்ப்பினால்  ஒழிக்கப்படாமல் இதுவரை SKELETON  இல்  இருந்து வந்தது . இப்படி இருப்பில் வைக்கப் பட்டிருந்த  17093 காலிப்பணியிடங்களை, மத்திய நிதி அமைச் சகத்தின் அறிவுறுத்தலின் படி  ஒழித்துக்கட்ட , அஞ்சல்நிர்வாகம் தற்போது உத்தரவிட்டுள்ளது . அதில்,கீழ்கண்ட பணியிடங்கள் உள்ளடங்கும். வேளைப்பளு கூடியுள்ள இத்தருணத்தில், காலிப்  பணியிடங்களை ஒழிப்பதின் மூலம்  ஊழியர்களை மேலும் இன்னலுக்கு ஆளாக்கும்  அரசின் மற்றும் இலாக்காவின் மோசமான  போக்கினைக் கண்டித்து  இந்த ஆர்ப்பாட்டத்தை  நாடு தழுவிய  அளவில்  நாம்  நடத்துகிறோம்.

சென்னை பெரு  நகரைப் பொருத்தவரை JCA  சார்பில்  28.12.2012 அன்று மதியம் 12.00 மணியளவில் CPMG அலுவலகம்  எதிரே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும். நகரின் அனைத்து கோட்ட/ கிளைகளில் இருந்தும் பெருவாரியான தோழர்கள்  ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.

குறுகிய கால அவகாசத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளதால் சுற்றறிக்கைகள்  தமிழகத்தின் கடைக்கோடி வரை சென்று சேராது  என்பதால் ,  சுற்றறிக்கையை  எதிர்பார்த்து காத்திருக்க வேண்டாம். அனைத்து கோட்ட/கிளைச் செயலர்களுக்கும்  SMS  மூலம் அறிவிப்பு கொடுக்கப்படும். மேலும் இந்த வலைத்தளத்தின் அறிவிப்பை அனைவருக்கும் தெரிவிக்க வேண்டுகிறோம்.

இந்த உத்திரவின் மூலம் ஒழிக்கப் படும் பதவிகள் :-

PAs- 5010,                                      POSTMAN- 3230                               Gr D / MTS- 4407,
SBCO PAs- 385                            RMS SAs- 1259

மேலும்  ஆர்ப்பாட்டம் நடத்திய பிறகு கோட்ட /கிளைச் செயலர்கள்  கீழ் வரும் கடிதத் தந்தியை  நமது துறை அமைச்சருக்கும் , இலாக்கா முதல்வருக்கும்  கண்டிப்பாக்க  தவறாமல்  அனுப்பிட வேண்டுகிறோம்.


TEXT OF SAVINGRAM
STRONGLY PROTEST THE ABOLITION OF 17093 POSTS IN DEPARTMENT OF POSTS AAA  UNABLE TO MANAGE THE DAY-TO-DAY WORK AAA  REQUEST TO REVIEW THE ORDERS AND RESTORE THE POSTS WITH IMMEDIATE EFFECT = 

.......... Branch/Divisional/Circle Secretary.

Saturday 22 December 2012

All India Conference dates preponed ::21.3 & 22.3.2013




1st ALL INDIA CONFERENCE OF AIPEU-GDS(NFPE) 
IS SCHEDULED AS 
21st & 22nd OF MARCH, 2013  
AT DHARMAPRAKASH KALYANA MANDAPAM, 
CHENNAI - 600 084

THE CHANGE IN DATES DUE TO HOLI FESTIVAL (27-03-2013) AND SOME OTHER IMPORTANT OCCASIONS DURING LAST WEEK OF THE MONTH OF  MARCH.

ANY INCONVENIENCE CAUSED FOR ADVANCE RESERVATION ALREADY MADE BY OUR COMRADES WILL BE REGRETTED AND KINDLY BEAR WITH THE SITUATION.

Full form of Reception Committee will be decided on 31st of December, 2012 and other details will be notified accordingly.

PROTEST DEMONSTRATIONS ON 28-12-2012


-------------------- NFPE - FNPO (JCA) PROGRAM OF ACTION ------------------------------------- ------------------ CONDUCT PROTEST DEMONSTRATIONS ON 28-12-2012


NFPE - FNPO
***
DEPARTMENT OF POSTS ISSUED ORDERS TO ABOLISH 2/3rd POSTS KEPT VACANT  FOR THE YEARS  2005 to 2008

TOTAL POSTS TO BE ABOLISHED - 17093

CONDUCT PROTEST DEMONSTRATIONS 
IN FRONT OF 
ALL CIRCLE / REGIONAL / DIVISIONAL OFFICES 
ON 
28-12-2012
               As per Government of India orders on Downsizing of Central Government Services, Screening Committee for filling up/aboliotion of posts was constituted in the year 2001 and Annual Direct Recruitment (ADR) plan was approved by the Screening committee for each year from 2001 to 2008.  Screening Committee cleared only 1/3rd vacancies for direct recruitment and balance 2/3rd posts were abolished as per its recommendations.
               Accordingly Department of Posts abolished 2/3rd vacant posts from 2001 to 2004.  Regarding the abolition of 2/3 rd vacant posts from 2005 to 2008, Postal Department & Communication Ministry requested Finance Ministry to grant exemption to Department of Posts from abolishing the vacant posts from 2005 to 2008, as it is an operative Department dealing with the general public and customers.  2/3rd posts earmarked for abolition from 2005 to 2008 are kept vacant (but not abolished) pending decision of the Finance Ministry.
               The ban on recruitment was lifted and the Screening Committee was abolished in the year 2009.  Government of India issued orders to fill up all vacant posts for the year from 2009 onwards.  Accordingly, Department of Posts, issued orders to fill up all vacancies for the year 2009 and 2010.  Orders are also issued to fill up all vacant posts for the year 2011 and 2012.  But, at the same time, Directorate issued clear instructions to all Chief PMGs that posts kept vacant for the year from 2005 to 2008 should not be filled up under any circumstances but should be kept vacant. (for abolition).
        

  Finance Ministry has now made it clear that no permission or exemption will be granted to any department including Department of Posts to fill up the posts kept earmarked for abolition as per the Screening Committee recommendations.  Accordingly Department of Posts has now issued orders to abolish all the 2/3rd vacant posts (Total 17093 posts for four years) for the year 2005 to 2008. Cadrewise break-up figure of the posts to be abolished is furnished below:

Cadre
No. of Posts
Cadre
No. of Posts
IP – Postal
1
Driver – Grade.III
14
PA – Postal
5010
Driver – MMS
84
PA – CO / RO
138
Postal Accounts – JA
125
PA – SBCO
385
LDC
186
PA -  RLO
11
Group – D
118
PA – Foreign Post
18
Sorter
31
PA – MMS
12
Hindi Typist
1
SA – RMS
1259
Steno
2
POSTMAN
3230
Steno – Gr.C
43
Group-D – Postal
4407
Jr. Hindi Translator
8
Group-D – RMS
1336
Hindi Typist
1
Group-D – MMS
81
All Others
411
Group-D – CO/ RO
67

TOTAL

17093
Group-D – PSD
90
Gropu-D – others
24

CONDUCT PROTEST DEMONSTRATIONS ON 28-12-2012

SEND SAVINGRAMS to ::
Minister, Communications 
and 
Secretary, Department of Posts

TEXT OF SAVINGRAM

STRONGLY PROTEST THE ABOLITION OF 17093 POSTS IN DEPARTMENT OF POSTS XXX UNABLE TO MANAGE THE DAY-TO-DAY WORK XXX REQUEST TO REVIEW THE ORDERS AND RESTORE THE POSTS WITH IMMEDIATE EFFECT

.......... Branch/Divisional/Circle Secretary.

*****

D. THEAGARAJAN                                                                                                             M. KRISHNAN
Secretary General FNPO                                                                                 Secretary General NFPE

CIRCLE UNION CIRCULAR NO. 3




Wednesday 19 December 2012

First All India Conference of AIPEU GDS (NFPE) will be held at chennai on 26.3. & 27.3.2012. Reception committee will be formed on 31.12.2012 at Nakkeeran Hall, SRMU office , Chennai.

NFPE GDS GUJARAT CIRCLE UNION FORMED


GUJARAT CIRCLE CONVENTION: AIPEU-GDS (NFPE)

 

AIPEU-GDS (NFPE) - GUJARAT CIRCLE UNION FORMED
{REPORT BY AIPEU-GDS (NFPE): CHQ

Gujarat Circle Convention was  held on 16-12-2012 at Jamnagar. GDS comrades attended from almost all Divisions of the Circle in the convention. 

Com.K. V. Sridharan, Leader, JCM Staff side & former General Secretary, AIPEU Gr.C., Com. R. N. Parashar, Asst. Secretary General, NFPE, Com. I. S. Dabas, General Secretary, AIPEU PM&Gr.D/MTS, Com. Balwinder Singh, Financial Secretary, Gr.C (CHQ)  attended and graced the Convention in a very delightful manner.

Com. Smt. Ashaben Jyothi unanimously elected as Circle Secretary of AIPEU-GDS(NFPE) and assured to form all Divisional / Branch Unions in the Circle at the earliest. 13 divisions are formed there itself in the Convention.

The CHQ conveys its heartfelt greetings and congratulations to all the Circle Office bearers and sincerely thanking all GDS Comrades and NFPE unions for their big share to GDS NFPE in Gujrat Circle.

COM. ASHA BEN JOSHI JOINS AIPEU – GDS (NFPE)


Com. Asha Ben Joshi, Former All India Vice President & Circle Secretary of AIPEDEU Gujarat Circle has joined AIPEU-GDS (NFPE) along with the entire GDS membership. She is elected as the new Circle Secretary of AIPEU-GDS (NFPE) Gujarat Circle in the Circle Conference held at Jamnagar on 16.12.2012.

During the last eight months, since the formation of the new GDS Union 70 to 100% of the GDS membership and leadership in majority of the Circles have already joined the AIPEU-GDS (NFPE). They have participated in the 12th December Strike.

In the next membership verification AIPEU-GDs (NFPE) will definitely become the only recognized union of GDS. GDS employees have lost faith in the existing recognized union as it has lost credibility by repeatedly misguiding the employees. Anti-NFPE slogan is no longer going to work.

Regarding GDS Bonus the propaganda made by Mahadevaiah group GDS union is TOTALLY FALSE.




அன்புத் தோழர்களே  ! தயவு செய்து  தவறானவர்களிடமிருந்து வரும் தவறான தகவல்களை  தவறியும்  தவறாக  தம் தோழர்களுக்கு  நீங்கள் தர வேண்டாம் என்று அன்புடன் வேண்டுகிறோம்.

Finance Ministry HAS NOT APPROVED the proposal for raising the GDS Bonus ceiling to Rs.3500 but returned the file without approval.

Mahadevaiah group flashed the false news on 10th December deliberately to sabotage the 12.12.12 united strike.

During their last fragmented strike also they have made such false propaganda saying strike is total in all Circles and 3500 order will be issued during the strike and thereafter before Pooja. ALL LIES. They are misguiding the GDS.  

Mahadevaiah’s GDS union has not served strike notice for 12th December strike  and given letter to the administration to take action against those who participated in the 12th December strike. --------  M. Krishnan, S.G., NFPE.

Wednesday 12 December 2012

RED SALUTE TO ALL COMRADES ON THE HISTORIC STRIKE


நன்றி ! நன்றி!! நன்றி !!!

அன்புத் தோழர்களே ! தோழியர்களே ! அன்பார்ந்த வணக்கங்கள் ! 

இன்றைய  நாள் .......  இனிய நாள் !தமிழக  அஞ்சல் தொழிலாளர் வாழ்வில் மறக்கமுடியாத நாள் ............. ஆம் .  12.12.2012.........  இது ஒரு வரலாற்று நிகழ்வு நாள் ............. 11, 12.07.1960 வேலை நிறுத்தம் போல, 19.09.1968 வேலை நிறுத்தம் போல ...... இது  ஒரு வரலாற்று சிறப்பு மிக்க  வேலை நிறுத்த நாள்  .... 

நம் அஞ்சல் அரங்கில்,  NFPE  இயக்கத்தின் தனித்த வேலை நிறுத்தம்  என்றாலும் ..... காணும் இடம் நோக்கினும் ..........  பேதம்  ஏதுமின்றி  ஓரணியாய் ........ ஒரே குரலாய் ....... ஓங்கி ஒலித்தது  NFPE  இன்  சங்க நாதம் ............. இது தான் வெற்றி .........வட திசை நோக்கி .............  இமயத்தின்  திசை நோக்கி .......... தமிழகத்தின்  வெற்றி சங்க நாதம் .......... ஓங்கி  ஒலித்தது  ஒரே குரலாய் ............ நாளைய வரலாற்றுக்கு  கட்டியம் கூறுவது .......... இன்றயை தமிழகத்தின் குரல்  ஒன்றே !


கோரிக்கை தீர்வு நோக்கி  5 ஆவது கட்ட போராட்டம் என்றாலும் ....... மிகப் பெரிய  போராட்டங்கள் ......... 26.07.2012 பாராளுமன்றம் நோக்கிய பேரணி ........அதில் மத்திய அரசு ஊழியர் மொத்தம் 20000  பேரில்   தமிழக அஞ்சல் பகுதியில் இருந்து  ஆயிரம் பேருக்கு மேல் நாம் கலந்து கொண்டோம் என்பது  இதுவரை இல்லாத ஒரு வரலாற்று நிகழ்வு ........ அதிலும்  தமிழக அஞ்சல் மூன்றில் இருந்து  600 க்கும் மேலே ........ இதுவரை இல்லாத புதிய நிகழ்வு ...........


இரண்டாவது பெரிய  நிகழ்வு ....... 12.12.12  மத்திய அரசு ஊழியர் வேலை நிறுத்தம் .......... இதில் நம் பங்கு .........  இது வரை இல்லாத அளவில் ............. தமிழகம் முழுமைக்கும் ........ NFPE  இல்  90%............. மொத்த ஊழியர்  எண்ணிக்கையில்  80%....... இந்த  ஒற்றுமை  சாத்தியம் தானா ?


சாத்தியம் ஆயிற்று என்பது  இன்றைய   அஞ்சல் மூன்றின்  அங்கீகாரத்திற்கு பின்னரான நிகழ்வு .......  இது நமது ஒற்றுமைக்கு கிடைத்த வெற்றி ...... ஒன்றுபட்ட ........ தொழிலாளர் கோரிக்கை மீதான ஈடுபாட்டுக்கு கிடைத்த வெற்றி ......... தனி மனித விருப்பு வெறுப்புகளைத் தூக்கி எறிந்த வெற்றி . NFPE  இன் பெயராலே  நாம் ஒன்று பட்டதன் வெற்றி ...... இதுதான்  ஆரோக்கியம் ......  தனிப்பட்ட பிரச்சினைகள் அரங்குகளின் விவாதத்திற்குள்ளே ......  பொதுப் பிரச்சினைகளில் என்றும் நாம் ஒன்றே ........  குறுகிய வட்டங்களை விட்டு நாம்  விடுபட்டதன் அடையாளம்  இந்த வேலை நிறுத்தம் ....... இந்த திசை நோக்கி நாம்  சிந்திப்போம் ........... NFPE  இன் ஒரே குரலாய் இனி நாம் ஒலிப்போம் ! இதுவே வெற்றி !


16 லட்சம் மத்திய அரசு ஊழியர் போராட்டத்தில்  இது ஒரு பகுதி ..... ஏழாவது ஊதியக்குழு நோக்கி ...... 50% பஞ்சப்படி இணைப்பு நோக்கி,  புதிய  பென்ஷன்  திட்டத்திற்கு எதிராக .......GDS  ஊழியருக்கும்  ஊதியக்குழுவே  அவர்களது ஊதிய, இதர பணித்தன்மைகளை  பரிசீலிக்க வேண்டி ....போனஸ் உச்ச வரம்பு நீக்கிடக் கோரி ... அடுத்த கட்ட போராட்டத்திற்கு ...... ரயில்வே, பாதுகாப்புத் துறை ஊழியர்களையும்  ஒன்றுபடுத்தி ... காலவரையற்ற  வேலை நிறுத்த தயாரிப்புகளை  நாம்  செய்திட உள்ளோம் ........ 


அனைத்து மத்திய அரசு ......... மாநில அரசு....... பொதுத்துறை ஊழியர்களுக்கும் கோரிக்கைகளை முன்னெடுக்கும் முன்னோடியான   சம்மேளனமாக  நம் NFPE  விளங்கும்  என்பது கடந்த கால வரலாறு. அதனால் தான்   NFPE  இயக்கத்தை ' THE VAN GUARD  OF THE CENTRAL GOVERNMENT EMPLOYEES MOVEMENT '  என்று  அன்றே கூறினார்கள். இன்றும் அந்த வழியில்  நாம் முன்னெடுத்தோம்  கோரிக்கைகளை !  வென்றெடுப்போம்  நாளைய  வெற்றிகளை ! இதுவே எதிர்கால வரலாறு !


ஒரு சில இடங்களில்  நம் தோழர்கள்  தம்மைத்  தாமே   பரிசீலிக்க வேண்டிய நேரமிது .. தனிப்பட்ட  மன உணர்வுகள் இயக்கத்தை சிதைத்துவிடும்  என்பதை  அவர்கள் உணர வேண்டுகிறோம்..... இயக்கம் இருந்தால் தான் அவர்களே இருப்பார்கள் என்பதையும் அவர்கள் உணர வேண்டுகிறோம்....... தம்  மன நிலைகளில் மாற்றம் பெற நாம் அன்போடு வேண்டுகிறோம் ...... அந்த இடங்கள் வெகு சிலவேனும் ........ அவற்றைக் குறியிட்டுக் காட்ட நாம் மனம் ஒப்பவில்லை எனினும்  .......  தேவை அவர்களின் மன மாற்றமே !  அது அவர்களே  அறிய ...... உணர வேண்டிய உண்மையாகும்.  அந்த  திசை நோக்கி சிந்திக்க அன்புடன்  வேண்டுகிறோம் ..... நம் அடுத்த கட்ட  போராட்டம்  90% வெற்றி அல்ல ....100 க்கு 100% வெற்றிக்கான இலக்காக  இன்றே மனதில்  கொள்ள வேண்டுகிறோம்.


இன்றே கோரிக்கை தீர்வு நோக்கி  மத்திய அரசு பரிசீலிக்க  , தீர்வு காண அதன் அனைத்து துறைகளிலும்  நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தின் அனைத்து அரசியல் கட்சிகளிடமும்   நம் கோரிக்கையின் குரல் ஓங்கி ஒலிக்கப்பட்டுள்ளது . தனித்து நின்றவர்கள் எல்லாம் , தடுக்கி விழுந்தவர்கள் எல்லாம் ,  அன்றைக்கு மீசையில் ஒட்டிய மண்ணை இன்றைக்கு NFPE  துடைக்கும் என்று  எண்ணுகிறார்கள் ...... இந்த ஆலவிருட்ச நிழலில்  தாங்கள் காய் பறித்து  'கதைக்கலாம்'  என்று எண்ணுகிறார்கள் . இது நூறாண்டுகள் கடந்த  இயக்கம் ..... அனைத்து தொழிலாளர்கள் இயக்கங்களுக்கும் முன்னோடியான  இயக்கம் ....  நேற்று பெய்த  மழையில் முளைத்த  காளான்கள் ...... மழை முடியுமுன்னரே அழிந்த வரலாறு தான் இங்குண்டு .  


65 ஆண்டுகள் ஆட்சிக் கட்டிலில்  கடந்த காங்கிரஸ்   பேரியக்கம் , 'இரும்பு மனிதர்' என்று பகரப்பட்ட  இந்திரா காந்தி அம்மயாராலேயே தமக்கென 1968இல்   உருவாக்கிய FNPO இயக்கம்,  44 ஆண்டுகள் கடந்த பின்னரும் , இன்று வரைகூடNFPE  க்கு எதிராக  15% உறுப்பினரின் நம்ம்பிக்கையை கூட பெறமுடியவில்லை என்பது  இயக்க வரலாறு .


வலிமை வாய்ந்த பாரதீய ஜனதா  அமைச்சர்கள் அத்வானி, வாஜ்பாய்  போன்றோர்கள்  , 1977 ஜனதா கட்சி அரசில் , தமக்கென  உருவாக்கிய BPEF  இயக்கம், 35 ஆண்டுகள் கடந்த பின்னரும்  , NFPE  க்கு எதிராக 5% உறுப்பினரின் நம்பிக்கையை கூட பெற முடியவில்லை என்பதும் இயக்க வரலாறு. 


இன்று நம்மால் தோற்றுவிக்கப்பட்ட  'அய்யாக்கள் '  நாளைய வெற்றியை  பங்கு போடும்  ' அப்பாக்களா ?'   அப்படியாயின்  அவர்கள் ஏழு நாட்கள் தனித்தே  போராடி என்ன செய்தார்கள்? . 'கருணையோடு பரிசீலிப்பீர்கள் என்பதால்  காலவரையற்ற வேலை நிறுத்தத்தை   கைவிடுகிறேன்' என்று   தாமே ஓடிப்போய் கதறியழுது ஏன்  சொன்னார்கள்? 17.12.2008 வேலைநிறுத்த  மாவீரர்கள் , கோபிநாத்  கமிட்டியை விடுத்து , ஓராண்டு கழித்தும் ' நடராஜமூர்த்தி' கமிட்டியின் அறிக்கையைக்கூட  பெறமுடியாத நிலை போலத்தான் இதுவும்.  அதுவும் கூட NFPE  இன் 06.10.2009 காலவரையற்ற வேலை நிறுத்த அறிவிப்பின் பின்னாலே 09.10.2009 இல் வெளியிடப்பட்டது போலத்தான் இன்றைய நிலையும்  .


குப்பைகளைத் தூக்கி எறியுங்கள் . ஊழியர்களை ஒன்று  படுத்துங்கள். எதிர்காலம்  இருண்ட காலமாக  இருக்கிறது . அதில் NFPE  என்ற ஒளி  விளக்கு ஒன்றே  பாதை வகுக்கும் என்பது  நம்  வரலாறு .  தனியார்மய  காலத்தில், அந்நிய மய  காலத்தில்  , நம் தொழிற்சங்கப் பாதை  நிச்சயம் மலர்ப்பாதை அல்ல . முட்களும் , பாம்புகளும்  நிறைந்ததே அந்தப் பாதை. ஆனாலும் அதில் பயணிக்க வேண்டியே உள்ளது .  


சங்கம் அமைக்கக் கூட தடை போடப்பட்டு மனமகிழ் மன்றம் அமைத்தும்  தொழிற்சங்கப் பாடம் சொல்லி ஊழியர்களை ஒன்று திரட்டி,  தன்னை இழந்த  பாபு  தாராபாதா போன்ற உத்தமத் தலைவர்களின்   வரலாற்றை  நாம் நினைவில் கொள்வோம்.  அந்த திசை நோக்கி பயணிப்போம்.


போராட்டத்தில்  உடன் நின்ற ஆயிரம் ஆயிரம்  அன்புத் தோழிய/ தோழர்களுக்கு   மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றி ! கோட்ட/கிளைச் செயலர்களுக்கும்  சங்க முன்னோடிகளுக்கும்  நம்  நெஞ்சார்ந்த நன்றி. ! தொழிற்சங்க வரலாற்றில்  இறுதிப் போராட்டம் என்று எதுவுமே இல்லை!
இன்றைய நம்  இலக்கு ஏழாவது ஊதியக்குழு உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளின் நிறைவே!   அந்த திசை நோக்கி அடுத்த கட்ட போரட்டத்திற்கு  நாம் தயாராவோம். 

NFPE  இன் வெற்றி உங்களின் வாழ்வு!.
 உங்களின் போராட்டம்  நம் அனைவரின் எதிர்காலம் ! .

   நன்றி தோழர்களே ! நன்றி !
என்றும் அன்புடன் 

R . தனராஜ் ,
மாநிலச் செயலர் , AIPEU  GDS (NFPE )
தமிழ் மாநிலம் .

Tuesday 4 December 2012

அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் GDS (NFPE ) இன் தமிழ் மாநில முதல் மாநாடு மாபெரும் வெற்றி !


புதியதோர் உலகம் செய்வோம்  !
கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம் !
........ புரட்சி கவிஞர்.


அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் GDS (NFPE ) இன் 
தமிழ் மாநில முதல் மாநாடு மாபெரும் வெற்றி  !

மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு  பிரச்சினைகள் எதுவும் இல்லாத , GDS  ஊழியர்கள்  மிகவும் மகிழ்ச்சியுடன்  பங்கேற்ற,  வரலாற்று சிறப்பு மிக்க NFPE  சம்மேளனத்தின் கீழ் அமைந்த AIPEU GDS (NFPE ) சங்கத்தின் முதலாவது தமிழ் மாநில மாநாடு  கடந்த 02.12.2012 அன்று  நாமக்கல்  நகரில் அமைந்துள்ள S.P.S. திருமண மண்டபத்தில்  காண்போர் வியக்கும் வண்ணம்  மிகச் சிறப்பாக  நடைபெற்றது

'படை பெருத்ததால்  பார் சிறுத்ததோ ' 'நாமக்கல் நகர்தான்  சிறுத்ததோ'  என வியக்கும் வண்ணம் 1200 க்கும் மேற்பட்ட GDS  தோழர்களின் பங்கேற்பு , அணி வகுத்த பேருந்துகள் , மகிழுந்துகள்  எனத்  தன்னார்வமாய்  குவிந்த  40 க்கு மேற்பட்ட  வாகனங்களின் வரிசை காண்போரை வியப்பில் ஆழ்த்தியது . இது 'கூட்டிய கூட்டமல்ல' , NFPE  என்ற மந்திரச் சொல்லின்பால் பற்று கொண்டு  'கூடிய கூட்டம்' என்று , மாநாட்டு அரங்கமும் தோழர்களின்   மகிழ்ச்சி வெள்ளமும்  மாநாட்டுக்கு கட்டியம் கூறியது

தமிழக NFPE  வரலாற்றில் முதல் முறையாக NFPE சம்மேளனத்தின் தலைவர்கள் , அகில இந்திய சங்க நிர்வாகிகள், தமிழ் மாநிலத்தின் அனைத்து மாநிலச் செயலர்கள் ஒருங்கே  ஒரே மேடையில்  கூடி AIPEU  GDS (NFPE ) சங்கத்தை வாழ்த்தியதும் , இனி தமிழ் மாநிலத்தில் 9 சங்கங்களும்  ஒரே குரலில் ஓங்கி ஒலிக்கும்  என்று முழங்கியதும் கூட  ஒரு இயக்க வரலாறுதான்

மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களின் பட்டியல் மிக நீளும் . ஆனால் அதில் முக்கியமானவர்கள் யார் யார் என்பதை கீழே தருகிறோம் .

Com.M.Krishnan, Secretary General, NFPE,
Com.K.Ragavendran, Working President, CCGE&W,
Com.K.V.Sridharan, Leader, JCM Staffside &  former Genl. Secy, AIPEU Gr.C., 
Com.P.Pandurangarao, General Secretary, AIPEU-GDS (NFPE)
Com.C.Chandra Sekhar, Working President, NFPE,
Com.S.Raghupathy, Asst. Secretary General, NFPE,
Com.S.Appanraj General Secretary SBCO Union.
Com.N.Gopalakrishnan, Working President, Gr.C., 
Com.A.Veeramani, Orgg. Secretary, AIPEU Gr.C (CHQ)
Com.J.Srivenkatesh, Circle President, Gr.C.,
Com.J.Ramamurthy, Circle Secretary, Gr.C.,
Com.Gopu Govindarajan, Org. Secretary, P-IV(CHQ)
Com. G.Kannan, CirclePresident, P-IV.,
Com. V.Rajendran, Circle Secretary, P-IV
Com.K.Sankaran, Circle Secretary, R-III.,
Com.K.Rajendran, Circle Secretary, R-IV.,
Com.P.Nagarajan, Org. Secretary, AIPAOEU (CHQ),
Com.R.B.Suresh, Circle Secretary, AIPAEA,
Com.A.Ragupathi Umashankar, Circle Secretary, AIPAOEU.,
Com.R.Dhanraj, Dy. General Secretary, AIPEU-GDS(NFPE) (CHQ)
Com.V.Murukan, Financial Secretary, AIPEU-GDS(NFPE) (CHQ)
Com.K.C.Ramachandran, Asst. General Secretary, AIPEU-GDS(NFPE) (CHQ)
Com.DSivagurunathan, Working President, AIPCPCCWF (CHQ)
 
 மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியாக  காலை 10.00 மணியளவில்  தேசியக் கொடியை தோழர் .KVS அவர்களும் , சம்மேளனக் கொடியை தோழர். கிருஷ்ணன் அவர்களும் AIPEU  GDS (NFPE ) இன் கொடியை  தோழர் பாண்டுரங்க ராவ் அவர்களும்  ஏற்றி வைத்து நிகச்சிகளைத் துவங்கினர்
 
வரவேற்பு குழுவின் சார்பில் நம்முடைய மூத்த தோழர் , நாமக்கல் அஞ்சல் மூன்று கோட்டச் சங்கத்தின்  முன்னாள் தலைவர்  தோழர் T . மணி அவர்கள்  அனைவரையும் வரவேற்றதுடன் நாமக்கல் கோட்டத்தின் வரலாற்று நினைவுகளை  பதிவும்  செய்தார்.  

தொடர்ந்து GDS  சங்கத்தின் துணைப் பொதுச் செயலாளர்  தோழர். R . தனராஜ் அவர்கள் தேர்தலுக்கு முன்னதான  மாநாட்டு நிகழ்வுகளுக்கு தலைமை தாங்கி  தனது உரையால்  முத்திரை  பதித்தார் . 

GDS சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் தோழர் P . பாண்டுரங்க ராவ் அவர்கள் துவக்க உரையாற்றினார்.  அதற்கு பின்னர்  மாநில சங்கத்திற்கான நிர்வாகிகள் தேர்தல் அறிவிக்கப் பட்டது  GDS  சங்கத்தின் அகில இந்திய நிதிச் செயலர் தோழர் முருகன் அவர்கள்  நிர்வாகிகள் தேர்தலை முன்னின்று சிறப்பாக நடத்தினார்.   

கீழ்க்காணும் நிர்வாகிகள், மாநாட்டு அரங்கில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான  தோழர்களின் உற்சாகமான கோஷங்களுக்கும் கரவொலிகளுக்கும் இடையே  ஏகமனதாகத்  தேர்ந்தெடுக்கப்பட்டு  முறையாக அறிவிக்கப் பட்டார்கள்

 
 President                     :    Com. S.Ramaraj, Kovilpatti Dn.


Vice President:                Com.V.Kaliamoorthy,Pondicherry Dn.   
                                        :    Com. M.Elangovan, Pattukottai Dn.
                                        :    Com. N.Sadasivam , Erode Dn.

Circle Secretary          :    Com. R.Dhanaraj, Nagapattinam Dn.


Asst. Circle Secy       :     Com.K.C.Ramachandran,Namakkal Dn.
                                             Com.M.Mahalingam, Erode Dn.
                                       :     Com. R.Sivaguru, Tiruvannamalai Dn.
                                       :     Com. V.Rajasekhar, Madhurai Dn.
                                       :     Com. S.Vijayakumar, Tambaram Dn.

Financial Secretay         : Com. R.Vishnudevan, Srirangam Dn.


Asst. Fin. Secretary       : Com. M.Durai, RMS ‘T’ Dn. Trichy.

Orgg. Circle Secretary   : Com. B.Jayaraj, Coimbatore Dn.
                                             : Com. P.Panner Selvam, Trichy Dn.
                                             : Com.S.Shanmugam, Salem West Dn.

Auditor                           :     Com.M,Nagarajan, Mayiladhuthurai Dn.

தொடர்ந்து மாநாட்டு நிகழ்ச்சிகளுக்கு  மாநிலத்  தலைவர் தோழர். ராமராஜ் அவர்கள் தலைமையேற்று சிறப்பாக நடத்தினார்.

மாநாட்டுத் தீர்மானமாக , முறையான முதலாம் அகில இந்திய மாநாட்டினை  தமிழகத்தின் தலைநகராம் சென்னையில் நடத்துவதென்று  தீர்மானம்  பலத்த கரவொலியுடன் ஏகமனதாக நிறைவேற்றப் பட்டது. இது தொழிற் சங்கத்தில் ஒரு வரலாற்றுப் பதிவாக எதிர்காலத்தின்  பதியப் படும் என்பதால்  நம் தமிழகத்திற்கு கிடைத்த ஓர்  அரிய  வாய்ப்பு என்றே அனைவரும் கூறி மகிழ்ந்தனர்

வரவேற்புக் குழுவால் தமிழ் மாநில GDS  சங்கத்திற்கு ரூ. 5000/- மும் அகில இந்திய மாநாட்டு நிதியாக ரூ.5000/- மும்  நன்கொடையாக மேடையிலேயே வழங்கப்பட்டது.

எதிர்வரும் 12.12.12 வேலை நிறுத்தத்தில் முழுமையாகப் பங்கு பெறுவதென்றும் , தமிழக NFPE  மாநிலச் சங்கங்களுடன்  இணைந்து பணியாற்றுவதென்றும்  ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டது

நாமக்கல் கோட்ட GDS சங்கத்தின் செயலர் தோழர் K .பொன்னுசாமி  அவர்கள் நன்றி கூற , மாநாடு இனிதே நிறைவுற்றது.  

மாநாட்டு ஏற்பாடுகள் , அருமையான  உணவு, தங்குமிடம், மனம் கனிந்த உபசரிப்பு என்று எல்லாவகையிலும் மிகக் குறுகிய காலத்தில் ,   மிகச் சிறப்பாக செய்த மாநாட்டு வரவேற்புக் குழுவுக்கும்  ,  நாமக்கல், திருச்செங்கோடு NFPE அஞ்சல் மூன்று, அஞ்சல் நான்கு, GDS  சங்கங்களுக்கும்  , குறிப்பாக வரவேற்புக் குழுவின்  தோழர். PKR என்று அன்போடு அழைக்கப்படும் தோழர் P. K . ராமசாமி அவர்களுக்கும் நம் அஞ்சல் மூன்று GDS  மாநிலச் சங்கங்களின் நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம்

மாநாட்டில், தன்னார்வமாய்  தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் இருந்து வந்து  எழுச்சியுடன் கலந்து கொண்ட  அஞ்சல் மூன்று, அஞ்சல் நான்கு , RMS  மூன்று, RMS  நான்கு ,GDS  சங்கங்களின் நிர்வாகிகளுக்கும் , தோழர்களுக்கும் இதர அன்புத்  தோழமை உள்ளங்களுக்கும்  நம் அஞ்சல் மூன்று GDS  மாநிலச் சங்கங்களின் நெஞ்சார்ந்த நன்றி என்றென்றும் உரியதாகும்.

நமது வெற்றியை நாளைய  சரித்திரம் சொல்லும்
இப்படை தோற்கின் எப்படி வெல்லும்
நீதிக்கு இது ஒரு போராட்டம் !
இதை நிச்சயம்  உலகம் பாராட்டும் ! 
மாநாட்டுக் காட்சிகள் 

மேலே - மண்டபத்திற்கு வெளியே  முப்புறமும் 
கீழே - மண்டபத்திற்கு உள்ளே கூடிய கூட்டம் 

கொடியேற்றும் காட்சிகள் 


மேடையில் தலைவர்கள்