அஞ்சல் , RMS ,MMS,GDS  கோட்ட/ கிளைச் செயலர்களே ! மாநிலச் சங்க நிர்வாகிகளே ! வணக்கம் !
மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் சார்பில் எதிர்வரும் 18.11.2014 அன்று சென்னை CPMG அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ள  தார்ணா  போராட்டத்தில்  தமிழகத்தின் அனைத்து பகுதிகளில்  இருந்தும்  பெருமளவில் ஊழியர்களை கலந்துகொள்ளச் செய்திட இன்றே  ஆயத்தப் பணிகளை மேற்கொள்வீர் !
அனைத்து மாநிலச் சங்க நிர்வாகிகளும்  தவறுதல் இன்றி இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டுகிறோம். நம்முடைய மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் மாபொதுச் செயலர் 
தோழர் M .கிருஷ்ணன் அவர்கள் இந்தப் போராட்டத்தில் நேரடியாக கலந்துகொள்வதாக அறிவித்துள்ளார்கள். எனவே இந்தப் போராட்டத்தை சிறப்பிப்பது நம் ஒவ்வொருவரின் கடமை ஆகும். 
சென்னை பெருநகரத்தில் உள்ள கோட்ட/கிளைகளைப் பொறுத்தவரை அனைத்து பகுதிகளில் இருந்தும் உணவு இடைவேளையில் ஊழியர்களை மிக அதிக எண்ணிக்கையில் திரட்டி இந்த தார்ணா  போராட்டத்தை சிறப்பிக்க  வேண்டுகிறோம்.  இது குறித்த அறிக்கையின் நகல் கீழே  பிரசுரிக்கப் பட்டுள்ளது.  இந்த நோட்டீஸ் மற்றும் போஸ்டர் இன்று அனைத்து கோட்ட/ கிளைகளுக்கும் DESPATCH  செய்யப் படுகிறது.
வெல்க போராட்டம் ! ஓங்குக தொழிலாளர் ஒற்றுமை !
J . இராமமூர்த்தி   M . துரைபாண்டியன்      S . சுந்தரமூர்த்தி 
                         தலைவர்                     பொதுச் செயலர்        நிதிச் செயலாளர்.
                                           மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் ,
                                                                    தமிழ் மாநிலம்.


 
