Saturday, 21 November 2015

நமது NFPE சம்மேளன மாபொதுச்செயலாளர் தோழர் R.N பராசர் மற்றும் அனைத்து மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளன பொதுச்செயலாளர் அவர்களும் கீழ்க்கண்ட கடிதத்தை எழுதி    வருகிற 24.11.2015 அன்று  மாநிலம் 
தழுவிய ஆர்பாட்டமும், 27.11.2015 அன்று  கருப்பு சின்னம் அணிந்து வேலை செய்து நமது கண்டனத்தை தெரிவித்திடுமாறு  கேட்டுக்கொண்டுள்ளார் இத்துடன் GDS  ஊழியர்களின் கமிட்டி முறையான, சரியான நீதியரசர் குழு அமைப்பதிலும் கவனம் செலுத்துவார்கள் என நம்புகிறோம்!    
IV ம் நிலை ஊழியன் சம்பளம் Rs.18000/-அதிகபட்சம் 
சம்பளம் பெறும் ஊழியன்  சுமார் Rs. 2,00,000/-லட்சம்  
இருவரும் இந்திய குடிமகன் இது தான் ஜனநாயகம்
மாதம் 5000/- க்கு குறைவாக பெறும் ஊழியன் நிலை// // அவலநிலை// //   


அன்புத் தோழர்களே ! வணக்கம் ! 

7 ஆவது ஊதியக் குழுவின் பிற்போக்குத்தனமான  பரிந்துரைகளை நாம் கடுமையாக எதிர்க்கிறோம். ஏனெனில்  10  ஆண்டுகள்  கழித்து வழங்கப்படும் ஊதிய  உயர்வு  வெறும் 14.29% மட்டுமே .  அதன் மூலம் ஏற்பட்டிருக்கும் ஊதிய உயர்வினால் அரசுக்கு 1 லட்சம் கோடி மேலும் செலவு  என்று  ஊடகங்களில்  பொய்  பிரச்சாரம் செய்யப்படுவதை  நாம் வன்மையாக கண்டிக்கிறோம். இது பொது மக்களை  அரசு ஊழியர்களுக்கு எதிராக தூண்டிவிடும்  கேவலமான அரசியல் அன்றி வேறு  எதுவுமாக இருக்க முடியாது.

உதாரணத்திற்கு சாதாரண கடை நிலை ஊழியரின்  ஊதியம் குறித்து  பார்த்தாலே இது தெளிவாகப் புரியும் . 

தற்போது MTS  ஊழியர் வாங்கும் ஆரம்ப நிலை சம்பளம் : ரூ. 7000/-
1.1.2016 முதல் வழங்க வேண்டிய   D .A .  125%                             :  ரூ. 8750/-
ஆக 1.1.2016 இல்  பெறும்  மொத்த ஊதியம்                               :   ரூ.15750/-

தற்போது ஊதியக் குழு 125% D.A. சேர்த்து நிர்ணயித்துள்ள 
ஆரம்ப நிலை அடிப்படை  ஊதியம்                                              :  ரூ.18000/-
======================================================================
இரண்டிற்கும் வித்தியாசமான  ஊதிய உயர்வு                      :  ரூ. 2250/- மட்டும்.
======================================================================
ஆனால் தற்போது அவர் கட்டவேண்டிய 
NPS  CONTRIBUTION       10%                                                                  :  ரூ. 1800/-
தற்போதைய திட்டப்படி  அவர் கட்டவேண்டிய 
CGEGIS  PREMIUM  தொகை                                                               : ரூ. 1500/-
(இரண்டு தொகைகளுமே  அரசிடம்தான் செல்லும் . 
உடனே ஊழியருக்கு  திரும்ப வராது . )
மொத்தம் அவர்  உடனடியாக கட்டவேண்டிய  தொகை      : ரூ. 3300/-

உயர்த்தப் பட்டது  ரூ. 2250/- கட்டவேண்டிய ரூ. 3300/-. அப்படியானால் TAKE  HOME PAY  என்னவாகும்  ? HRA  யும் குறைக்கப்பட்டு விட்டது.  TPA  மட்டும் பஞ்சப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைப்பதால்  உயருகிறது. அப்படியானால் அரசுக்கு செலவினம் என்பது  எவ்வளவு ?

இது போலத்தான் ஒவ்வொரு ஊழியருக்கும்.  நிலைமை இதுவெனில் , அரசுக்கு ஒரு லட்சம் கோடி உடனடியாக  எப்படி செலவாகும்.? இதுபோல பல செய்திகளை சொல்லிக் கொண்டே போகலாம். ஒட்டு மொத்தத்தில் ஊதியக் குழு என்ற போர்வையில்  மத்திய அரசு , தனது  ஊழியர்களை அடியோடு ஏமாற்ற நினைக்கிறது.

இந்த நிலைமைகளை கணக்கில் கொண்ட ரயில்வே , பாதுகாப்புத் துறை உள்ளிட்ட அனைத்து மத்திய அரசு ஊழியர்களின் கூட்டு அமைப்பான  NJCA முதற்கட்டமாக  எதிர்வரும் 27.11.2015 அன்று அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் கறுப்புச் சின்னம்  அணிந்து அவரவர்  இடங்களில் ஊழியர்களை ஒன்று திரட்டி  எழுச்சி மிகு  கண்டன ஆர்பாட்டம்  நடத்திட தாக்கீது அனுப்பி உள்ளது . இதனை  மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனமும் , நம்முடைய NFPE சம்மேளனமும்  ஏற்று நடத்திட வேண்டுகிறது. எனவே  

தமிழகமெங்கும் 
(சென்னை பெருநகர கோட்டங்கள் உட்பட )

1. எதிர் வரும்  27.11.2015 அன்று அனைத்து ஊழியர்களும்  கருப்பு சின்னம் அணிந்து  மத்திய  அரசுக்கு  நம்  எதிர்ப்பை  தெரிவிக்க  வேண்டுகிறோம்.

2. அதே  நாளில் அந்தந்த   தலைமை அஞ்சலக  வாயிலில்  மற்றும் கோட்ட அலுவலக வாயிலில்  உணவு  இடைவேளை அல்லது மாலை நேர கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டுகிறோம்,

3. இந்த செய்தியை  அனைத்து   அச்சு மற்றும் காட்சி ஊடங்களுக்கு  தெரிவித்து  உங்களது போராட்டத்தை பதிவு செய்திட வேண்டுகிறோம்.

4. போராட்டத்தில் எடுக்கப் படும் புகைப்படங்களை  ஈமெயில்  மூலம் மாநிலச் சங்கத்திற்கு  உடனே  அனுப்பிட  வேண்டுகிறோம். (பல தோழர்கள் ஒரு வாரம் கழித்து அனுப்புகின்றனர். அதற்குள் அந்த செய்தி  பழமையானதால் நம்  வலைத்தளத்தில்  பிரசுரிக்க  இயலாமல் போகிறது  என்பதை  நினைவில் கொள்ளவும்.)

 மாநிலத் தலைமையகத்தில் 
மாபெரும்  ஆர்ப்பாட்டம் 

இதற்கு முன்னோட்டமாக  ஆயிரக்கணக்கில் அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் கலந்துகொள்ளும் வண்ணம்  நம்முடைய  தமிழ் மாநில தலை நகராம் சென்னையில்  அண்ணா சாலை  தலைமை அஞ்சலக வளாகத்தில்   தமிழக மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் சார்பில்  

எதிர்வரும்  24.11.2015 செவ்வாய்  அன்று மதியம் ஒரு மணியளவில்  
உணவு  இடைவேளையில் 
ஒரு மாபெரும்  கண்டன ஆர்பாட்டம் 
நடைபெற அறிவிக்கப் பட்டுள்ளது. 

இந்தப் போராட்டத்தில் சென்னை பெரு நகர மண்டலத்தில் இருக்கும் அனைத்து பகுதிகளில் இருந்தும்  ஆயிரக்கணக்கில்  தோழர் /தோழியர் அணிதிரள வேண்டுகிறோம். அனைத்து சங்கங்களின் மாநிலச் சங்க நிர்வாகிகள் , கோட்ட/ கிளைச் செயலர்கள்  கண்டிப்பாக  இந்த ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் கலந்து கொண்டு  மத்திய அரசுக்கு  நம்  முழு எதிர்ப்பை பதிவு செய்திட  கேட்டுக் கொள்கிறோம். 

இது வெறும்  ஆர்ப்பாட்டம்  அல்ல  !                                       உங்களின்  உணர்வு !
இது  வெறும்  போராட்டமல்ல !                                                உங்களின்  வாழ்வு !

எவரும்  இந்த  செய்தி  தெரியவில்லை என்று கூறக் கூடாது . தெரிந்தவர்கள் இந்த  செய்தியை உடனே  அடுத்த  தோழருக்கும்   மற்றும் நிர்வாகிகளுக்கும்  பகிரவும் .

பரவட்டும் !    போராட்ட  தீ  பரவட்டும் !
முழங்கட்டும்  !   உரிமை  முழக்கம்  முழங்கட்டும் !
எட்டட்டும்  46 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் உரிமைக் குரல் 
மத்திய  அரசின் செவிகளுக்கு எட்டட்டும் !

இன்றில்லையேல்  இனி  அடுத்த பத்து  ஆண்டுகளோ ? 
அல்லது  அதுவும் இல்லையோ ? எவருக்கும் தெரியாது . 


NATIONAL FEDERATION OF POSTAL

EMPLOYEES
1st Floor, North Avenue PO Bldg., New Delhi – 110001





 7th  PAY COMMISSION REPORT

TOTALLY DISAPPOINTING
POSTAL EMPLOYEES – ALL DEMANDS REGARDING ENHANCED WAGES AND SERVICE CONDITIONS REJECTED
 

HOLD PROTEST DEMONSTRATIONS ALL OVER THE COUNTRY
 

1.     Commission is of the view that there is no justification of upgrading the pay of
(a)  Postal Assistants/Sorting Assistants
(b) Postal Assistant (SBCO)
(c)  Postal Assistant (CO)
(d) Postman cadre & Mailguard.
(e)  PO & RMS accountants
(f)   Despatch Rider (MMS)
(g)  Multi-Tasking Staff (MTS) including Foreign Post
(h) Binders
(i)    System Administrators (No separate cadre or pay)
(j)    Marketing Executives (no separate cadre or Pay)
(k)  Artisans
(l)    Technical Supervisors (MMS) (in) Drivers

2.     Gramin Dak Sevaks cannot be treated as Civil servants at par with Regular employees. As they are only holder of civil posts and not civilian employees, no recommendations with regard to GDS.

3.     Recommended immediate merger of 33 Postal dispensaries in 10 Postal Circles with CGHS.
  
4.     ADDITIONAL POST ALLOWANCE FOR POSTMAN
10% of Basic Pay if one shares the another Postmen duty. If it is shared by two Postmen, it will be 5% for both.

5.     HOLIDAY MONETARY COMPENSATION
Supervisor, PA, Sorting Postman – Rs. 200/- per holiday.
MTS – Rs. 150/- per holiday

6.     ADDITIONAL WORK ALLOWANCE
2% of the Basic Pay per month
10% of the Basic pay if period exceeds 45 days.

7.     IP/ASP/SP SCALE UPGRADED
Commission has noted that the VI CPC had placed Inspector (Posts) at par with Inspector of CBDT/CBED. Subsequently the Inspector of CBDT/CBE were elevated to GP 4600. The Commission has further noted that the Inspector of Posts and Inspector of CBDT/CBED are recruited through the same combined graduate level examination. Therefore the commission recommended 4600 GP for IP and 4800 GP and 5400 GP for SPOs.


(R. N. Parashar)
Secretary General

Friday, 20 November 2015

அதிகாரி தலைமையில் கமிட்டி அமைத்தால் தற்போது 50% பிணமான GDS  விரைவில் அவர்கள் வீட்டில் மயான ஓலம் தான்  கேட்கும்.

 

7வது ஊதியகுலுவில் GDS ஊழியர்களுக்கு நீதிபதி மாத்தூர்  கீழ் கண்டபடி  குறிப்பிட்டுள்ளார் (இதுதேவையா அல்லது இதுவும்
 அரசினுடைய கசிவா ) பொறுத்திருந்து பார்ப்போம்!
GDS அனைவரும் இலாக்கா ஊழியர்களுக்கு இணையானஅனைத்து  வேலைகளை செய்யும்
 புறநிலை ஊழியன் !!!!  

1. GDS அனைவரும் இலாக்காவினால் கிராமபுறங்களில் வேலைசெய்ய Extra - Deparmental Agent என்ற பெயரில் ஆள் எடுக்கப்படுகிறது.

2. வேலை நியமன சட்டப்படி குறைந்தபட்ச கல்வித்தகுதி பத்தாவது என  நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

3. GDS அனைவரும் 4 மற்றும் 5 மணி நேரம் வேலைக்கு ஏற்ப தேர்வு செய்யபடுகிறார்கள்.

4. TRCA என்ற பெயரில் நிரந்தர இலாக்கா ஊழியர்களுக்கு இணையான ஊதியம் மற்றும் அகவிலைப்படி பெறுகிறார்கள்.

5. ஒரு GDS  ஊழியன் தனக்கும் தனது குடும்பத்திற்கும் தேவையான வருமானத்தை வேறு வழிகளில் சம்பாதித்துவிடுகிறார்.

     அரசு GDS ஊழியர்களை இலாக்காவிற்கு வெளியில் இருந்து பொதுவேலை செய்யும் வேலைசெய்யும் ஊழியன்.  இவர்கள் இலக்கா ஊழியர்களுக்கு இணையான சலுகைகளை கோரக்கூடாது.
   
    அதேபோல்,  GDS  ஊழியர்களின் பணி பொதுப்பணித்தான் ஆனால் பொதுபணியாளர்கள் இல்லை என  உச்சநீதிமன்றம் கூரியதாகவும் இவர்  
 எழுதிவுள்ளார். 
   இவ்வாறாக நம்மை (GDS)ஆண் பாலிலும்  இல்லாமல் பெண்பாலிலும் இல்லாமல் மூன்றாம் பாலினமாக சட்டத்திற்கு கட்டுப்பட்டு செயல்பட பணிக்கப்பட்டுள்ளோம். இந்த அஞ்சல்துறை அடிமைகளுக்கு சுதந்திரம் கிடைப்பது எப்போது ???? கிடைக்குமா??     

37.          GRAMIN DAK SEVAKS (GDS) OF THE POSTAL DEPARTMENT DEMAND FOR CIVIL SERVANTS STATUS REJECTED
Recommendation: - The committee carefully considered the demand for treating the Gramin Dak Sevaks as civil servants at par with other regular employees for all purposes, and noted the following:
(a)       GDS are Extra-Departmental Agents recruited by Department of Posts to serve in rural areas.
(b)       As per the Recruitment Rules the minimum educational qualification for recruitment to this post is class X.
(c)        GDS are required to be on duty only for 4 to 5 hours a day under the terms and conditions of their service.
(d)       The GDS are remunerated with Time Related continuity Allowance (TRCA) on the pattern of pay scales for regular Government employees plus DA on pro-rata basis.
(e)       A GDS must have other means of income independent of his remuneration as a GDS to sustain himself and his family.

Government of India has so far held that GDS is outside the Civil Service of the Union and shall not claim to be at par with the Central Government Employees. The Supreme Court Judgment also states that GDS are only holder of Civil posts but not civilian employees. The Commission endorses this view and therefore has no recommendation with regard to GDS.

Thursday, 19 November 2015

 இன்று  7வது  ஊதியக்குழு  அறிக்கை  அரசிடம் வழங்கப்பட்டுவிட்டது.GDS க்கு ஊதியக்குழு  அமைத்து  அறிக்கை  வழங்குவது ?


தோழர், தோழியர்களே , வணக்கம் .
    நடந்தது என்ன.  சுமார் இரண்டரை ஆண்டுகளாக நமக்கு தனி ஊதியக்குழு தேவையில்லை இலக்கா ஊழியர்களுக்கு அமைத்திடும் 7வது ஊதிக்குழுவே  GDS ஊழியர்களுக்கு தங்களது ஊதியம் உள்ளிட்டவைகளை பரிசீலித்திட வேண்டுமென தொடர் போராட்டங்கள் அறிவித்து நடத்தினோம். அரசும், இலாக்கவும் நமது NFPE சம்மேளனத்துடன் பல முறை பேசி அரசும், இலாக்கவும் சம்மதித்து நிதி அமைச்சகத்திற்கு 3 முறை அனுப்பப்பட்டு நிதி அமைச்கம் நிராகரித்துவிட்டது .
      இறுதியாக நமது NFPE சம்மேளனம் கடந்த 06.11.2015 அன்று, வருகிற டிசம்பர் 01.12.2015 முதல் 02.12.2015 வரை 48 மணி நேர  வேலை நிறுத்தம்  அறிவித்து இலாக்காவிற்கு கடிதம் கொடுத்துவிட்டது . மாநில மட்டத்தில் Co  Ordination கமிட்டியினால்  9 சங்க மாநில, மண்டல, கோட்ட, கிளை பொறுப்பாளர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஆகவே  நமது ஊழியர்கள் அஞ்சல் 3, அஞ்சல் 4, RMS 3,RMS 4, SBCO , Audit & Accounts, Admin   மற்றும் Casual Labour  பொறுப்பாளர் மற்றும் தோழர்களை  தொடர்பு கொண்டு  வேலைநிறுத்தம்  முழுமையாக வெற்றிபெற  உழைத்திடுமாறு  கேட்டுக்கொள்கிறோம்.  இதனால் நிச்சயம் அரசு  நமக்கு  7வது ஊதியக்குழுவே பரிசீலித்திட வழி வகுத்திடும்,

   சமவேலைக்கு சமஊதியம் கிடைத்திடத்தான் அதிகாரி குழு தேவையில்லை நீதிபதி குழுதான்  தேவை என போராடுவோம், வெற்றிபெறுவோம்.     
  

Wednesday, 11 November 2015

DEPARTMENT OF POST HAS APPOINTED SECRETARY TO GRAMIN DAK SEWAK COMMITTEE

நம்முடைய   48 மணி நேர வேலை  நிறுத்த  அறிவிப்பையும்  மீறி அதிகாரி  தலைமயிலான   கமிட்டி  அமைத்திட  இலாக்கா முனைந்துள்ளது . அதற்கான  உத்திரவு  கீழே  பார்க்கவும்.  இதனை  நாம்  முழுமையாக எதிர்த்திட  வேலை நிறுத்தத்தை  தீவிரப்படுத்துவோம்.

Dept of Posts has constituted Gramina Dak Sewak Committee to go through the issues relating to Gramina Dak Sewaks . Now the Postal Directorate has appointed Sri T.Q.Mohammad (IPoS 1994), PMG, Agra region UP Circle as Secretary of the said Gramina Dak Sewak Committee Pl see the orders below:-

TN COC DULY SIGNED BY THE NINE CIRCLE SECRETARIES OF NFPE, TN HAS SERVED THE STRIKE NOTICE TO THE CPMG, TN ON 06.11.2015

SOME OF THE PHOTOS TAKEN DURING THE LUNCH HOUR DEMONSTRATION CONDUCTED BY NFPE TN COC FOR SERVING OF STRIKE NOTICE ON 48 HRS DECEMBER 2015 STRIKE









Thursday, 11 June 2015

30 TH AIC OF AIPEU GR.C HELD AT LUCKNOW FROM 04.06.2015 TO 08.06.2015

AFTER THE LEGEND LEADER OF THE MIGHTY 
ORGANISATION,  COM.N.C.A.,
AFTER A LONG GAP OF 18 YEARS, 
AFTER "MATHURA AIC " IN 1997,
TAMIL NADU CIRCLE HAS GOT THE PRESTIGIOUS POSITION
IN THE ALL INDIA UNION
IT'S ALL BECAUSE OF THE GREAT LEADERS 
COM. M.KRISHNAN AND COM. KVS.
WE CONVEY OUR SINCERE THANKS ON BEHALF OF 
TAMIL NADU CIRCLE UNION.

OUR NEWLY ELECTED ALL INDIA PRESIDENT COM.J.RAMAMURTHY

OUR NEWLY ELECTED GENERAL SECRETARY 
COM.R.N. PARASHAR


OUR NEWLY ELECTED  ASST. GENL SECRETARY 
COM. A. VEERAMANI


OUR NEWLY ELECTED ASST.GENL SECRETARY 
COM. S. RAGUPATHY


NEWLY ELECTED MAHILA COMMITTEE 
COM. R. MANIMEGALAI AND COM.ANGEL SATHIYANATHAN FROM TAMILNADU CIRCLE 

Tuesday, 5 May 2015

Postal indefinite strike from 6th May 2015 deferred

6th May 2015  -- POSTAL JCA STRIKE DEFERRED
****
HON’BLE COMMUNICATION MINISTER ASSURED INCLUSION OF GDS IN 7th CPC
****
Shri Ravi Shankar Prasad, Hon’ble Minister for Communications & IT had invited Secretary Generals of NFPE & FNPO for discussion on 5th May 2015
******
After discussion Secretary General reported that Minister, Communications told that GDS are to be included in 7thCPC and he will personally convince the Finance Minister to grant approval to the proposal of Communication Ministry  to include GDS in 7th CPC.
*****
Based on this assurance Postal JCA decided to defer the strike.
In case the assurance of the Minister is not honoured Postal JCA go on strike.

P.Pandurangarao
General Secretary
AIPEU GDS (NFPE)

Thursday, 30 April 2015

REVOLUTIONARY MAY DAY GREETINGS TO ALL COMRADES AND READERS

MEETING OF PJCA LEADERS ON STRIKE CHARTER WITH SECRETARY POSTS INCONCLUSIVE ! PL INTENSIFY CAMPAIGN !

POSTAL JCA DHARNA IN FRONT OF DAK BHAVAN, NEW DELHI DEMANDING 26 POINT CHARTER













HISTORIC PARLIAMENT MARCH ON 28.04.2015 AT NEW DELHI BY ALL CENTRAL GOVT. EMPLOYEES ORGANISATIONS UNDER NC JCM

தொழிற் சங்க வரலாற்றில்  ஒரு மைல்  கல் !
50000 ஊழியர்களுக்குமேல் கலந்துகொண்ட  அனைத்து   மத்திய அரசு ஊழியர்களின்  பாராளுமன்றம் நோக்கிய பேரணி ! 
படை பெருத்ததோ  பார் சிறுத்ததோ  என எங்கு நோக்கினும் 
தொழிலாளர் வெள்ளம் !

தமிழகத்திலிருந்து  அஞ்சல் மூன்று மாநிலச் செயலர்  தோழர். J . இராம மூர்த்தி , அஞ்சல் மூன்று மாநில நிதிச் செயலர் தோழர். A . வீரமணி , அஞ்சல் நான்கு மாநிலச் செயலர் தோழர். G . கண்ணன் , AIPEU  GDS  NFPE மாநிலச் செயலர் தோழர். R . தனராஜ் . மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன தமிழக பொதுச் செயலர்  தோழர் . M . துரைபாண்டியன் உள்ளிட்ட  அஞ்சல்,  வருமானவரித்துறை, AG  அலுவலகம், ராஜாஜி பவன் , சாஸ்திரி பவன் , MEDICAL  STORES  உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நூற்றுக் கணக்கில் தோழர்கள் தோழியர்கள் கலந்துகொண்டனர் . தென்னக ரயில்வே பகுதியில் இருந்து SRMU , SRES  சங்கங்களில் இருந்து ஆயிரக்கணக்கில் ஊழியர்கள் கலந்துகொண்டனர் என்பது சிறப்பு. வட கோட்டச் செயலர் தோழியர்  ஏஞ்சல் சத்தியநாதன்  , கோட்டத் தலைவர் தோழர். மோகன் ஆகியோர் தலைமையில் பெருமளவில் சென்னை வட கோட்டத்தின் ஊழியர்கள்  கலந்துகொண்டு சிறப்பித்தனர்.