Monday, 4 July 2016

நாகப்பட்டினம் அஞ்சல் 3 கோட்டச்சங்கம் தனது வலைதளத்தை  துவக்கியுள்ளது, நல்ல பல ஆக்கப்பூர்வ தகவல்களை வழங்கிடுமாறு தமிழ் மாநில AIPEU  GDS சங்கம் கேட்டுக்கொள்கிறது வலைதள முகவரி www.nmnfpe blogspot .com

Thursday, 30 June 2016

7 வது ஊதிய குழுவின் பரிந்துரையும், ஏமாற்றமும்

அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கங்கள்,
நாகைகோட்டம், நாகப்பட்டினம் – 611 001
சுற்ற்றிக்கை எண்:- 15                                        நாள்:- 30.06.2016
7-வது ஊதியக் குழு பரிந்துரையின்படி  கடைநிலை ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000 ஆக இருக்கும்.  புதிய ஊதிய உயர்வு ஜனவரி 1-ல் இருந்து முன்தேதியிட்டு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. .
பரிந்துரையும் திருத்தமும்..
மத்திய அரசு துறைகளில் பணியாற்றி வரும் கடைநிலை ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில்  14.27 சதவீதம் ஊதியத்தை உயர்த்தலாம் என கடந்த ஆண்டு நவம்பர் இறுதியில் 7வது ஊதிய குழு பரிந்துரைத்திருந்தது. 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த அளவில் ஊதியத்தை உயர்த்த 7வது ஊதியக் குழு பரிந்துரை செய்ததால், அதை திருத்த அமைச்சரவை செயலர் பி.கே.சின்ஹா தலைமையிலான செயலர்கள் குழு அமைக்கப்பட்டது. இக்குழு குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.23,500 ஆக  நிர்ணயிக்க வேண்டும் என பரிந்துரைத்திருந்தது. திருத்தப்பட்ட இந்தப் பரிந்துரைக்கே மத்திய அரசு இன்று ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படியே மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தை நிர்ணயித்து மத்திய அமைச்சரவை இன்று (புதன்கிழமை) ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள் அதிருப்தி:
இந்நிலையில், 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த அளவில் ஊதியத்தை உயர்த்த 7வது ஊதியக் குழுவின் பரிந்துரை ஏற்புடையதாக இல்லை எனக் கூறி மத்திய அரசு ஊழியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். விலைவாசிக்கேற்றவாறு ஊதிய உயர்வை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
அஞ்சல் துறையில் கடைநிலை ஊழியர்கள் பெறும் அடிப்படை மாத ஊதியம் 7000 மற்றும் அகவிலைப்படி (125%) 8750 ஆகியவற்றை ஒன்றினைத்து மாத அடிப்படை ஊதியம் ரூ.18000/- என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாத அடிப்படை ஊதியம் 7000/-த்திலிருந்து 18000/-ஆக உயர்த்தப்பட்டால் ரூ.11000/- உயர்ந்து இருக்க வேண்டும். ஆனால் உண்மையான மாத ஊதிய உயர்வு ரூ.2250/- மட்டுமே. நமது சங்கங்களின் நியாமான குறைந்தபட்ச அடிப்படை மாத ஊதியம் ரூ.26000/- நிர்ணயிக்கவேண்டும் என்ற கோரிக்கை முற்றிலும் நிராகரிக்கப்பட்டுள்ளது. நமது எதிர்ப்பையும், கண்டனத்தையும் இப்பொழுது தெரிவிக்காவிட்டால் அடுத்த 10 வருடங்களுக்கு நம் உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்லாமல் போய்விடும். இலாக்கா ஊழியர்களுக்கே இந்த அவல நிலை என்றால், புறநிலை ஊழியர்களின் ஊதியமாற்றம் நிச்சயம் நியாயமானதாக இருக்காது. ஆகவே, வருகிற 11.07.2016 அன்று நடைபெறுகின்ற காலவரையற்ற வேலை நிறுத்ததில் நாம் அனைவரும் முழுமையாக பங்குபெற்று நமது கோரிக்கைகளை வென்றெடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.                        
போராட்ட வாழ்த்துக்களுடன் !
தலைவர்                                      செயலர்                               நிதிச்செயலர்
கே.மனோகரன்-P3                     எஸ்.மீனாட்சிசுந்தரம்-P3                எஸ்.மாரிமுத்து-P3
எம்.சரவணவேலன்-P4                      பி.தசரதன்-P4                        டி.ராஜேந்திரன்-P4
எம்.வீரமணி-NFPEGDS                டி.சட்டநாதன்-NFPEGDS              வி.பக்கிரிசாமி-NFPEGDS

புதிய அத்தியாயம்!

நீண்ட காலத்திற்கு பிறகு நமது கோட்ட சங்கத்தின் புதிய அத்தியாயம் இணையத்தில் தொடக்கம்! இனி வரும் நாட்களில் நமது பயணம் ஒரு புதிய எழுச்சியுடன் ஆரம்பமாகிறது.

Saturday, 2 July 2016

Employment News : 2 - July to  8 - July 2016

JOB HIGHLIGHTS

CENTRAL UNIVERSITY OF SOUTH BIHAR
Name Of Post : Professor, Associate Professor, Assistant Professor
No.of Vacancies : 73
Last Date :18.07.2016
 
INDIAN OIL, DHALIGAON
Name Of Post : Trade Apprentice, Attendant Operator, Tech. Apprentice
No.of Vacancies : 90
Last Date :08.07.2016
 
SATISH DHAWAN SPACE CENTRE SHAR, SRIHARIKOTA
Name Of Post : Technician-B, Draftsman-B, Fireman-A
No.of Vacancies : 53
Last Date :20.07.2016
 
BUREAU OF POLICE RESEARCH AND DEVELOPMENT, DELHI
Name Of Post : Deputy Superintendent, Sr. Scientific Assistant, Inspector, Stenographer,U.D.C., Vice Principal, Asst. Director, etc
No.of Vacancies : 93
Last Date :Last date for receipt of application is 2 Months from the date publication
 
CENTRAL INSTITUTE OF MINING & FUEL RESEARCH
Name Of Post : Assistant, Jr. Stenographer
No.of Vacancies : 45
Last Date :25.07.2016
 
NATIONAL FERTILIZERS LIMITED, NOIDA
Name Of Post : Office Assistant Grade III, Accounts Assistant and Mkt. Representative
No.of Vacancies : 78
Last Date :19.07.2016
 
UNION PUBLIC SERVICE COMMISSION
Name Of Post : Junior Scientific Officers, Medical Officers, Scientists SB, Statistical Investigators etc
No.of Vacancies : 14.07.2016
Last Date :44
 
THE NATIONAL SMALL INDUSTRIES CORPORATION LIMITD
Name Of Post : Chief Manager, Deputy Manager, Assistant Manager
No.of Vacancies : 60
Last Date :11.07.2016
 
MISHRA DHATU NIGAM LTD, HYDERABAD
Name Of Post : Junior Operative Trainees and Senior Operative Trainees
No.of Vacancies : 86
Last Date :15.07.2016

Source : http://employmentnews.gov.in/

ஆர்ப்பாட்ட கூட்ட புகைப்படங்கள்

7வது ஊதியக் குழு ஊழியர்களுக்கு விரோதமான அறிக்கையை வெளியிடப்பட்டதை எதிர்த்து நமது ஊழியர்கள் தங்களது அலுவலக வாயிலில் ஆர்ப்பாட்ட கூட்டம் நடத்தி அதிலே கோரிக்கை விளக்கவுரை தலைவர்கள் மற்றும் கோட்டப் பொறுப்பாளர்கள் கலந்துகொண்ட புகைப்படங்கள்
CHENNAI GPO
 
 CHENNAI CITY SOUTH DIVISION

ANNA ROAD

 VELLOUR

ERODE DIVISION

Friday, 1 July 2016

 30.06.2016 அன்று ஊழியர் விரோத 7வது ஊதிய குழு சிபாரிசை அறிவித்த மத்திய அரசை எதிர்த்து நாகப்பட்டினம் கோட்ட அலுவலக வாயிலில் ஆர்ப்பாட்ட கூட்டம் நடைபெற்றது. அஞ்சல் 3 கோட்ட செயலர் தோழர் S.மீனாட்சிசுந்தரம் அஞ்சல் 4 கோட்டச் செயலர் தசரதன் GDS கோட்டச்செயலர் T.சட்டநாதன் கோரிக்கையை விளக்கி பேசினார்கள் மேலும் AIPEU GDS மாநிலச் செயலர் மற்றும் அகில இந்திய துணைப் பொதுச்செயலருமான தோழர் R. தனராஜ் கலந்துகொண்டு உரையாற்றினார்

30.06.2016 அன்று நிதி அமைச்சர் திரு அருண்ஜெட்லீ தலைமையில் பேச்சுவார்த்தைநடைபெற்றது

30.06.2016 அன்று நிதி அமைச்சர் திரு அருண்ஜெட்லீ தலைமையில் நடைபெற்ற வேலைநிறுத்த அறிக்கை தொடர்பான பேச்சுவார்த்தையில் நமது தலைவர்கள் கலந்துகொண்ட புகைப்படம் . தீர்வு எட்டப்படவில்லை , நிச்சயம் வேலைநிறுத்தம் நடைபெறும். 

ஊதிய நிர்ணயம் உள்ளிட்டவைகள் பரிசீலிக்கப்படும் என அரசு அறிவிக்கிறது .ஆனால் உடனடியாக மாற்றம் செய்து அறிவிக்கப்பட வேண்டும் இல்லை என்றால் குறிப்பிட்டபடி வரும் 11.07.2016 முதல் கால வரையற்ற வேலைநிறுத்தம் தொடரும் என நமது தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

Yesterday night (30.06.2016) there is meeting with the Ministers headed by Arun Jaitely and our NJCA Leaders on pay commission issues. The government has proposed to refer the issue of Minimum Wage and Fitment Formula to a Committee for reconsideration.

The NJCA is awaiting communication in the regard from the Government.
NO CHANGE IN THE NJCA DECISION TO GO ON STRIKE FROM 11TH JULY 2016. 

The NJCA will again meet on 6th July at 11:00 hrs., in JCM Office, 13-C, Feorzshah Road, New Delhi, for taking appropriate decision.

11.07.2016 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த விளக்க JCA அறிக்கை

11.07.2016 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த விளக்க JCA அறிக்கை