Monday, 27 January 2014

TN JCA CALL ON 48 HOURS STRIKE - DEMONSTRATIONS IN FRONT OF ALL H.O.S ON 28.01.2014- SERVING STRIKE NOTICE COPY


JCA
NFPE - FNPO

அன்பார்ந்த  தமிழக NFPE மற்றும் FNPO சம்மேளனங்களின்  உறுப்பு மாநில/ மண்டல/ கோட்ட/ கிளை நிர்வாகிகளே ! உங்கள் அனைவருக்கும் வேலைநிறுத்த போராட்ட வீர வணக்கங்கள்  !

 கடந்த17.01.2014 அன்று தமிழக JCA வில் எடுக்கப் பட்ட ஒருமித்த  முடிவின் அடிப்படையில் , மத்திய அரசு ஊழியர்களின் அறிவிக்கப் பட்ட பிப்ரவரி 12, மற்றும் 13, 2014 தேதிகளில்  நடைபெறவுள்ள 48 மணி நேர வேலை நிறுத்தத்தை ஒட்டி , கடந்த 25.01.2014  அன்று   திருச்சி , மதுரை  மற்றும் கோவை  மண்டலங்களில் மாநிலச் செயலர்கள் கலந்துகொண்ட வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டங்கள் சிறப்பாக நடந்தேறியுள்ளது.

CPMG அலுவலகம் முன்பு உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம்                 

அதேபோல , நாளை மதியம் 12.30 மணியளவில் சென்னை CPMG அலுவலகம்  முன்பாக  தமிழக JCA சார்பில்  NFPE மற்றும் FNPO மாநிலச் சங்கங்களின் அனைத்து மாநிலச் செயலர்களும் கலந்துகொள்ளும் உணவு இடைவேளை  ஆர்ப்பாட்டமும் ,  தொடர்ந்து வேலை நிறுத்தத்திற்கான NOTICE நகலை CPMG அவர்களிடம் வழங்கிடும் நிகழ்வும் நடைபெற  உள்ளது. 

எனவே சென்னை பெருநகரத்தில் உள்ள  அனைத்து கோட்ட/ கிளைகளில் இருந்தும்  NFPE மற்றும் FNPO இயக்கங்களைச் சார்ந்த அஞ்சல், RMS, MMS, GDS பகுதிகளின்  தோழர்களும் தோழியர்களும்  பெரும் எண்ணிக்கையில் கலந்துகொண்டு  இந்த நிகழ்வை  சிறப்பிக்க வேண்டுகிறோம். 

வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்திற்கு வரும் தோழர்களின் எண்ணிக்கையே நிர்வாகத்திற்கும் அரசாங்கத்திற்கும் இந்த வேலை நிறுத்தத்தின் வலிமையை  முழுவதும் முன்னோட்டமாக எடுத்துக் காட்டும் . 

எனவே  சென்னை பெருநகரத்தின் கோட்ட / கிளைகளின்  செயலர்கள் மற்றும் நிர்வாகிகள் கண்டிப்பாக தங்கள் பகுதியில் இருந்து பெரும் எண்ணிக்கையில் ஊழியர்களை இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள செய்திட வேண்டுகிறோம்.

தமிழகத்தின் அனைத்து தலைமை 
அஞ்சலக வாயில்களிலும் ஆர்ப்பாட்டம் 

அதேபோல , சென்னை பெருநகர் தவிர  தமிழகத்தின் அனைத்து தலைமை அஞ்சலகங்களின் வாயிலிலும் நாளை உணவு இடைவேளை ஆர்ப்பாட்டமோ  அல்லது மாலை வேளையில்  கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ர்ப்பட்டங்களோ கண்டிப்பாக JCA சார்பில் நடத்திட வேண்டும்.  ஆங்காங்கு உள்ள பொறுப்பாளர்கள் எந்தவித குழு மனப்பான்மையும் இன்றி  இந்த ஒற்றுமையை  கட்டிட வேண்டும்.

மேலும் பத்திரிக்கைகளுக்கும் , தொலைக் காட்சிகளுக்கும் உங்கள் போராட்ட செய்தியை  அறிவித்திட வேண்டுகிறோம். அனைத்து கோட்ட/ கிளைகளில் இருந்தும்  அனைத்து உறுப்பினர்களுக்கும் சுற்றறிக்கைகள் தவறாமல்  வெளியிடப்பட வேண்டுகிறோம்.

 'எனக்கு தெரியாது' என்று எவரும் தயவு செய்து சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். ஏற்கனவே சுவரொட்டிகள் அனுப்பப் பட்டுள்ளன. வலைத்தளங்களில்  செய்திகள் பிரசுரிக்கப் பட்டுள்ளன. அந்தந்தப் பகுதிகளில் சுற்றறிக்கைகள் அனுப்பப் பட்டுள்ளன.  பொறுப்பாளர்களுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பப் பட்டுள்ளன. எனவே  தொழிற்சங்க உணர்வுள்ள ஒவ்வொரு நிர்வாகியின் கடமை இந்தப் போராட்டத்தை வலிமையுறச் செய்வது ஆகும்.

இந்தப் போராட்டத்தை  ஒற்றுமையாக , வெற்றிகரமாக நடத்திடச் செய்வது நம் ஒவ்வொருவரின் தலையாய கடமை ஆகும். 
                                        
50%  சத பஞ்சப்படி  இணைப்பை  வெல்வோம் !
                                                                                                     
இடைக்கால நிவாரணம் நிச்சயம் நாம் பெறுவோம் !
                                                                                                                     
GDS ஊழியர்களை ஊதியக் குழு வரம்புக்குள் 
நிச்சயம் கொண்டு வருவோம் !
                                                                                                              
GDS ஊழியருக்கு அரசு ஊழியருக்கு இணையான தகுதி பெறுவோம் !
                                                                                                                                                
5 கட்ட பதவி உயர்வு நிச்சயம் பெறுவோம் !
                                                                                                            
1.1.2004 க்குப்  பின்னர் பணியில் சேர்ந்தவருக்கும் முந்தைய ஒய்வூதியமே 
நிச்சயம் பெறுவோம் !
                                                                                                                                                   
5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய மாற்றம் பெறுவோம் !
                                                                                                                                           
மத்திய அரசு ஊழியர்களுக்கு தடைகளற்ற, பணம் செலுத்தாத 
நேரடி மருத்துவம்  பெறுவோம் !
                                                                                                                                                        
அனைத்து காலியிடங்களையும் உடன் நிரப்பிடச் செய்வோம் ! தேவைக் கேற்ற புதிய பதவிகளை உருவாக்கிடப் பெறுவோம் !.
                                                                                                                                               
பணியில் இறந்துபோன ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையிலான பதவி நியமனம் முழுமையாகப் பெறுவோம் !
                                                                                                                                                 
ஆட்குறைப்பு, ஒப்பந்த அடிப்படையில் பணியாட்களை நியமனம் செய்வது ஆகியவற்றை முற்றிலும் ஒழிக்கப் பெறுவோம் !
                                                                                                                                  
வேலை நிறுத்தம் செய்திடும் உரிமையை சட்டமாக்குவோம் !
                                                                                                                                                
நடுவர் மன்றத் தீர்ப்புகளை அமலாக்குவோம் !
                                                                                                                           
OTA, NIGHT DUTY ALLOWANCE, CLOTHING RATES உயர்த்திப் பெறுவோம் !
                                                                                                                                                                
தொழிற்சங்கத்தினரை பழி வாங்கும் நடவடிக்கைகளை 
தடுத்து நிறுத்திடுவோம் !  

இவையெல்லாம் பெறவேண்டுமா ? ஒன்று பட்டு போராடினால் மட்டுமே  இவையெல்லாம் சாத்தியம் .
தேர்தல் தேதி அறிவித்தபின் அரசு ஊழியர்களுக்கு எந்தவித  அறிவித்திட இயலாது என்பது உங்களுக்குத் தெரியுமா ?
அப்படியானால்  அதற்கு முன்னர் நாம்  ஒன்று பட்டு 
நம் கோரிக்கைகளை அரசின் செவிகளுக்கு கொண்டு 
சென்றிட வேண்டும்  அல்லவா ?
அதற்கு  மத்திய அரசு ஊழியர் அனைவரும் திரண்டெழுந்து போராடும் போது , அதன் முக்கிய பகுதியான நம் அஞ்சல் துறையில் 
போராட்டம் தீவிரப் படுத்தப் படவேண்டுமல்லவா ?

கிளர்ந்தெழுங்கள் தோழர்களே ! போராட்ட வீச்சினை அடிமட்டம் வரை கொண்டு செல்லுங்கள் ! இது உங்கள் கைகளில் தான் இருக்கிறது ! இன்றில்லையேல்  என்றுமே இல்லை ! தேர்தல் வந்துவிட்டால் எதுவுமே இல்லை ! 

ஒன்று படுவோம் ! போராடுவோம் ! போராடுவோம் ! 
வெற்றி பெறுவோம் ! வெற்றி கிட்டும் வரை போராடுவோம் ! 
இறுதி வெற்றி நமதே !

போராட்ட வாழ்த்துக்களுடன் 

J. இராமமூர்த்தி                                                                          G.P. முத்துக்கிருஷ்ணன் 
கன்வீனர் , NFPE இணைப்புக் குழு .              கன்வீனர், FNPO இணைப்புக் குழு ,
                                                                 JCA, தமிழ் மாநிலம்                                                     

Thursday, 23 January 2014

OUTCOME OF THE MEETING OF TN C.O.C. WITH THE PMG, SR HELD ON 21.01.2014

அன்புத் தோழர்களுக்கு வணக்கம் ! 

தென் மண்டல PMG   அவர்களுடன்  NFPE இன் தமிழக அஞ்சல் RMS இணைப்புக் குழு,  நாம் அளித்த MEMORANDUM மீது  கடந்த  21.01.2014 அன்று  பேச்சு வார்த்தைக்கு அழைக்கப் பட்டது   தெரிந்ததே .

அதன்படியே,  இணைப்புக் குழுவுடன் பேச்சு வார்த்தை காலை 11.00 மணிக்கு தொடங்கி  உணவு இடைவேளை தவிர இரவு 07.00மணி வரை நடைபெற்றது. தனது உடல்நிலை சரியில்லாதபோதும் கிட்டத்தட்ட 7 மணி நேரம் நம்முடன் தென் மண்டல PMG அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியது, நிச்சயம் அவருக்கு தொழிலாளர் நலன் மீது உள்ள அக்கறையை காட்டுவதாகவே உள்ளது . அதற்கு முதலில் நமது நெஞ்சார்ந்த நன்றியை மனப்பூர்வமாக நாம்  தெரிவித்துக் கொள்கிறோம். 

ஊழியர் பிரச்சினையை எடுத்து வரும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மீது கோப உணர்ச்சியோ காழ்ப்புணர்ச்சியோ  கொள்ளாமல் ,  தனிமனித விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு , பிரச்சினைகளை, பிரச்சினை களாகவே அணுகிய விதம்  நிச்சயம் பாராட்டுக் குரியதே !அவரது அந்த அணுகுமுறைக்கும் நம் நன்றி நிச்சயம் உரித்தாகும் !

நாம் அளித்த  MEMORANDUM இல் உள்ள அனைத்து பிரச்சினைகளும்  தீவிரமாக விவாதிக்கப்பட்டது . 

அஞ்சல் மூன்றின் சார்பாக மாநிலத் தலைவர் தோழர். ஸ்ரீ வெங்கடேஷ்மாநிலச் செயலர் தோழர். J .R ., அஞ்சல் நான்கின் சார்பாக மாநிலத் தலைவர் தோழர். கண்ணன் , மண்டலச் செயலர் தோழர் முருகேசன், RMS மூன்றின் மாநிலச் செயலர் தோழர். K சங்கரன், மண்டலச் செயலர் தோழர். பாலமுருகன்,  RMS நான்கின் மாநிலச் செயலர் தோழர். K . ராஜேந்திரன் , மண்டலச் செயலர் தோழர் . செல்வராஜ் , GDS சங்கத்தின் மாநிலத் தலைவர் தோழர். ராமராஜ் , மாநிலச் செயலர் தோழர். R .தனராஜ் ஆகியோர் பேச்சு வார்த்தையில் கலந்துகொண்டனர் .

கீழ்க்கண்ட பிரச்சினைகளில் தீர்வு  அளிப்பதாக  உறுதி பெறப்பட்டது :-

1. IRREGULAR FIXING OF UNNATURAL REVENUE TARGETS FOR INDOOR OPERATIVE STAFF.- இதில் நிச்சயம் எந்த ஒரு SPM/PA  வுக்கும் நிர்ப்பந்தம் அளித்திட மண்டல அலுவலகம் உத்திரவு இடவில்லை என்றும், அப்படி எந்த கோட்ட அதிகாரி நடந்திருந்தாலும் அவர்கள் அறிவுறுத்தப் படுவார்கள் என்றும் உறுதி  அளிக்கப்பட்டது .

2. SPEED POST DELIVERY ON SUNDAYS :- இது குறித்து இலாக்கா உத்திரவு எதுவும் தங்களுக்கு இதற்கு முன்னர் அளிக்கப்படவில்லை என்றும் அப்படி அளிக்கப்பட்டால் நிச்சயம் இது குறித்து பரிசீலிக்கப்படும் என்று PMG தெரிவித்தார். நமது தரப்பில், இது குறித்த உத்திரவு நகல் உடன் அனுப்பப்படும் என்றும் அதனையும் மீறி விடுமுறை நாட்களில் பணி செய்திட உத்திரவு இடப்பட்டால் மீண்டும் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்றும் உறுதியாகத் தெரிவிக்கப் பட்டது. 

3.RETURN BACK THE DEPUTATIONISTS FROM R.O.:- RPLI/PLI பகுதிகளில் MIGRATION முடிந்தவுடன் FEBRUARY க்குள் திருப்பி அனுப்பப்படுவார்கள். PSD MMS பகுதிகளில் ROTATION அடிப்படையில் இந்த ஆண்டு சரி செய்யப்படும் . அதே பகுதிகளில் உபரி ஊழியர் இருப்பின் உடன் திருப்பி அனுப்பப் படுவார்கள். 

4. மூடப் பட்ட மேலூர் தெற்கு அஞ்சலகம் திறந்திட உடன் உத்திரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தவறான உத்திரவிட்ட கோட்ட அதிகாரி மீது மேல் நடவடிக்கைக்கு உயர் அதிகாரிக்கு பரிந்துரைக்கப் பட்டுள்ளது. 

5. தபால்காரர்  பீட் கள்  இணைக்கப் படாது . விடுப்புகளில் அவர்களது பதிலி களுக்கு MINIMUM  OF THE WAGES ஏற்கனவே உள்ள AUDIT PARA அடிப்படையில், அரசரடி தலைமை அஞ்சலகத்தில்  அளிப்பதுபோல  எல்லா இடங்களிலும் அளிக்கப் படும்.

6. வருடக் கணக்காக தேங்கியுள்ள மதுரை PSD பிரச்சினைக்கு கீழ்ப் பகுதியில் SHED அமைப்பதற்கான  ESTIMATE பெறப்பட்டுள்ளது. உடன் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் . அதுவரையில்  HEAD LOAD என்பது இல்லாமல் PULLY CONVEYANCE மூலம் முழுமையாக செய்யப் படும் .

6. 2005,  2006, 2007, 2008 ஆண்டுகளில் SKELETON இல் வைக்கப்பட்ட தபால்காரர்,MTS காலியிடங்கள் ஏற்கனவே ஒழிக்கப்பட உத்திரவிடப்பட்டு அமலாக்கப் பட்டது . தற்போது நமது சம்மேளனத்தின் முயற்சியால் டெல்லி உயர் நீதி மன்றத்தில்  பெறப்பட்ட தடை ஆணை அடிப்படையில் 28.05.2013 க்கு பிறகு இடப்பட்ட உத்திரவுகள் நிறுத்தப்பட்டு அந்த பதவிகள் உடன் RESTORE செய்யப்படும் என உறுதி அளிக்கப் பட்டது. அதற்கான GDS ENGAGEMENT மூலம் அந்தப் பணிகள் பார்த்திட பணிக்கப் படும்.

7. மதுரை RMS பகுதியில் தார்ணா மற்றும் ஆர்பாட்டங்களுக்கு வழங்கப் பட்ட நோட்டீஸ்   அமல் படுத்தப்படாது .  5 பேருக்கு வழங்கப் பட்ட DIES NON APPEAL மூலம்  ரத்து செய்திட நடவடிக்கை எடுக்கப் படும்.

8. மதுரை RMS பகுதியில்தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கு   நிறுத்தி வைக்கப் பட்டிருந்த SPECIAL CL அனைத்தும் உடன் வழங்கிட உத்திரவிடப்படும்.

9. மதுரை RMS SSRM அவர்களின் விதி மீறல் உத்திரவுகள் , ஒழுங்கீனமான நடவடிக்கைகள் குறித்து விளக்கம் கேட்கப்படும். அதன்மீது, மேல் நடவடிக்கை எடுக்க மாநில அதிகாரிக்கு பரிந்துரைக்கப் படும்..

10. மதுரை RMS HRO வின் நடவடிக்கைகள் குறித்து  மண்டல அதிகாரிகள் மூலம் விசாரணை செய்ய உத்திரவிடப் படும்.

11. தென் மண்டலத்தில் பணி நிறைவு, பதவி உயர்வு மற்றும் இறப்புகளில் GDS ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் தேங்கிக் கிடக்கும் TERMINAL BENEFITS இனியும் காலதாமதம் இன்றி வழங்கிட உடன் நடவடிக்கை எடுக்கப் படும்.

12. தென் மண்டலத்தில் பல வருடங்களாக  REGULARISE செய்யப் படாமல் இருக்கும் GDS பணி நியமனங்கள்  குறுகிய கால வரம்புக்குள் சரி செய்யப் பட்டு அதற்கான முறையான உத்திரவு வழங்கப் படும்.

13. சிவகங்கை COLLECTORATE அலுவலகப் பிரச்சினை ஏற்கனவே உறுதி அளித்தபடி உடன் தீர்த்திட நடவடிக்கை எடுக்கப் படும்.

14. திண்டுக்கல் எழுத்தர் தோழர். சரவணகுமார்  CONFIRMATION உத்திரவு இடப்பட்டும் இன்னமும் நிறைவேற்றாமல் இருக்கும் அதிகாரியிடம் உடன் விளக்கம் கேட்கப்படும். அவருக்கு எழுத்து மூலம் ஏற்கனவே  உறுதி அளிக்கப் பட்ட  தேதியில் இருந்து CONFIRMATION வழங்கப் படும்.

15. வாடிப் பட்டி தோழர் காளிமுத்து இடமாறுதல் வரும் ஏப்ரல் மாதத்தில் பரிசீலிக்கப் படும்.  

16. இது போல PM GRADE I ஊழியர்களின் இடமாறுதல் கோரிக்கைகளும் வரும் ஏப்ரல் மாதத்தில் பரிசீலிக்கப் படும்.

17. 16.07.2012  இலாக்கா உத்திரவுப்படி 1.1.2006  க்குப் பின் பணி நியமனம் பெற்று முறையாக ஊதிய நிர்ணயம் செய்யப் படாமல் தேங்கிக் கிடக்கும் ஊழியர்களுக்கு அரியர்சுடன் ஊதிய நிர்ணயம் செய்திட உத்திரவு வழங்கப்படும்.

18. பழி வாங்கும் இடமாறுதல் உத்திரவு வழங்கப்பட்ட தூத்துக்குடி தோழியர் துர்காதேவி  பிரச்சினை குறித்து மீண்டும் கோட்ட அலுவலகத்தில் இருந்து அவர் மீது தவறு இருப்பதாக அறிக்கை அனுப்பப் பட்டுள்ளதால் , முதலில் 'மணப்பாடு' அல்லாமல் வேறு அருகாமையில் உள்ள ஊருக்கு மாற்றித் தருவதாக PMG கூறினார்.  நாம் அதில் உண்மை இல்லை என்பதை எடுத்துக் கூறியதால் , அந்த ஊழியரை PMG அவர்களே நேரில் விசாரித்து உண்மையை அறிந்து கொள்வதாக  உறுதி அளித்தார். அதுவரை அவருக்கு இடப்பட்ட மாறுதல் உத்திரவு நிறுத்தி வைக்கப் படும். 

19. மதுரை HPO RMS பகுதியில் ENTRANCE அமைப்பது தொடர்பான பிரச்சினையில் உரிய அதிகாரியை அனுப்பி அதற்கான  வழி முறை ஆராயப் படும் என்றும் அது குறித்து  மதுரை POSTMASTER உடன் கலந்து உரிய ஏற்பாடு  செய்யப்படும் என்றும் உறுதி அளிக்கப் பட்டது.

20. அம்பாசமுத்திரம் பகுதியில் LGO TO PA தேர்வு பெற்று பயிற்சிக்கு அனுப்பப்படாமல் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த மூன்று தோழர்களுக்கு  பணி பயிற்சிக்கு அனுப்பிட உடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப் பட்டது.

21. திருநெல்வேலி பகுதியில் காலியாக உள்ள MMS டிரைவர் பதவிகள் RULE 38 மூலம் நிரப்பப் பட உடன் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது நிலுவையில் உள்ள ஊழியரின் கோரிக்கை பரிசீலிக்கப் படும்.

22. தேனீ கோட்டத்தில் கடந்த தபால்காரர் தேர்வில் தேர்வு பெற்றும்  பணிப் பயிற்சிக்கு அனுப்பப் படாத தோழர். ரங்கப்பன் பிரச்சினை குறித்து அறிக்கை பெற்று முடிவு எடுக்கப் படும்.

அன்புத் தோழர்களே !

இது தவிர இன்னும் பல பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன. இறுதியில் அனைத்து சங்கங்களின் மாநிலச் செயலர்கள் மற்றும் மண்டலச் செயலர்கள்  கூடி இந்தப் பேச்சு வார்த்தையின் முன்னேற்றம் குறித்து விவாதிக்கப் பட்டது . பெரும்பான்மை நிர்வாகிகளின் முடிவின்படி  இந்த பேச்சு வார்த்தைக்கான MINUTES நகல் மண்டல அலுவலகத்தில் இருந்து பெற்றவுடன்,  அதனைப் பார்த்தபின்,   அதன் மீது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுப்பது என இறுதியாக அறிவிக்கப் பட்டது.

போராடாமல் பெற்றதில்லை ! போராடி நாம் தோற்றதில்லை ! 

தொழிற் சங்க வரலாற்றில் 
இறுதிப் போராட்டம் என்று எதுவுமே இல்லை !

போராடுவோம் ! வெற்றி பெறுவோம் ! 
இதுவே  தொழிற்சங்கத்தின்  ஆரம்ப பாடம் ! 

தோழமை வாழ்த்துக்களுடன் 
ஜெ. இராமமூர்த்தி, 
கன்வீனர் , அஞ்சல் RMS இணைப்புக் குழு 
தமிழ் மாநிலம் .

=====================================================
ஊதியக்குழு தொடர்பான 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி  தமிழக JCA முடிவின்படியும் , மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன முடிவின் படியும் , நமது சம்மேளன  மற்றும் நமது அகில இந்திய சங்கத்தின் முடிவின் படியும்  எதிர்வரும் பிப்ரவரி 12 மற்றும்  13 தேதிகளில்  நடைபெற உள்ள 48 மணி நேர வேலை நிறுத்தத்தை நாம் ஒவ்வொருவரும்  களம் இறங்கி வெற்றிகரமாக்குவோம் !
நிச்சயம் நாம் கோரிக்கைகளை வெல்வோம் !
இன்றில்லையேல்  தேர்தல் அறிவிக்கப் பட்டபின் 
என்றுமே இல்லை என்பதை நினைவில் கொள்க !

போராடுவோம் ! வெற்றிபெறுவோம் !
இறுதி வெற்றி நமதே !
======================================================

TN JCA DECISIONS ON 12-13 FEB. 2014 - 48 HOURS STRIKE ANNOUNCED BY NFPE AND FNPO


ஊதியக் குழு தொடர்பான 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 
 48 மணி நேர வேலை நிறுத்தம் !

அன்பான  NFPE  சம்மேளனத்தின் அனைத்து உறுப்புச் சங்கங்களின்  தமிழ் மாநிலச் சங்க நிர்வாகிகளே, கோட்ட/ கிளைச் செயலர்களே ! உங்கள் அனைவருக்கும் தமிழக அஞ்சல் - RMS  இணைப்புக் குழுவின் சார்பாக போராட்ட வணக்கங்கள் !

NFPE   மற்றும் FNPO சம்மேளனங்களால் அறிவிக்கப்பட்டுள்ள  பிப்ரவரி  12-13, 2014 தேதிகளில் நடைபெறவிருக்கும் 48 மணி நேர வேலை நிறுத்தம் சிறப்பாக  தமிழகத்தில் நடத்துவது குறித்து முடிவுகள் எடுத்திட , நேற்று (17.01.2014) மாலை சுமார் 06.00 மணியளவில் , தமிழகத்தின் NFPE  மற்றும் FNPO  சம்மேளனங்களின்  அனைத்து மாநிலச் செயலர்கள் அடங்கிய  JCA   வின் கூட்டம்  சென்னை அண்ணா சாலை தலைமை அஞ்சலக வளாகத்தில் நடைபெற்றது . 

கூட்டத்திற்கு தமிழக NFPE   மற்றும் FNPO சம்மேளனத்தின் அஞ்சல் - RMS இணைப்புக் குழுவின் கன்வீனர்களான  தோழர். J .  இராமமூர்த்தி  மற்றும் தோழர். G .P.முத்துக்கிருஷ்ணன்ஆகிய இருவரும் கூட்டாக  தலைமை யேற்று நடத்தினர். 

அனைத்து  மாநிலச் செயலர்களும் விவாதத்தில் கலந்துகொண்டு தங்களை கருத்துக்களை எடுத்துரைத்தனர் . கூட்டத்தில் இறுதியாக கீழ்க் கண்ட முடிவுகள்  ஏகமனதாக எடுக்கப்பட்டன. 

1.   எதிர்வரும் 25.01.2014 சனிக்கிழமை மாலை,  சென்னை பெருநகர மண்டலம் நீங்கலாக , இதர மண்டலங்களான  திருச்சி, மதுரை, கோவை ஆகிய மண்டலத் தலைமையகங்களில்,  மண்டல அளவிலான வேலை நிறுத்த விளக்கக் கூட்டங்கள் நடத்துவது  என்றும்,

   அந்தந்த மண்டலங்களின்  மாநிலச் சங்க நிர்வாகிகள் மற்றும்  மண்டலத் தலைமையகத்தில் உள்ள கோட்டங்களின் செயலாளர்கள் JCA வாக இணைந்து ,   இந்த வேலை நிறுத்த ஆயத்தக்  கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்திட வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது . இதில் கலந்துகொள்ளும்  மாநிலச் செயலர்கள்  விபரம்  வருமாறு :-

திருச்சி மண்டலம் 

தோழர்கள் 
J .  இராமமூர்த்தி , மாநிலச் செயலர் P 3, NFPE 
P . குமார், மாநிலச் செயலர், R 3, FNPO 
K . ராஜேந்திரன், மாநிலச் செயலர் ,R 4,  NFPE
R . தனராஜ், மாநிலச் செயலர், GDS , NFPE 
P . கோதண்டராமன், GDS , FNPO 

மதுரை மண்டலம் 

தோழர்கள் 
G .P . முத்துகிருஷ்ணன், மாநிலச் செயலர், P 3, FNPO 
K . சங்கரன், மாநிலச் செயலர், R 3, NFPE 
S . அப்பன்ராஜ் , மாநிலச் செயலர், NFPE , SBCO 

கோவை மண்டலம் 

தோழர்கள் 
கோபு  கோவிந்தராஜன் , மாநிலச் செயலர், P 4, NFPE 
K . குணசேகர் , மாநிலச் செயலர் , P 4, FNPO 
A . ரகுபதி உமாசங்கர் , மாநிலச் செயலர் , ADMIN , NFPE 

2.      எதிர்வரும்  28.01.2014  செவ்வாயன்று சென்னை பெரு நகர்ப்பகுதியில் உள்ள கோட்ட/ கிளைகளின்  தோழர்களை ஒருங்கிணைத்து CPMG  அலுவலக  வளாகத்தில்  மதியம் 12.00 மணியளவில்  கோரிக்கைகளை வலியுறுத்தி JCA  சார்பாக உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டும் எனவும், 

      வேலை நிறுத்தத்திற்கான சம்மேளனங்கள்  21.01.14 அன்று அளிக்கும் நோட்டீஸ்  நகலை  CPMG  அவர்களுக்கு அனைத்து மாநிலச் செயலர்களும் கையெழுத்திட்டு அளிப்பது  எனவும் ,

        எதிர்வரும் 28.01.2014 அன்று அதே நேரத்திலோ அல்லது மாலை நேரத்திலோ சென்னை பெருநகர் நீங்கலாக ,  சென்னை பெருநகர மண்டலத்தில் உள்ள இதர கோட்ட/ கிளைகள் மற்றும்  தமிழகத்தின் அனைத்து கோட்ட/ கிளைகளிலும்  கோரிக்கை ஆர்ப்பாட்டம்  நடத்திட வேண்டும் என்றும், 21.01.2014 இல் அளிக்கப்படும் சம்மேளன  வேலை நிறுத்த நோட்டீஸ் நகலை நிர்வாகத்திற்கு  அந்தந்த கோட்டங்களில் அளிப்பது  என்றும் தீர்மானிக்கப் பட்டது .

3.      சென்னை பெருநகர மண்டலத்தின்  வேலை நிறுத்த விளக்கக் கூட்டம் எதிர்வரும் 10.02.2014 திங்கள் அன்று மாலை 06.00 மணியளவில் JCA சார்பாக CPMG  அலுவலக வளாகத்தில் உள்ள MEETING HALL  அல்லது அண்ணா சாலை தலைமை அஞ்சலக வளாகத்தில்  நடத்துவது என்றும் இதில் அனைத்து மாநிலச் செயலர்களும்  கலந்துகொள்வது என்றும் முடிவு எடுக்கப் பட்டது .

4.    தமிழகத்தின் அனைத்து கோட்ட/ கிளைகளிலும் அந்தந்த பகுதியில் உள்ள JCA வின் மாநிலச் சங்க/ அகில இந்திய சங்க/ சம்மேளன நிர்வாகிகளை அழைத்து சிறப்புக் கூட்டங்கள் நடத்திட வேண்டும் என்றும் , கோரிக்கைகளை விளக்கியும் , இதற்கான நோட்டீஸ் உம் அந்தந்த கிளைகளில் இருந்து தனித்தனியே  அனைத்து ஊழியர்களுக்கும் அளித்திட வேண்டும் என்றும்  தீர்மானிக்கப் பட்டது. இதன் நகல் மாநிலச் சங்கங்களுக்கு  அனுப்பப் படவேண்டும்  என்றும் கோரப் பட்டது.

5.   கோரிக்கைகள்  மற்றும் சிறப்புக் கூட்டங்கள் குறித்து  தமிழக JCA  சார்பில்   சுவரொட்டிகள்  மற்றும்  நோட்டீஸ்  வெளியிடுவது  என்றும் தீர்மானிக்கப்பட்டது .  வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்தி கோரிக்கைகளை வென்றிட  அனைத்து ஊழியர்களின் ஒத்துழைப்பும் கோரப்பட்டது .

இந்த செய்திகளைத் தாங்கி  நோட்டீஸ்  கிடைப்பதில் தாமதம் ஏற்படின்  அதற்காக  உங்கள்  வேலைகளை  ஒத்தி வைத்திட வேண்டாம் என்றும் , இந்த வலைத்தள செய்தியை பார்த்த உடனே  இதற்கான ஏற்பாடுகளை உடன் செய்திட வேண்டும் எனவும்   தமிழக JCA  சார்பில் கோருகிறோம். இந்த செய்தியை பார்த்த  நிர்வாகிகள்  பார்க்காத  இதர நிர்வாகிகளுக்கு உடன்  தெரிவித்து செயலாற்றிட வேண்டும் என்றும்  வேண்டுகோள் அளிக்கிறோம்.

போராட்ட வாழ்த்துக்களுடன் 
J .  இராமமூர்த்தி , கன்வீனர் ,
அஞ்சல்  - RMS  -MMS- GDS  இணைப்புக் குழு , 
தமிழ் மாநிலம் .
=========================================
குறிப்பு :-

பிப்ரவரி 12-13, 2014  -   48 மணி நேரவேலை நிறுத்தம் அனைத்து மத்திய அரசு ஊழியர் பகுதிகளிலும்  அறிவிக்கப்பட்டு  நடைபெற உள்ளது என்பதை ஏற்கனவே இந்த வலைத்தளத்தின் மூலம் தொடர்ந்து  உங்களுக்குத் தெரிவித்து வருகிறோம். மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் சார்பில் தமிழகத்தில்  பல இடங்களில் வேலை நிறுத்த  பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற அறிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்த செய்தி தமிழக மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளன அறிக்கை வாயிலாக உங்களுக்கு கிடைக்கும்.

ஏற்கனவே நாம் அறிவித்தபடி நடைபெற இருந்த கூட்டம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது . கீழே காண்க :-

எதிர்வரும் 03.02.2014 அன்று மாலை சுமார் 06.00 மணியளவில்     
 தமிழக  மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம்   சார்பாக  
சென்னை எழும்பூர் SRMU  அலுவலகக் கட்டிடமான நக்கீரன் அரங்கத்தில் 
வேலை நிறுத்த  விளக்கக் கூட்டம்  நடைபெற உள்ளது . 

இதில்  மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் மா பொதுச் செயலரும் நமது  பொதுச் செயலருமான  
தோழர். M . கிருஷ்ணன் அவர்கள் 
கலந்துகொண்டு வேலை நிறுத்த உரை ஆற்றிட உள்ளார்கள் என்பதையும்  முன் கூட்டியே உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம் .

 சென்னை  நகர்ப் பகுதியில் உள்ள அனைத்து கோட்ட/ கிளைகளில் இருந்தும்  பெருவாரியான தோழர்கள்  இந்தக் கூட்டத்தின்  தவறாமல் கலந்து கொண்டிட வேண்டுகிறோம் !

தோழமையுடன்
J . இராமமூர்த்தி 
மாநிலத் தலைவர் 
மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் 
தமிழ்நாடு .
======================================

LATEST POSITION ON GDS COURT CASE FILED BY NFPE & AIPEU GDS NFPE

STRIKE NOTICE SERVED TO THE SECRETARY DEPARTMENT OF POSTS TODAY ON 21.01.2014




Tuesday, 31 December 2013

Department of Posts issued orders to keep in abeyance the orders on abolition of posts for the years 2005, 2006, 2007 & 2008.

ஒரு புத்தாண்டு  மற்றும் 

பொங்கல் பரிசு !



2005 - 2008 க்கான  நேரடி  நியமன பதவிகளில் SKELETON  இல் வைத்திருந்த  பதவிகளை ஒழித்திட மத்திய அரசும் நம் இலாக்காவும் உத்திரவிட்ட  செய்தி நாம் அனைவரும் அறிந்ததே !

இது குறித்து  அஞ்சல் நான்கின் பதவிகள் ஒழிப்பை எதிர்த்து பாண்டிச்சேரி , தாம்பரம் , சிவகங்கை போன்ற கோட்டங்களில் செயலர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க நம் தமிழக அஞ்சல் மூன்று உதவியதன் அடிப்படையில் தமிழகத்தில் தடையுத்தரவினை நாம் பெற்றதும் நாம் ஏற்கனவே  இந்த வலைத்தளத்தில் அறிவித்திருந்தோம். 

தற்போது ஏற்கனவே நமது மத்திய சங்கங்களான அஞ்சல் நான்கு  மற்றும் NFPE  GDS  சங்கங்கள்  PRINCIPAL  BENCH  CAT புது டெல்லியில் தொடர்ந்த வழக்கில் நிரந்தர தடையுத்தரவு கிடைக்கப் பெற்றதன் அடிப்படையில் 

 நமது இலாக்கா முதல்வர் அவர்கள்  28.5.2013 க்குப் பிறகு இந்தியா முழுமைக்கும் GROUP B, GROUP C,  GROUP D  ஒழிக்கப் பட உத்திரவிடப்பட்ட   அனைத்து உத்திரவுகளையும்  வழக்கு முடியும் வரை  நிறுத்தி வைத்து இலாக்கா ஆணை அளித்துள்ளார் 

என்பதை  மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். 

அந்த உத்திரவின் நகலை உங்கள் பார்வைக்கு கீழே அளித்துள்ளோம்.

எனவே  அந்தந்த அஞ்சல் மூன்று , அஞ்சல் நான்கு  கோட்டச் செயலர்கள்  இந்த உத்தரவின் நகலை எடுத்து  அந்தந்த  கோட்ட கண்காணிப்பாளர்களுக்கு  உடன் கடிதம் அளித்து , ஒழிக்கப் பட்ட பதவிகளை  RESTORE  செய்திட கோரவும். 

இந்த வெற்றி  நமது வெற்றி !  NFPE  பேரியக்கத்தின் வெற்றி !  NFPE  GDS  சங்கத்தின் வெற்றி !

Monday, 30 December 2013

WISH YOU ALL A HAPPY NEW YEAR


JCA HUNGER FAST AT NEW DELHI FOR CASUAL, PART TIME, CONTINGENT EMP. DEMANDS

NFPE & GDS (NFPE) DID IT -- FINAL LEGAL BATTLE HAS BEGUN

NFPE & AIPEU-GDS(NFPE) JOINTLY FILED WRIT PETITION IN SUPREME COURT OF INDIA PRAYING :

(1) a direction be issued to the respondent to treat the Gramin Dak Sevaks as Civil Servants for all purposes at par with the other regular members of the civil services and regular employees in relation to all service matters including the pension and all retiral benefits, and

(2) the Department of Posts, Gramin Dak Sevaks (Conduct and Engagement) Rules, 2011 be declared invalid and unconstitutional.

THE SUPREME COURT OF INDIA TRANSFERED THE WP TO DELHI HIGH COURT FOR CONSIDERATION

FIRST MILESTONE ON LEGAL FIGHT FOR GDS DEPARTMENTALIZATION

THIS IS A TURNING POINT IN THE HISTORY OF GDS


NFPE & GDS (NFPE) DID IT -- FINAL LEGAL BATTLE HAS BEGUN

Tuesday, 29 October 2013

MARCH TO PARLIAMENT BY CENTRAL GOVT EMPLOYEES AND BY GRAMIN DAK SEVAKS - 2 DAYS PROGRAMME

அன்பார்ந்த அஞ்சல் மூன்று , அஞ்சல் நான்கு, RMS  மூன்று , RMS  நான்கு , GDS   மாநிலச் சங்க நிர்வாகிகளே ! SUPREME  COUNCILLOR  களே ! கோட்ட/ கிளைச் செயலர்களே !  மகிளா  கமிட்டி நிர்வாகிகளே !  வணக்கம் !

எதிர்வரும் டிசம்பர் திங்கள் 11 ஆம் தேதியில் GDS  ஊழியர் கோரிக்கைகளுக்காக  பாராளுமன்றம் நோக்கிய பேரணி ஏற்கனவே அறிவிக்கப் பட்டு  அதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன ..

உங்களிடம் ஏற்கனவே  இதற்கான ரயில் முன்பதிவு செய்திட நமது மாநிலச் சங்கத்தின் சார்பாக வேண்டினோம் என்பது  நினைவிருக்கும். ஆனால் இன்னமும் ஒருவரிடமிருந்தும்  பதில் வரவே இல்லை .

தற்போது மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் மற்றும் நமது NFPE  சம்மேளனத்தின் மூலம் மத்திய அரசு ஊழியர்களின்  ஊதியக் குழு , 50% பஞ்சப்படி  உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளுக்காக  எதிர்வரும்  டிசம்பர் திங்கள் 12 ஆம்  தேதி (GDS  பேரணியைத் தொடர்ந்து )  நடத்திட  தாக்கீது வந்துள்ளது !

எனவே  உடன் உங்கள் பகுதியில் உள்ள அஞ்சல் நான்கு, RMS  3, RMS  4, GDS  உள்ளிட்ட  NFPE  இன் அனைத்து உறுப்பு சங்கங்களுக்கும் இந்த செய்தியை  தெரிவித்து , அதன் மீது  ஒரு கோட்டம் அல்லது கிளைக்கு  தலா 10 பேருக்கு குறையாமல்  டெல்லி தலைநகரில் நடைபெற உள்ள பாராளுமன்றம் நோக்கிய  பேரணிக்கு   ஊழியர்களைத் திரட்டி  உடன்  ரயில் முன்பதிவு  செய்திட  மாநிலச் சங்கம் ,  அஞ்சல் RMS  தமிழ் மாநில இணைப்புக் குழு  மற்றும் மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் தமிழ் மாநிலக் குழு  உங்களை  வேண்டிக் கேட்டுக் கொள்கிறது . 

அலட்சியமாக  இருக்க வேண்டாம் என்றும்  நினைவுறுத்துகிறோம்.  மாநிலச் சங்கம் நிர்வாகிகள் உடன் தங்கள் பகுதியில் உள்ள கோட்ட/ கிளைச் செயலர்களைத் தொடர்பு கொண்டு  பயணத்திற்கான ஏற்பாடுகளை  செய்திட வேண்டுகிறோம்.  தங்கள் பகுதியில் இருந்து சங்க வாரியாக எத்தனை பேர் ரயில் முன்பதிவு செய்துள்ளனர் என்ற விபரத்தினை உடன் மாநிலச் செயலருக்கு தெரிவிக்கவும்.  உடன் பதிலை எதிர் பார்க்கிறோம்.

இதுவரை பதிவு செய்யாதவர்கள் உடன் பதிவு செய்திடவும் அதன் விபரங்களை மாநிலச் செயலருக்கு தெரிவித்திடவும் வேண்டுகிறோம்.

தோழமையுடன் 
J . ராமமூர்த்தி , மாநிலச் செயலர் , அஞ்சல் மூன்று தமிழ் மாநிலம்.
கன்வீனர் , அஞ்சல் - RMS  இணைப்புக் குழு ,  NFPE , தமிழ் மாநிலம் .
தலைவர், மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் , தமிழ் மாநிலம்  .

மற்றும் 
R . தனராஜ் , மாநிலச் செயலர், AIPEU  GDS  NFPE ,
அமைப்புச் செயலர் , மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம், 
தமிழ் மாநிலம் .


AN IMPORTANT NEWS TO OUR GDS COMRADES UNDER CCR REGION

ஒரு முக்கிய செய்தி !

சென்னை பெருநகர மண்டலத்தில் POSTMAN  UNFILLED  VACANCIES கிட்டத்தட்ட 200 காலியிடங்கள்  உள்ளதாகவும்  

இந்த காலி இடங்களுக்கு CCR  இல் உள்ள   MOFUSSIL  கோட்டங்களில் ஏற்கனவே கடந்த ஏப்ரல் மாதத்தில் தேர்வு எழுதியவர்களில்   SURPLUS  QUALIFIED  ஆக உள்ள  GDS  ஊழியர்களிடமிருந்து   3 OPTION கேட்கப் பட்டு  அந்த விண்ணப்பங்கள்  PMG,  CCR  தலைமையிலான  கமிட்டி முன்பாக பரிசீலனைக்கு வைக்கப் பட்டு  பின்னர் அவர்களுக்கு  பதவி உயர்வு பட்டியல் வெளியிடப்படும் . 

இது எதிர்வரும் நவம்பர் மாத இறுதிக்குள் முடிக்கப் படும்  என்று  நிர்வாகம் தெரிவிக்கிறது .

CIRCLE UNION CIRCULAR NO. 11 RELEASED



Wednesday, 9 October 2013

SUBMISSION OF MEMORANDUM TO RAJYA SABHA PETITION COMMITTEE THRO' Sh. N. BALAGANGA , M.P. RAJYA SABHA ON GDS ISSUES

ராஜ்ய சபா  முறையீட்டுக் குழுவுக்கு  GDS ஊழியர் பிரச்சினை குறித்து பரிசீலிக்க  கோரிக்கை மனு . 

இந்த மனு மீது RAJYA SABHA PETITION COMMITTEE பரிசீலனை மற்றும் உரிய விசாரணை செய்து அதன் பரிந்துரைகளை  பிரதம அமைச்சருக்கு அளித்திட அதிகாரம் உள்ளது என்பதையும் அதன் மீது பிரதம அமைச்சர் அமைச்சரவைக் குழுவுக்கு  முடிவுகளை தெரிவிக்க வேண்டியது அரசியல் சாசன விதி ஆகும் என்பதையும் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.

 09.10.2013  அன்று காலை சுமார் 12.00  மணியளவில் தமிழ் மாநில அஞ்சல் மூன்று சங்கத்தின் சார்பில் அதன் மாநிலச் செயலர் தோழர். J.R. அவர்களும்  மாநிலச் சங்கத்தின் நிதிச் செயலரும் , அகில இந்திய சங்கத்தின் உதவிச் செயலருமான தோழர். A. வீரமணி அவர்களும் மற்றும் தமிழ் மாநில AIPEU GDS NFPE சங்கத்தின் மாநிலச் செயலரும், அதன் அகில இந்திய துணைப் பொதுச் செயலருமான தோழர். R. தனராஜ் அவர்களும் 

 அகில இந்திய  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநிலங்கள் அவை  உறுப்பினரும் , அதன் மாநிலங்களவை கொறடாவும், அஞ்சல் வாரிய ஆலோசனைக்குழு உறுப்பினரும், அதன்  வட சென்னை (தெற்கு ) மாவட்டச் செயலருமான  

திருமிகு . நா. பாலகங்கா  

அவர்களை அவரது  எழும்பூர் இல்லத்தில்  GDS ஊழியர்களின்  பிரச்சினைகள் குறித்தும் , அவர்களை இலாக்கா ஊழியர்கள் ஆக்கிட உள்ள வழிமுறைகள் குறித்தும் அதன் சட்ட ரீதியான விபரங்கள் குறித்தும்  , ஏழாவது ஊதியக் குழுவே அவர்களது ஊதிய  மற்றும் பணித்தன்மைகளை பரிசீலித்திட வேண்டியும்  இந்திய நாட்டின் மாநிலங்களவை தலைவரிடம் அளிப்பதற்கான -  PETITION COMMITTEE க்கான - (RAJYA SABHA PETITION COMMITTEE) மனுவினை அளித்தார்கள் . அப்போது எடுக்கப் பட்ட புகைப்படத்தின்  நகலையும் , அந்த மனுவுக்கான  COVERING LETTER ஐயும் கீழே பார்க்கவும்.

மனுவின் நகல் அதிக பக்கங்கள் கொண்டதால் தனியே பிரசுரிக்கப் படும்.

புகைப் படம் இடமிருந்து வலமாக  :- 

திருமிகு. நா. பாலகங்கா, தோழர். J.R., தோழர். A. வீரமணி,  
தோழர். R. தனராஜ் .


Thursday, 3 October 2013

STAY ORDERS OBTAINED AGAINST REVERSION OF POSTMAN EXAM PASSED OFFICIAL DUE TO ANSWER KEY PROBLEM



STATE CONVENTION ON INDEFINITE STRIKE AND STATE CONFERENCE OF THE CONFEDERATION

அன்பார்ந்த கோட்ட/ கிளைச் செயலர்களே ! வணக்கம் !

ஏற்கனவே அஞ்சல் RMS தமிழ் மாநில இணைப்புக் குழு சுற்றறிக்கை எண் 1 இல் அறிவித்த படி  

7 ஆவது ஊதியக்குழு 01.01.2011 முதல் அமைத்தல்,  50% பஞ்சப் படியை அடிப்படை ஊதியத்துடன் 01.01.2011  முதல் இணைத்தல், GDS ஊழியர்களுக்கும் ஏழாவது ஊதியக் குழுவே அவர்களது ஊதிய / பணி உள்ளிட்ட அனைத்தையும் பரிசீலித்தல்,  புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்தல்  உள்ளிட்ட  15 அம்சக் கோரிக்கைகளுக்கான  வேலை நிறுத்தத்திற்கான தயாரிப்பு மாநாடு  தமிழக மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் சார்பில் எதிர் வரும் 05.10.2013 சனிக் கிழமை சென்னை , தி. நகர்  ஜெர்மன் அரங்கில் காலை சரியாக  10.00  மணிக்கு துவங்கி மதியம் 01.00 மணிக்கு முடிவடையும். 

அது போல  தமிழ் மாநில மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின்  மாநாடு மதியம் உணவு இடைவேளைக்குப் பின்னர்  சரியாக 02.00  மணிக்கு துவங்கி மாலை 05.00  மணிக்கு முடிவடையும். 

இது குறித்த  சுற்றறிக்கையின் நகலை கீழே அளித்துள்ளோம். இந்த சுற்றறிக்கையும்  அதற்கான  போஸ்டரும் ஏற்கனவே தமிழகத்தின் அனைத்து அஞ்சல் மூன்று , அஞ்சல் நான்கு, RMS மூன்று , RMS நான்கு , GDS , நிர்வாகப் பிரிவு, SBCO, ACCOUNTS உள்ளிட்ட பகுதிகளுக்கும்  அதன் மாநிலச் செயலர்கள் மூலம் அனுப்பப் பட்டுள்ளது.

எனவே இந்த வலைத்தளத்தை பார்க்கும் அனைத்து நிர்வாகிகளும் தவறாது நம்முடைய தோழர்கள் அனைவருக்கும் இதனை தெரிவிக்க வேண்டுகிறோம்.

கண்டிப்பாக அனைத்து கோட்ட/ கிளைச் செயலர்களும் , கிளைக்கு தலா 5 நிர்வாகிகளுக்கு குறையாமல் விடுப்பெடுத்து இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

அது போல  அஞ்சல் மூன்று , அஞ்சல் நான்கு, RMS மூன்று, RMS நான்கு , GDS NFPE, SBCO, ACCOUNTS மற்றும் ADMIN மாநிலச் சங்க நிர்வாகிகள் அனைவரும் தவறுதல் இன்றி இந்த மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும். 

நமது NFPE சம்மேளனத்தின் மா பொதுச் செயலரே   மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின்  மா பொதுச் செயலருமாக இருப்பதாலும் , அஞ்சல் மூன்றின் பொதுச் செயலராக இருப்பதாலும்,  தோழர். கிருஷ்ணன் அவர்களே கலந்து கொண்டு இதனை நடத்துவதாலும்  

பத்தாண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில்  நடைபெறும் மகா சம்மேளனத்தின் மா நாடு என்பதாலும்,  

நமது முது பெரும் தலைவர்  தற்போதைய மகா சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் A.G.P. என்றழைக்கப் படும் தோழர் A.G. பசுபதி அவர்கள் இந்த மாநாட்டில் கௌரவிக்கப் பட உள்ளதாலும்  

நிச்சயம் ஒவ்வொரு  நிர்வாகியின் பங்களிப்பும் இதில் கட்டாயம் இருந்திட வேண்டும் என்று வேண்டுகிறோம். அனைத்து அஞ்சல் நான்கு  மற்றும் GDS நிர்வாகிகளிடம் கட்டாயம் இதனை தெரிவித்திடல் நம் அஞ்சல் மூன்று சங்க நிர்வாகிகளின் கடமை ஆகும்.

இந்த மாநாட்டில் அஞ்சல் இயக்கத்தை சேர்ந்த  மேலும் பல்வேறு முது பெரும் தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளார்கள் .  ஆகவே உங்கள் அனைவரையும்  தமிழ் மாநில அஞ்சல் RMS இணைப்புக் குழு சார்பாக மாநிலச் செயலர்கள் அனைவரும்  இரு கரம் நீட்டி வருக வருக என வரவேற்கிறோம்.

உங்கள் வரவை தவறுதல் இன்று எதிர்பார்க்கிறோம்.

வேலை நிறுத்த கருத்தரங்கில் ஒன்று கூடுவீர் !
மாநில மாநாட்டை சிறக்கச் செய்வீர் ! 
போராட்ட வாழ்த்துக்களுடன்

K. ராஜேந்திரன்                                           J. ராமமுர்த்தி
தலைவர்  (RMS நான்கு )                     கன்வீனர் (அஞ்சல் மூன்று)
மாநிலச் செயலர்கள்
V. ராஜேந்திரன், அஞ்சல் நான்கு               K. சங்கரன் ( RMS மூன்று )
A. இரகுபதி உமாசங்கர்  (ADMIN)                       B. சங்கர் ( ACCOUNTS)
S. அப்பன்ராஜ் (SBCO)                         R. தனராஜ் ( AIPEU GDS NFPE)

அஞ்சல்  RMS இணைப்புக் குழு ,  தமிழ் மாநிலம் .