அன்புத் தோழர்களே! தோழியர்களே !!
17.12.2015 அன்று DG POST அலுவகத்திலிருந்து வெளியிடப்பட்ட ஆணை. எந்த கிளை அஞ்சல் அலுவலகத்திலும் கிளை அஞ்சல் அதிகாரி வேலையுடன் தபால் பட்டுவாடா , தபால் பை எடுத்து வரும் வேலைகள் இணைக்கப்படக் கூடாது. அப்படி இணைக்கப் பட்ட பணிகளை நிரப்பிட மற்ற இடங்களில் உபரியாக உள்ள நபர்களை பயன்படுத்திக் கொண்டிட வேண்டும். வெகு நாட்களாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள பணிகளை மாநில அலுவகத்தில் அனுமதி பெற்று நிரப்பிட வேண்டும். தனது மாநிலத்திற்குள் நிரப்பிக்கொள்ள முடியவில்லை எனில் தேவைப்படுமானால் மற்ற மாநிலத்தில் இருந்து நிரப்பிக்கொள்ளலாம்.
No comments:
Post a Comment