Wednesday, 3 February 2016


சம்மேளன பொதுச்செயலாளர் தோழர் R.N பராசர் , GDS  பொதுச்செயலாளர் தோழர் P. பாண்டுரங்கராவ் இருவரும் அனைத்து அகில இந்திய நிர்வாகிகள் மாநில  செயலாளர்கள், கோட்ட, கிளை செயலாளர்களுக்கும் வரும் உறுப்பினர் சேர்ப்பின் போது அகில இந்திய அளவில் நமது GDS (NFPE ) சங்கம் முதன்மை சங்கமாக வருவதற்கு முயற்சி மேற்கொள்ளுமாறு  வேண்டுகோள் விடுத்துள்ளனர் .

நிச்சயமாக நமது தமிழ் மாநில இணைப்புக்குழு ( COC) 100 சதம் வெற்றி காணும் என்பதில் உறுதிகொள்வோம்
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEit88q0i83h-BYjqtl-_aqsY37LpaldKLmT3EWV3DNg89wlxFxitzplWC-6O4pjcYh02Ku4gvddU6VGpdh02VPxwJnPBMUs7IynChoYVsK8UFp-rjHzm9TIyu_BZj3MSq7Pj88Csy-tAAQ/s640/scan0001.jpg


GDS ஆள் எடுப்பது தொடர்புடைய ஆணைகள் 

 GDS - Recruitment related Orders ...

Dear Comrades,

It is reported that there are many number of GDS posts are lying vacant in almost all Circles. Our Unions are trying their best to brought the issue to the notice of the competent authorities for several times.


It is informed that the process of filling up of vacant GDS posts in the Divisions started in some Circles. For the information of the concerned the related/relevant orders on the GDS recruitment issued by the Directorate is published here under for ready reference.































தேவைப்படும் மெயில்மேன் பணிகள் 01.04.2015 க்கு பிறகு GDS பணி வரம்புக்குள் ஆள் எடுத்துக்கொள்ளலாம் 



இதுதாங்க GDS வேலைசெய்யக் கூடிய சாதனம் 

தற்போது பீகார் , உத்திரபிரதேசம் , ராஜஸ்தான் மாநிலங்களுக்கு வந்தாச்சி. விரைவில் எதிர்பாருங்கள் !!!!

As a pilot phase, Department of Post has started using solar powered, biometric hand-held devices in rural post office with connectivity along with the application software in selected circles viz. Bihar, UP and Rajasthan. This move was the outcome of Rural ICT project declared by the Government of India.

1.  Electronic transactions- Booking and delivery of Speed Post, registered mail, money orders, sale of stamps and postal stationery will be done through these devices and paper receipt shall be generated

2.  Instantaneously thereby eliminating chances of overcharging and other problems associated with manual transactions. Savings Bank deposits & withdrawals, PLI/RPLI premium deposits and loan/claim payments will also be done electronically on these devices.

3.  Immediate uploading of transaction data and financial reconciliation- Using mobile connectivity, data pertaining to all transactions done on the hand-held devices shall be uploaded onto the central server. E-Money order will reach the destination post office instantaneously unlike present day where the money order is digitized at the nearest computerized Post Office and leads to delay in delivery. All financial transactions shall also be reconciled immediately without any manual intervention and Cash on Delivery amount collected in the village shall be immediately credited to the account of e-Commerce Company. Similarly the artisans would be able to fulfill e-commerce orders and receive immediate payment for their sold products online. This will have a positive impact on the overall economy of the villages.

4. Automatic track and trace- Speed Post and Registered letters/parcels and money remittances will be trackable at the Branch Post Office level and booking/delivery information will also be uploaded to central server immediately.

5. Fraud and leakage elimination- As Savings Bank and Postal Life Insurance transactions will be done on a real-time basis and through immediate generation of receipt and voice message, chances of fraud would be eliminated. Biometric authentication of MNREGS and social security beneficiaries at the time of pay-out would also reduce leakage in the schemes.



6. Post Offices as Common Service Centres- Branch Post Offices shall be able to work as Common Service Centres and offer services such as Railway Reservation, online bill payment for electricity and water utilities, mobile and DTH recharge, insurance policy premium payments & transactions for partner banks/insurance companies/mutual funds etc.

TN JCA ( NFPE & FNPO ) ON AGITATIONAL PATH - CIRLE WIDE THREE PHASED AGITATION DECIDED IN JCA MEETING HELD ON 2.2.2016 AT PARK TOWN HPO 



போராட்டப் பாதையில் தமிழக  JCA !

2.2.2016 - NFPE /FNPO-JCA  கூட்டத்தின்  முடிவுகள் !


அன்புத் தோழர்களுக்கு  வணக்கம்.  கடந்த 27.1.2016 அன்று  PMG, CCR அவர்களுடன்  தமிழக அஞ்சல்  JCA  சார்பில் நடத்திய  பேச்சு வார்த்தை குறித்தும்  அதன் வெளிப்பாடாக  அளிக்கப்பட்ட வாக்குறுதியும் உங்களுக்கு  தெரிவித்திருந்தோம். மேலும்  அதன் மறுநாள்  DPS CCR அவர்களும்  பிரச்சினை  தீர்க்கப்பட  உத்திரவு  அளிக்கப்பட உள்ளது என்று  தெரிவித்திருந்தார்.  ஆனால் ,  அளிக்கப்பட்ட உறுதி மொழி களுக்கு மாறாக,  தபால்காரர்  பணிகளுக்கு  பதிலி  அளிக்க அனுமதிக் காமல்  மேலும் பணிகளை   நெருக்குவதற்கான   உத்திரவு  வெளியிடப் பட்டது.  


பணியிழந்த  27 CASUAL  ஊழியர்களையும்  குறைந்தபட்ச தினக் கூலி அடிப்படையில்  PICK  UP AGENT , MARKETING  பகுதி,  COLLECTION , PASTING, PINNING  என்ற  BPC வகைப் பணிகளை, அதுவும் கூட , எந்தவித உத்திரவும் இல்லாமல்  வாய்மொழியாக  பணியளிக்க  நிர்வாகத்தினர் அழைத்தனர். 


இது  ஏனென்றால்  , SPEED  மற்றும்  BUSINESS  PARCEL  PICK UPக்கு  ஆகும் செலவு மட்டுமே  ரூ. 86000/- வரும் என்று  SENIOR MANAGER, MMS தெரிவித்ததாலும், வேறு  எதுவும் செய்ய இயலாதென்று  அவர்  கை விரித்ததாலும், 10 நாட்களாக  வணிகப் பணிகள் முடங்கியதாலுமே இந்த முடிவு. மேலும் இவர்கள்  PICK  UP மட்டுமே  செய்வார்கள். BOOKING , DESPATCH  க்கு மீண்டும் வேறு  ஆள் தேடவேண்டும். அதற்கான  ஒரு மாத செலவு என்பது   மேலும்  கூடுதலாகும்.                                                                                


அதுவும்  இரண்டு VAN  மட்டுமே  DIVERT  செய்ய முடியும் என்றும் , அதற்கு இரண்டு OUTSOURCED  DRIVER  ( மீண்டும்  புதிய  CASUAL LABOURER) தனியே  அமர்த்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர்  தெரிவித்ததே காரணம் . ஆனால் ஏற்கனவே இருக்கும் CASUAL ஊழியர்களுக்கு மாதம் ரூ.50000/- கூட செலவு செய்யவில்லை  நிர்வாகம். 

                                              
ஆக நிர்வாகத்தின் வீண்  பிடிவாதத்தால்  கடந்த 10 நாட்களில் ஆயிரக் கணக்கான SPEED மற்றும் BUSINESS  PARCEL  சேவை பாதித்தது மட்டுமல்லாமல், தபால்   காரர்களை  COMBINED DUTY போட்டதால் ஆயிரக்கணக்கில்  தபால்  டெலிவரி சேவை  பாதிப்பும் உள்ளாகியுள்ளது. இந்த நிலை  அண்ணா சாலையில் மட்டு மல்ல சென்னை GPO விலும்தான். கிட்டத்தட்ட இதே நிலைதான்  சென்னை FGN POST, வடசென்னைமத்திய சென்னைதென் சென்னை  மற்றும் தாம்பரம் கோட்டங்களிலும்.  
  
எனவே  இது குறித்து முடிவெடுக்க  NFPE மற்றும்  FNPO தமிழ் மாநில JCA கூட்டம் 2.2.2016 அன்று  சென்னை பூங்கா நகர்  தலைமை அஞ்சலகத்தில் கூட்டப்பட்டது. இதில்  NFPE மற்றும் FNPO  சங்கங் களின்  பெரும்பகுதி மாநிலச் செயலர்கள்மாநில நிர்வாகிகள்சென்னை பெருநகர  கோட்ட/ கிளைச் செயலர்கள் கலந்து கொண்ட னர். இதில்  மேலே கண்ட தபால்காரர் /MTS  மற்றும்  CASUAL  ஊழியர்கள் பிரச்சினை மட்டுமல்லாமல்இதர  பகுதிப் பிரச்சினைகளும் பேசப்பட்டன. 

இறுதியில் மேலே  கண்ட இரண்டு பிரச்சினைகளுடன்தமிழகத்தில் ஊழியர்களை பாதிப்புக்குள்ளாக்கும்  அஞ்சல், RMS பகுதிகளின் மிக முக்கிய (HARASSMENT OF STAFF IN THE NAME OF TARGET உள்ளிட்ட) பிரச்சினைகளை  உள்ளடக்கி  தமிழகம்  தழுவிய  அளவில்   JCA   சார்பில்
மூன்று  கட்ட போராட்டத்தை  நடத்துவதென்று  முடிவெடுக்கப் பட்டது.  

அனைத்து சங்கங்களையும் கலந்துகொண்டு  இதற்கான சுற்றறிக்கை எதிர் வரும்  08.2.2016  க்குள் தயார் செய்து  அனுப்புவது என்றும் , 

மூன்றாவது வாரத்தில் தமிழகத்தின் அனைத்து  கோட்டங்களிலும்  JCA சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி  முதற் கட்டம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது - கோரிக்கை மனு அளிப்பது எனவும் , 

பிரச்சினை தீர்க்கப்படவில்லை எனில் ,  நான்காவது  வாரத்தில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்வது எனவும்,  அதற்குப் பிறகும் நிர்வாகம்பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சினைகளை  தீர்க்கவில்லை எனில்

மூன்றாவது  கட்டம்  தமிழகம் தழுவிய  அளவில்  முழு  வேலைநிறுத்தம் அறிவிப்பது என்றும், இதற்கான  தேதி   மற்றும்  கணக்கீடு  இரண்டாவது கட்ட போராட்டத்தின்போது JCAவின் தலைவர்களால் அறிவிக்கப்படும் என்றும்  முடிவெடுக்கப்பட்டது.

கேட்டுப் பார்ப்போம் !  பேசிப் பார்ப்போம் !
கோரிக்கை  மனு  அளித்துப் பார்ப்போம் !
ஆர்ப்பாட்டம்  நடத்திப் பார்ப்போம் !
உண்ணா நோன்பிருப்போம்!

இதன் பிறகும்  கேளாச் செவியினராய்  இருப்பார்களேயானால்
வேலை  வேலை  நிறுத்தம்  ஒன்றே  நம்  இறுதி  ஆயுதம் !
ஒன்று பட்ட  போராட்டம் ஒன்றே  நம்  துயரோட்டும் !

ஓங்கட்டும் தொழிலாளர்  ஒற்றுமை !
ஒடியட்டும் அடிமை  விலங்கு
பிறக்கட்டும் சுதந்திர கீதம் !

கூட்டத்தில் எடுக்கப் பட்ட புகைப்படங்களில்
சில உங்களின் பார்வைக்கு .



No comments:

Post a Comment