மாநில கலந்துரையாடல் கூட்டம் திருவரங்கத்தில் (திருச்சி)
Rtd Member (P) திரு. கம்லேஷ் சந்திரா தலைமையில் அமைக்கப்பட்ட GDS ஊழியர்களுக்கான அலவன்ஸ் குழு (GDS க்கு ஏது ஊதியம் ) அனைத்து சம்மேளனங்களுக்கும் இக் கடிதத்தில் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளுக்கு தங்களது விளக்க அறிக்கையை அளித்திடுமாறு அறிவிப்பு கொடுத்துள்ளது. சம்மேளனங்களது அறிக்கை கிடைத்ததும் அதன் மீது விவாதம் நடத்திட அழைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடிதம் கீழே
இதனைமுன்னிட்டு மூத்த முன்னணி தோழர்கள் M.கிருஷ்ணன், தோழர் KVS சம்மேளன பொதுச்செயலாளர் தோழர் R.N. பராசர், சம்மேளன அகிலஇந்திய நிர்வாகிகள், GDS பொதுச்செயலாளர்P. பாண்டுரங்கராவ், மாநில அஞ்சல் 3, அஞ்சல் 4, RMS 3 & 4, Admin, Audit & Accounts, SBCO, Conti & C La அகில இந்திய, மாநில நிர்வாகிகள் கலந்துகொள்ளும் GDS மாநில கலந்துரையாடல் கூட்டம் பிப்ரவரி 3 வது வாரத்தில் திருவரங்கத்தில் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோட்ட , கிளைச் செயலாளர்களுடன் ஊழியர்கள் கலந்துகொண்டு தங்களுடைய ஆலோசனையை தெரிவித்திடுமாறு கேட்டுக்கொள்கிறது.
மேலும் வரும் மார்ச் மாதத்திற்குள் உறுப்பினர் சரிபார்ப்பு நடக்கயிருக்கிறது , தோழர்கள் நமது NFPE சம்மேளனத்தின் உறுப்புச் சங்கமான GDS NFPE அகில இந்திய அளவிலும் தமிழகத்திலும் முதன்மை சங்கமாக அமைந்திட தோழர்கள் அனைவரும் பெறும் முயற்சி எடுத்திடுமாறு மாநிலச் சங்கம் கேட்டுக்கொள்கிறது. அதற்கு மாநிலச் சங்கம் மட்டுமல்ல NFPE ன் உறுப்புச் சங்கங்களும் உறுதுணையாக உங்களுடன் இருக்கும். தோழர்களே இக்கூட்டத்தில் தவறாமல் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை பதிவு செய்திடுமாறு கேட்டுக்கொள்கிறது.

No comments:
Post a Comment