Tuesday 9 April 2019

தோழர்களே வணக்கம்!
இன்று 10.04.2019 மற்றும் 12.04.2019 இரண்டு நாட்களில் தமிழகத்தில் BO CSI செய்யப்படுகிறது. அதற்கான பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. 
இலாக்கா இயக்குனர் அலுவலகம் முதல் கோட்ட நிர்வாகம் வரை GDS ஊழியர் நிலையை புரியாமல் அவர்களுக்கு போதுமான வசதிகள் செய்து கொடுக்காமல் இணையதள வசதி செய்து தராமல் ஏற்கனவே செய்யும் வேலையுடன் Darpan ல் வேலை செய்யச்சொல்லி எந்த உத்திரவாதமும் இல்லாமல் தினம் தினம் தனது சொந்த பணத்தை இழக்கும் சூழ்நிலையில் வேலைசெய்யும் ஊழியர்களுக்கு நாம் எந்த வகையில் GDS ஊழியர்களுக்கு உதவிட முடியும் என அரசும், நிர்வாகமும்  நினைத்திட வேண்டும் என .ஊழியர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
ஊழியர்களே எச்சரிக்கை தேவை !!
1. அனைத்தும் எச்சரிக்கையாக கவனமுடன் கையாள வேண்டும் , தவறினால் இழப்பு நமக்குத்தான்.
2. வெளிநபர்களை கொண்டு Darpan ல் வேலை செய்ய அனுமதிக்க வேண்டாம்.
3. அவசரப்பட்டு செயல்படக் கூடாது. அப்படி செயல்பட்டால் நட்டம் மட்டுமல்ல அதிகாரிகளிடம் பதில் சொல்லவேண்டிவரும், அதுமட்டுமில்லாது அந்த தவறை சரிசெய்ய மேலே தெரிவித்து பதில் வரும்வரை மன உளைச்சலுக்கு ஆட்பட வேண்டி வரும்.
கவனிக்க வேண்டியவை !!
1 கணக்கு எண் சரியாக உள்ளதா எனவும் அந்த எண்ணுள்ள நபரின் பெயர்  சரிதானா என பார்த்துக்கொள்ள வேண்டும்.
2. பணம் எடுக்க அல்லது போட சரியான தொகை இடப்பட்டுள்ளதா  என இறுதியாக முடிவு செய்து பின் அடுத்து செல்ல வேண்டும்.
3. எக்காரணம் கொண்டும் ஒரு முறை முயற்சி செய்து கடைசி நிலையில் சரி என முடிவு செய்த பின் submit கொடுக்கவும் , அது முழுமை அடையாமல் சுத்திக்கொண்டு திரும்பிவிட்டால் உடனே மீண்டும் முயற்சி செய்யாமல் SO வை தொடர்புகொண்டு அந்த கணக்கின் நிலையை அறிந்து பின் தொடரவும் .
 எச்சரிக்கையாக தினமும் கையாளவும் , இல்லையேல் நமது பணம் போய்விடும்  நமக்கு திரும்ப எப்போது வரும் என காத்திருக்க வேண்டிய நிலைதான் ஏற்படும்.
4 எந்த தவறு ஏற்பட்டாலும் உடன் ERROR புத்தகத்தில் எழுதிட வேண்டும், அதை SO மூலமாக அல்லது மேலதிகாரி இடம் தகவல் கொடுத்து அதற்கு பதில் பெறவேண்டும் , அதை தொடர்ந்து விசாரித்து முடிவு தெரியும் வரை விசாரித்து அதே ERROR ல் குறிப்பு எழுதிட வேண்டும். இது தொடர்பான மேலும் விளக்கம் தேவைப்பட்டால் மாநில சங்கத்தை  தொடரவும்.

அடுத்த பதிவு இவைகள் தொடர்பான கடிதங்கள் கொடுத்து மாநில நிர்வாகத்துடன் பேசிய தகவல் பதிவிடப்படுகிறது 


No comments:

Post a Comment