Monday 7 December 2015


டார்ச்சர்- டார்கெட்  மண்டல அலுவகம் செல்லும் GDS



மேற்கு மண்டலத்து குட்டி ராஜாவின் குட்டி (நேற்றைய  நிலை !!!) முதல் மண்டல மன்னர் வரை 2015- 2016 ன்  RPLI பிரிமிய இலக்கு 120 கோடியாம், அதில் அதாவது கடந்த 30.11.2015 கடிதப்படி 49.29 கோடிதான் ஈட்டப்பட்டுள்ளதாக  கூறிவருகிறார்கள். இலக்கு எட்டப்படுவதில் தாமதம் ஏற்பட்டால் மண்டலத்துக்கு அழைக்கப்பட்டு அவர்களுக்கு அறிவுரை வழங்கப்படுமாம். 

இருக்கட்டும்   

1996 இல் துவங்கப்பட்ட RPLI ஆனது  சுமார் 20 ஆண்டுகாலம் அதே கிராமத்தில் சுற்றி, சுற்றி வரும் நமது தோழர்கள், ஆண்டுக்காண்டு RPLI கணக்குகள் நமது தோழர்கள் பிடித்து கொடுக்காமல் ராஜாக்கள், வந்து வீடு வீடாக சென்று இலக்கை எட்டியிருப்பர்கள்போலும்!!!! 

     அதிகாரிகள் மாறி மாறி வருவார்கள் ஆனால் நாமும், கிராம மக்களும் மாறிட வாய்ப்பு குறைவுதானே?

கிராமம் என்ன கோலார் தங்க சுரங்கமா? அல்லது நெய்வேலி நிலக்கரி சுரங்கமா? அங்குகூட நிலை சரி இல்லையே. இதை அந்த மன்னர்கள் அறிய வாய்ப்பு குறைவுதானே!!!

 அவர்கள் அனைவரும் மெத்தப்படித்தவர்கள்!!!!!

மீண்டும் என்ன மன்னர் ஆட்சி வந்துவிட்டதோ???

ஆணைகள் பேனாமுனையினால்  எழுதுவது அல்ல, அல்ல, கணினியில் வெளிவருவது போல் கிராம மக்களிடம் தொகையை வெளிக்கொனர சாத்தியம் உண்டா அல்லது நாம் மட்டும் தான் INSURANCE வைத்துள்ளோமா, அதற்காக தனியே ஏற்படுத்தப்பட்டுள்ள துறை வேலையில்லா பட்டதாரிகள் கையில் தாண்டவமாடுகிறது. இதில் நாம் எம்மாத்திரம். 

நமது  RPLI தொடர்பான போக்குவரத்தே தனி!! வெளியில் சொன்னால் வெட்கம்!! அத்தனையைவும் மறைத்து மக்களிடம் வசைப்பாட்டு வாங்கி பலவேலைகளை செய்வும் GDS  ஊழியன் இலாக்கா ஊழியன் இல்லை, அவர்களது கோரிக்கையை 7 வது ஊதியக்குலுவில் இணைத்து பரிசீலிக்க மறுக்கும் மன்னர்கள் pension இல்லாமல் வீட்டிற்கு செல்வார்களா? 

 65 வயதிற்கு பிறகு அந்த GDS ஊழியனின் நிலை தெரியுமா?  செய்கின்ற வேலைக்கு அலவன்ஸ் தரும்(ஊதியம் அல்ல) நீங்கள், நாங்கள் வேலை செய்தால் தான் ஊதியம் என்ற நிலையில், GDS  ஊழியர்களை வீட்டிற்கு அனுப்புங்கள், அப்போது தான் தெரியும் துணை கோட்டம், கோட்டம், ஏன்  மண்டலங்கள் (வடிவேல் கூறியபடி) காணாமல் போய்விட்டாதாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும் நிலைதான் வரும்........... 

No comments:

Post a Comment