Friday 13 January 2017

    அன்புத் தோழர்களே GDS ஊழியர்களின் ஊதியக்குழு அறிக்கை தேர்தல் ஆணையத்தில் அனுமதிபெற்று வெளியிடலாம் என நமது இலாக்கா அமைச்சர் கூறியதாக இலாக்கா செயலர் இன்று மாலை நமது NFPE சம்மேளன பொதுச் செயலர் தோழர் R.N.பராசர் அவர்களிடம்  தகவலை தெரிவித்து   வரும் 16 ம் தேதி தேர்தல் அலுவலகத்தில் அனுமதி பெற்று வெளியிடப்படும் என கூறியதாக நமக்கு தகவல் கொடுத்து அஞ்சல் 3 அகில இந்திய வலைதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. அதே தகவலை நமது அகில இந்திய GDS வலைத்தளத்திலும் வெளியிடப்பட்டது.
      ஆகவே வரும் திங்கள் அல்லது செவ்வாய் கிழமையில் GDS ஊதியக்குழு அறிக்கை வெளிவரும் என எதிர் பார்க்கப்படுகிறது. அதன் பின் அதில் உள்ள தகவல்கள் நமது சம்மேளனத்தால் பரிசீலிக்கப்பட்டு நாம் கேட்ட சமவேலைக்கு சம ஊதியம் மற்றும் இலாக்கா ஊழியர்களுக்கு இணையான அனைத்து சலுகைகளும் வழங்கப்பட்டிருத்தால் ஏற்றுக்கொள்வோம் இல்லை முரண்பாடுகள் இருப்பின் இலாக்கா முதல்வருக்கு எடுத்துச் செல்லப்பட்டு  அம் முரண்பாடுகளுக்கு தீர்வு பெற்று ஆணை பெறுவோம்.
     நமது தொழிற்சங்கம்  அறிவித்த இயக்கம் வரும் 18.01.2017 முதல் நடைபெற உள்ள நமது சம்மேளன  அனைத்து பொதுச்செயலாளர்கள் தொடர் உண்ணா விரத போராட்டத்திற்கு அறிவிப்புக்கு பதில் அளிக்கும்படி இந்த தகவல் இலாக்காவினால் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை அனைத்து GDS ஊழியர்களும் உணர்வார்கள், இதில் எந்த ஊழியர்களுக்கும் மாற்று கருத்து இருக்க வாய்ப்பு இல்லை.
       ஆகவே நமது NFPE சம்மேளத்தின் மேல் நம்பிக்கை வைப்போம்.

GDS COMMITTEE REPORT - NEWS

MINISTER GRANTED PERMISSION TO PUBLISH THE GDS COMMITTEE REPORT WITH THE CONDITION THAT THE ELECTION COMMISSION'S APPROVAL SHOULD BE OBTAINED BEFORE PUBLISHING THE REPORT.

Today Directorate has informed the Secretary General, NFPE that Hon'ble Minister of Communications has granted permission to publish the GDS Committee Report with a condition that Election Commission's approval should be obtained before publishing the Report.
Directorate has also informed that they will meet the Election commission on 16th January (Monday) and submit the letter seeking approval for publishing the GDS Committee Report.
          R.N.Parashar                                                                                   P.Pandurangarao
    Secretary General                                                                               General Secretary
             NFPE                                                                                               AIPEU - GDS

No comments:

Post a Comment