Tuesday, 20 September 2016

போனஸ் நிலுவை தொகை தொடர்பாக

போனஸ் நிலுவை தொகை  தொடர்பாக அகில இந்திய சங்கமும், நமது தமிழ் மாநில சங்கமும் இணைந்து முயற்சி மேற்கொண்டு வருவதை நீங்கள் அறிவீர்கள். நமக்கு  ஏற்கனவே  3500 போனஸ் 2009 முதல் பெருவதில் உள்ள காலதாமதம் தற்போதும் ஏற்பட்டுள்ளது. ஆனால் நமது சம்மேளனம் தொடர் முயற்சிசெய்து வருவதால் விரைவில் கிடைத்திடும் இதில் எந்த ஐயமும் கொள்ளவேண்டாம். இது தொடர்பாக டைரக்டரேட்டில் தொடர்ந்து வலியுறுத்தி கூறிவருவதால் சிறிது தாமதம் ஆனாலும் நிச்சயம் கிடைத்திடும். 

20.09.2016 நேற்றைய தினம் AIPAEA அகில இந்திய மாநாட்டிற்கு சென்னைக்கு வருகை தந்த நமது அகில இந்திய சம்மேளன தலைவர்கள் M .கிருஷ்ணன்,R.N.பராசர் மற்றும்  K.V.S உள்ளிட்ட அனைவரிடமும், அஞ்சல் 3 அ இ தலைவர் மற்றும் மாநிலச்  செயலர் தோழர் J.R , NFPE GDS  மாநில செயலர் தோழர் R. தனராஜ் , குடந்தை முன்னாள் GDS செயலர் தோழர் B. தம்பிராஜ் ஆகியோர்  சந்தித்து வலியுறுத்தி வந்துள்ளனர் . விரைவில் FINANCE MINISTRY-ல் நமக்கு சாதகமாக ஆர்டர்  வர எல்லாவித முயற்சிகளையும் எடுப்பதாக தலைவர்கள் உறுதியளித்துள்ளார்கள்.



No comments:

Post a Comment