Friday, 30 September 2016

அன்புத் தோழர்களே! தோழியர்களே!!
வணக்கம். நமது GDS ஊழியர்களின் 2014-15 Bonus உயர்த்தப்பட்ட தொகை மறுக்கப்பட்டதை வலியுறுத்தியும், Casual Labour ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட ஆணை படி பணப்பயன்கள் மறுக்கப்பட்டு வரும் தமிழகத்தில் COC சார்பில் 2கட்ட போராட்டம் அறிவிக்கப்பட்டு கடந்த 29.09.2016 கோட்ட, கிளை மட்டங்களில் கருப்பு சின்னம் அணிந்து சிறப்பாக மாநிலம் முழுவதும் நடைபெற்றுள்ளது, இதில் கலந்துகொண்ட அஞ்சல் 3 முதல் CL வரை அனைத்து பொறுப்பாளர்களுக்கும், தோழர் தோழியர்களுக்கும் GDS மாநிலச்சங்கம் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.

 அகில இந்திய PJCA அறிவித்த 4 கட்ட போராட்டத்தின் விளைவாகவும் போனஸ் கோரிக்கை கோப்பு நமது ஊதியக்குழுவில் பரிசீலிக்கப்பட்டு ரூ 7000/- உயர் சீலிங் வழங்கலாம் என பரிந்துரைக்கப்பட்டு அஞ்சல் இலாக்காவிற்கு அனுப்பப்பட்டதாக நமது NFPE சம்மேளன மா பொதுச்செயலர் R.N.பராசர் அவர்களிடம் ஊதியக்குழு தலைவர் தெரிவித்ததாக கூறினார். 

ஆகவே, நமது COC ன் 2 ம் கட்ட போராட்டமான CPMG அலுவலக வாயிலில் வரும் 05.10.2016 காலை 10 மணி முதல் நடைபெறும் தர்ணா போராட்டத்தில் அனைத்து அஞ்சல் 3, அஞ்சல் 4, RMS 3, RMS 4, Admin, Accts SBCO,GDS, CCL பொறுப்பாளர்கள் மற்றும் தோழர் தோழியர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு GDS மாநிலச்சங்கம் கேட்டுக்கொள்கிறது

No comments:

Post a Comment