செய்திகள் சில
GDS தோழர்களுக்கு போனஸ் சீலிங் ரூ 3500/-இல் இருந்து ரூ 7000/- ஆக கொடுப்பதில் அரசுக்கு மனம் இருத்தலும் நமது இலாக்கா நிர்வாகத்திற்கு மனம் இல்லை போலும், இலாக்கா உத்தரவில்- 7.10.2015 ல் உள்ள பாரா 2 இல் உள்ள 3500 என்பது 7000 ஆயிரம் என மாற்றப்படுகிறது என்று வெளியிட்டுள்ளது. பாரா 3 என்பது தான் GDS ஊழியர்களுக்கு கடந்த 7.10.2015 போனஸ் ஆடரில் உள்ளது.அதனால் தான் இலாக்கா பாரா 2 என குறித்து தற்போது ஆணை வழங்கியுள்ளது இது தனது உழைப்பை தியாகம் செய்யும் GDS ஊழியர்களுக்கு செய்யும் துரோகம் இல்லையா ? இலாக்கா, இலாக்கா ஊழியர்களுக்கும் GDS ஊழியர்களுக்கும் முரண்பாடுகளை உருவாக்குவதற்காக திட்டமிட்டு செயல்பட்டுள்ளது.
இந்த ஆணையை மாற்றுவதற்கு மாநிலச்சங்கம் ,அகிலஇந்திய சங்கம் மற்றும் NFPE சம்மேளனம் இலாக்காவை கேட்டுள்ளது . விரைவில் GDS ஊழியர்களுக்கு ஆணை பெற்றுத்தரப்படும்
No comments:
Post a Comment