ஊழியர்களே வணக்கம் !
நம்முடைய 12 வது நாள் வேலை நிறுத்தம் தொடர்கிறது .
தோழர்களே !
நிர்வாகம் இதுநாள்வரை நம்மை சுரண்டி தன்னை வளர்த்துக்கொண்டு ரூ .6000/- கோடி நட்டம் என கூறி வந்துள்ளது என்பது அனைவரும் அறிந்தது , அதையே கோட்ட நிர்வாகம் ஆண்டுதோறும் கூறி நம்மை சுரண்டி பல லட்சம் RPLI பாலிசிகள் பிடிப்பது பல்லாயிரம் கணக்குகள் துவங்குவது உள்ளிட்ட பல வேலைகளை ஆண்டுதோறும் செய்து இலாக்கா நட்டத்தை சரிகட்டிவிடலாம் என சொல்லி வந்த நிலையில், தற்போது இலாக்கா செயலர் DG 2017-2018 ல் ரூ .12413.61 கோடி பற்றாக்குறை ( நட்டம் ) என கூறுகிறார் .
தோழர்களே சித்திக்கவேண்டிய நேரம் .
GDS ஊழியர்களுக்கு வேலைக்கு ஏற்ற ஊதியம் கொடுத்தாயா ?
வேலை குறைவு என்று 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியம் மாற்றம் செய்த போது அவர்களது ஊதியம் குறையாமல் நிர்வாகம் கொடுத்ததா ?
நமக்கு வீட்டு வாடகை கொடுத்ததா ?
அலுவலக வாடகை கொடுத்ததா ?
அலுவலக மின்சார கட்டணம் கொடுத்ததா ?
GDS ஊழியர் மருத்துவ செலவை நிர்வாகம் கொடுத்ததா ?
சட்டபூர்வ பணிக்கொடை கொடுத்ததா ?
சட்டபூர்வ சேமநல தொகை கொடுத்ததா ?
வீடுகட்ட கடன் கொடுத்ததா ?
இருசக்கர வாகனம் வாங்க கடன் வழங்கியதா ?
இல்லை நமக்கு பென்ஷன் வழங்கியதா ?
நிர்வாகம் நட்டம் என்றால் எப்படி ஏற்பது . அதற்கு GDS ஊழியர்கள் பொறுப்பில்லை இதுவே உண்மையும் நிஜமும்.
ஆகவே ஊழியர்களே இலாக்கா நட்டத்திற்கும் நமக்கும் சம்மந்தம் இல்லை, அதனால் தான் கேட்கிறோம் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கிடும் ஊதிய மாற்றத்தை உடனே வழங்க போராடிவருகிறோம். 12 வது நாளாக வேலைநிறுத்தம் செய்கிறோம் , நாட்கள் கணக்கில்லை கோரிக்கை வெல்வதே நமது இலக்கு ,
நாடுமுழுவதும் மிகவும் சிறப்பாக கொஞ்சமும் தளராமல் வேலைநிறுத்தம் 92 சதவீதத்திற்கு குறையாமல் ஊழியர்கள் முழு வீச்சியுடன் கலந்துகொண்டு நமது ஒற்றுமையை நிலைநாட்டியுள்ளனர் .
அதுபோல தமிழகத்திலும் தொடர்ந்து அனைத்து கோட்டங்களிலும் பல்வேறு போராட்டங்களை செய்து ஊழியர்கள் தனது ஒற்றுமையை நிலைநாட்டி வருகிறார்கள் . அனைவருக்கும் அகில இந்திய சங்கத்தின் சார்பாகவும் மாநிலசங்கத்தின் சார்பாகவும் வீர வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
அனைத்து ஊழியர்களும் தொடர்ந்து போராட்டம் முழு வீச்சியில் மேலும் மேலும் அதிகரிக்க வேண்டும் என மாநிலச்சங்கம் கேட்டுக்கொள்கிறது .
போராட்ட வாழ்த்துக்களுடன் R .தனராஜ் மாநிலச்செயலர் தமிழ் மாநிலம்.