GDS (NFPE) சங்க பொதுச்செயலாளர் தோழர் P. பாண்டுரங்கராவ் அவர்கள், தமிழக பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கும் மற்ற ஊழியர்களுக்கும் தனது செய்தியாக வேண்டுகோள்விடுத்துள்ளார்.
அன்புத் தோழர்களே!
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் வழக்கம்போல் பெய்யவேண்டிய மழை வழக்கத்திற்கு மாறாக மிகக் கடுமையாக பெய்து அசாதாரண நிலை ஏற்பட்டுயிருக்கிறது, மேலும் கடலோர மாவட்டங்களிலும் இதேநிலை ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்து மிக மனவேதனை அடைகிறேன்.
நிச்சயமாக இந்த இயற்கை இடர்பாடுகளில் இருந்து மீண்டுவருவீர்கள் ஆனால் சில நாட்கள் பிடிக்கும், மனஉறுதி குறையாமல் செயல்படுமாறு வேண்டுகிறேன்,இந்த சூழ்நிலையில் சம்மேளனம், மாநிலச் சங்கம் மற்றும் GDS (NFPE) சங்க பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் அனைவரும் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு உறுதுணையாக நின்று முடிந்த அளவு உதவிடுமாறு அகில இந்திய GDS (NFPE) சங்கம் கேட்டுக்கொள்கிறது.
No comments:
Post a Comment